என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது.
- தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளைஞர்களும் பயன் பெறலாம்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அதே போல இந்த முகாமில் 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை முடித்த வேலைநாடுநர்கள், ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறலாம்.
இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வேலை நாடுநர்கள் தங்களின் சுய விவரங்களடங்கிய விண்ணப்பம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (31-ந் தேதி) காலை 10 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறும், இம்முகாம் மூலம் தனியார் நிறுவ னங்களில் வேலை வாய்ப்பு பெறுவதினால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது.
அரசுத் துறைகளில் கோரப்படும் பணியிடங்களுக்கு அரசு விதிமுறைகளின்படி பரிந்துரை செய்ய பரிசீ லிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்களுக்கு இலவசமாக தமிழக அரசால் தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் Tamil Nadu Private Job Portal www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள சேவை வழங்கப்படுகிறது.
இந்த இணையதளத்தில் பதிவு செய்து தனியார் துறை நிறுவனங்களும் வேலை தேடும் இளை ஞர்களும் பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமநாதபுரம் மாவட்ட மானிய விலையில் மின் மோட்டார் பெற ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயி களுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திற க்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் 900 பேருக்கும், பழங்குடியின விவசாயிகள் 100 பேருக்கும், மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.2ஆயிரமும் 7.5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ. 2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ. 27 ஆயிரத்து 500-ம் 10 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம்
ரூ. 3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ. 30, ஆயிரமும் 15 குதிரைத்திறன் மின் இணைப்புக்கட்டணம் ரூ. 4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். தகுதியில் லாத விண்ணப்பத்தாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.
கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொ கையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு ேகட்டுக்கொள்ளப் படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
- விழாவில் 855 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் செய்யதம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா செய்யது அம்மாள் அறக்கட்டளை சேர்மன் டாக்டர் பாபு அப்துல்லா தலைமையில் நடைபெற்றது.கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா முன்னிலையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ரவி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார்.
விழாவில் டாக்டர் செய்யதா அப்துல்லா,செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் 855 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
- எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
- அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
ராமநாதபுரம்
சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பையடுத்து அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றார்.
இதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட செய லாளர் எம்.ஏ. முனியசாமி வழிகாட்டு தலின்படி நகர் செயலாளர் என்.ஆர்.பால்பாண்டியன் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் சாமி நாதன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் ராமநாத புரம் அரண்மனை, புதிய பஸ் நிலையம், கேணிக்கரை உள்பட பல பகுதிகளில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதில் அண்ணா தொழிற்சங்க மாநில துணைச்செயலாளர் ரத்தினம், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வீரபாண்டியன், எஸ்.எஸ்.செல்வம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் செல்வராஜ், நகர் நிர்வாகிகள் கமலக் கண்ணன், காளீஸ்வரன், சசிகுமார், மகளிர் அணி செயலாளர் ஜெய்லானி சீனிக்கட்டி.
துணைச் செயலாளர் நாகஜோதி, நகர் செயலாளர் வாசுகி, பொருளாளர் மணிகண்டன், துணைச்செயலாளர் ஆரிபு ராஜா, டாஸ்மாக் தொழிற் சங்க நிர்வாகி ராபர்ட், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி சந்திரன், வன்னிய ராஜ், மாவட்ட பிரதிநிதி தனசேகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ராஜா, இணை செயலாளர் முத்துக் குமார் மற்றும் வார்டு செயலாளர்கள் சண்முகம், முருகன், அய்யனார், ராம கிருஷ்ணன், முத்து முருகன், செந்தில், பழனி, ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கமுதி முஷ்டகுறிச்சியில் பஸ் நிறுத்தம் கட்ட பூமிபூஜை நடந்தது.
- இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி-கீழ்குடி சாலையில் உள்ள முஷ்டகுறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் மெயின் ரோட்டுக்கு வந்து தான் மற்ற ஊர்களுக்கு செல்ல முடியும். இங்கு பஸ் நிறுத்தம் இல்லாததால், வெளியூர் செல்பவர்கள், வெயில் மற்றும் மழையில் நின்று சிரமப்படும் நிலை இருந்தது. இங்கு பஸ் நிறுத்தம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று தெற்கு மாவட்ட தி.மு.க. கவுன்சிலர் போஸ் சசிக்குமார் தனது மாவட்ட கவுன்சில் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட ஒப்புதல் அளி்ததார். இதையடுத்து பூமி பூஜை நடந்தது. இதில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிளி மற்றும் நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
- நுகர்வோர் பொருட்களின் தரம் அறிந்து வாங்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுரை வழங்கினார்.
- தவறுகள் இருந்தால் அதே இடத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜ சேகரன் தலைமை தாங்கி கூறியதாவது:-
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனை வருமே நுகர்வோர்தான். இத்தகைய நுகர்வோர் எந்த வகையிலும் அவர்கள் வாங்கும் பொருள்களினால் எவ்வகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டு விடக்கூடாது. அத னடிப்படையில் ஒவ்வொரு வரும் தங்களுக்கு தேவை யான பொருட்களை வாங் கும்போது பொருட்களின் தரம் குறித்த விவரம், அனுமதிக்கப்பட்ட காலம் ஆகியவற்றை சரிபார்த்து வாங்க வேண்டும்.
தவறுகள் இருந்தால் அதே இடத்தில் சம்பந்தப் பட்ட நிறுவனத்திடம் விளக்கம் கேட்க வேண்டும்.தவறுகளை சுட்டிக்காட்டா மல் இருந்தால் மேலும் மேலும் தவறுகள் செய்வார் கள். பொதுமக்களுக்கு ஏற்படும் குறைகளை கேட்டறிந்து உரிய நியாயம் கிடைக்கும் வகையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மூலம் நுகர்வோர் தெரிவிக்கும் புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சிறிய கடையானாலும் சரி பெரிய நிறுவனமானாலும் சரி, நுகர்வோருக்கு தவறுகள் ஏற்படும் வகையில் நடந்து கொண்டால் உடனடியாக புகார் தெரிவிக்கும் பட்சத் தல் அந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பான பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு மற்றும் பாராட்டு சான்றினை மாவட்ட வரு வாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆதிதிராவிட மாணவர்களுக்கு வருகிற 31-ந்தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.
- தங்களது ஆதார் கைபேசி எண்களை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத் தில் 2022-23ம் கல்வியாண் டில் கல்வி பயிலும் ஆதிதிரா விடர், மதம் மாறிய கிறித்தவ ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆதிதிரா விடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் உதவித் தொகையை பெறுவதற்கு மாணவர்கள் தங்களது ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கு எண்ணை இணைப் பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத் தில் கடந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற்றவர்க ளில் 5 ஆயிரத்து 662 மாண வர்களின் வங்கிக்கணக்கு எண்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள் ளது.
இது தொடர்பாக கடந்த 10 நாட்களாக பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2 ஆயி ரத்து 639 மாணவர்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கப்பட்டது.மீதமுள்ள 3 ஆயிரத்து 423 மாணவர்களுக்கு வருகிற 31-ந் தேதி வரை பள்ளிக ளில் நடைபெறும் சிறப்பு முகாம்களில் பங்கேற்று தங்களது ஆதார் எண்ணு டன் வங்கி கணக்கு எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
மேலும் மாணவர்கள் அருகில் உள்ள அஞ்சலகங் கள், கிராம அஞ்சல் ஊழி யர்களிடம் உள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் தங்களது ஆதார் கைபேசி எண்களை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்தனர்.
- நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் தமிழ்நாடு அனைத்து வகைமாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் எங்கள் சங்கத்தை சேர்ந்த 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி பல ஆண்டுகளாக மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வரை நடவடிக்கை எடுப்பதில் காலம் தாழ்த்தி வருகின்றனர். மாற்று திறனாளிகள் வறுமையில் வாடும் நிலையில் வீட்டு வாடகை கொடுக்க முடியாத நிலையில் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதல்வர் இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சங்கத்தின் ராமேசுவரம் கிளை தலைவர் குமார், செயலாளர் லட்சுமணன், ராபின்சன் தலைமையில் 15 மாற்றுத்திறனாளிகள் கலெக்டர் ஜானி டாம் வர்கீசிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
- செய்யது ஹமீதா கல்லூரியில் கற்றல் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
- பேராசிரியர் முகமது ஆசாத் பெயிக் பேராசிரியர் நஜ்முதீன் உள்பட பலர் செய்திருந்தனர்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரபிக் துறை சார்பாக அரபு மொழியின் தனித்தன்மை மற்றும் கற்றல் முறை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி அரபிக் துறை பேராசிரியர் செய்யது முஹம்மது இலியாஸ் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளிடையே அரபி கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் அரபிக் துறை தலைவர் முகைதீன் அப்துல் காதீர்,பேராசிரியர் முகமது ஆசாத் பெயிக் பேராசிரியர் நஜ்முதீன் உள்பட பலர் செய்திருந்தனர்.
- அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
- ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளியின் 85-வது ஆண்டு விழா வட்டாரக் கல்வி அலுவலர் புல்லாணி தலைமையில் நடந்தது. யூனியன் சேர்மன் முகமது முக்தார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கார்த்திக், பேரூராட்சி சேர்மன் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மஹ்ஜபின் சல்மா, சமீமா பானு, கவுன்சிலர்கள் தாஸ், பெரியசாமி, ஐக்கிய ஜமாத் தலைவர் ஹிப்பத்துல்லா, இந்து பரிபாலன சபை தலைவர் ராஜசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆசிரியை சுபஸ்ரீ வரவேற்றார்.
தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம் ஆண்டறிக்கை வாசித்தார். மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பாடல், பட்டிமன்றம், கரகாட்டம், எண்ணும், எழுத்தும் உள்பட பல நிகழ்ச்சிகள் நடந்தன. பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியை புஷ்பா நன்றி கூறினார்.
- கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது .
- 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறும்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சத்திரிய நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பங்குனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவிலில் இருந்து நந்தவனத்துக்கு சென்று பிடிமண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நேற்று காலை மேளதாளங்களுடன் சென்று கொடிப்பட்டம் வாங்கி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அதன் பின்பு காலை 9 மணிக்கு மேல் முத்துமாரியம்மன் சிலை முன்புள்ள கொடிமரத்தில், கொடியேற்றப்பட்டது.
பின்பு மூலிகைகள், திரவியப்பொடி, பன்னீர், இளநீர் உட்பட பல்வேறு வகையான அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டிய பின்பு நேர்த்திகடன் செலுத்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புகட்டிக் கொண்டனர். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் காப்புகட்டி நேற்று முதல் விரதத்தை தொடங்கினர். இரவு கும்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. 14 நாட்கள் நடைபெறும் இந்த திரு விழாவில், தினந்தோறும் இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று, அம்மன் ரிஷபம், பூதம், யானை, அன்னப்பறவை, கேடயம், வெள்ளிக்குதிரை காமதேனு உள்பட பல்வேறு வாகனங்களில் நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
- பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- லைசென்ஸ் இல்லாமலோ, போதிய ஆவணங்கள் இல்லாமலோ சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. சுதிர்லால் உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் பேசிய காவல்துறை அதிகாரிகள், சமீப காலமாக இளைஞர்கள் அதிவேகமாக பைக் இயக்குவது, இரவு நேரங்களில் தேவையில்லாமல் சுற்றுவது, இரு சக்கரம் வாகனங்களை அதிக சத்தத்துடன் தெருக்களில் இயக்குவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும் லைெசன்ஸ் இல்லாமலோ, போதிய ஆவணங்கள் இல்லாமலோ சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இருசக்கரம் வாகனத்தை பறிமுதல் செய்தால் ஜமாத் பிரமுகர்களோ, மற்றவர்களோ அவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்றும் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதில் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் மாதவன்,முத்துக்குமார், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் முத்துச்செல்வம் மற்றும் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






