search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    1 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்; கலெக்டர் தகவல்
    X

    நாற்றங்கால் பண்ணையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    1 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்; கலெக்டர் தகவல்

    • 1 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும் என கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
    • நடவு செய்வது மட்டு மின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் யூனியன் தேவிபட்டினம் ஊராட்சி யில் வேளாண்மைத்துறை யின் மூலம் நாற்றங்கால் பண்ணை செயல்பட்டு வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    வேளாண்மை துறையின் மூலம் 6 ஹெக்டேர் பரப்பள வில் நாற்றங்கால் பண்ணை அமைத்து விவசாயிகளுக்கு தேவையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் தற்பொழுது நெட்டை மற்றும் குட்டை ரக தென்னை நாற்றுகள் வளர்ந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட விவசாயி களுக்கு மானிய திட்டத்தில் கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் தேவையான தென்னங் கன்றுகளை வாங்கி பயன் பெற வேண்டும்.

    தமிழ்நாடு பசுமை இயக்கம் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடவுசெய்து ''பசுமை ராமநாதபுரம்" உருவாக்க திட்டமிடப் பட்டுள்ளது. அதனடிப்படை யில் தற்போது வேளாண்மை துறையின் மூலம் நாற்றங் கால் பண்ணைகளில் மரக் கன்றுகள் வளர்க்கப்படு கின்றன.

    இதில் மகோகனி, வில்வம், கொடுக்காபுளி, செம்மரம், சீதா, வன்னி, வாதம், மஞ்சள் கொன்னடி என பல்வேறு மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது. இவ்வாறு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும், பள்ளிக்கல்வித்துறையின் மூலம் 10 லட்சம் கன்றுகளும், மகளிர் சுய உதவிக்குழு மூலம் 10 லட்சம் கன்றுகளும், வனத்துறையின் மூலம் 25 லட்சம் கன்றுகளும் என பல்வேறு துறைகள் மூலம் ஒருங்கிணைந்து நடப்பாண்டில் ஒரு கோடி மரக்கன்றுகள் மாவட்டத்தில் நடவு செய்யப்படுகின்றன.

    நடவு செய்வது மட்டு மின்றி 5 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி யாளர்கள் மூலம் பராமரித்தல், அதேபோல் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் பராமரித்தல் என திட்ட மிட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வ லர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு பசுமை ராமநாதபுரம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரசுவதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாக ராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) தனுஷ்கோடி உள்பட பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×