என் மலர்tooltip icon

    ராமநாதபுரம்

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் போட்டி தேர்வு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
    • பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின பிரிவினை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் 2023-ம் ஆண்டிற்கான தேர்வு நாட்காட்டி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    இதில், 11 ஆயிரம் காலி அரசு பணியிடங்கள் தேர்வாணையத்தால் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வில் ஆதிதிரா விடர், பழங்குடியின மாணவர்கள் பங்கேற்று தேர்ச்சி பெற தாட்கோ மூலமாக இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியில் சேர 18 முதல் 32 வயது வரை உள்ள 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதிக்கேற்ப ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.18 ஆயிரம்முதல் ரூ.22 ஆயிரம் வரை வழங்கப்படும். மேற்கண்ட தேர்வுக்கு ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் பயிற்சி பெற இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வருவாய் இழப்பை தடுக்க வரி வசூலில் தீவிரம் காட்டும் ஊராட்சி மன்ற தலைவர்கள்.
    • வரிவசூல் செய்வதன் மூலம் கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம். கமுதி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அபிராமம் பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிதி ஆதாரத்தை பெருக்க குடிநீர், தொழில்வரி, வீட்டு வரி உள்பட ஊராட்சி சம்பந்தமான அனைத்து வரிகளையும் இன்றுக்குள் (31-ந் தேதி) முழுமையாக முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள 436 ஊராட்சிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் ஊராட்சிகள் நிதி ஆதாரத்தை பெருக்க குடிநீர், தொழில்வரி, வீட்டு வரி, நூலக வரி, சொத்து வரி போன்றவற்றின் மூலம் நிதி தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடிகிறது.

    அதேபோல் கமுதி யூனியனில் உள்ள அச்சங்குளம், நத்தம். வங்காருபுரம், உடைய நாதபுரம், நகரத்தார் குறிச்சி, டி.புனவாசல், பாப்பணம் உள்பட 53 ஊராட்சிகளில் குடிநீர் கட்டணம், சொத்துவரி, தொழில்வரி, நூலக வரி போன்றவரிகள் வசூல் செய்யப்படுகிறது. மார்ச் இறுதிக்குள் (இன்றுக்குள்) முழுமையாக வரி வசூல் செய்யும் பணி நடந்துவருகிறது.

    இதற்காக ஊராட்சி செயலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் தினமும் கிராமங்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வரி வசூல் செய்து உடனடியாக ரசீது வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூறுகையில், ஊராட்சிகளில் வருவாய் இழப்பை சரி செய்ய வரி வசூல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 31-க்குள் முழுமை யாக வரி வசூல் செய்யும் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். வரிவசூல் செய்வதன் மூலம் கிராமங்களில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது. பல்வேறு வளர்ச்சி திட்டபணிகளை செய்வதற்கு மாநில நிதிக்குழு மூலம் கூடுதல் நிதி ஒதுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • ராமநாதபுரத்தில் 121 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கவரவிப்பது கடமையாகும் என்றார்.

    ராமநாதபுரம்

    விடுதலைப் போராட்ட வீரர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 263-வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) ராஜசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் நவாஸ்கனி எம்.பி. பேசுகையில், இந்திய தேசத்தின் விடுதலைக்காக மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி செய்த தியாகங்களை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அவரது பிறந்த நாளான மார்ச் 30-ந் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய தேசத்தின் விடுதலைக்காக பாடுபட்ட இத்தகைய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவு கூர்ந்து கவரவிப்பது கடமையாகும் என்றார்.

    தொடர்ந்து வருவாய்த்துறையின் மூலம் 1 பயனாளிக்கு பணி நியமன ஆணையும், 16 பேருக்கு ரூ.2.76 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு ரூ.1.83 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.51 ஆயிரத்து 675 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

    வேளாண்மைத் துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு ரூ.1.26 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும், மாவட்ட வழங்கல் துறையின் மூலம் 25 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும் வழங்கப்பட்டது.

    தோட்டக்கலைத் துறையின் மூலம் 4 பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையின் மூலம் 20 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு பொருட்களும், தொழிலாளர் நலத்துறையின் மூலம் 15 பயனாளிகளுக்கு நல வாரியம் உறுப்பினர் அட்டையும் என மொத்தம் 121 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்து 154 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார், நவாஸ்கனி எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

    இதில் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, நகர்மன்ற தலைவர் கார்மேகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவிதா கதிரேசன்,உதவி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரத்தில் பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை; மாமனார்-மாமியார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் வைத்தீஸ்வரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயனுக்கும் திருமணம் நடைபெற்றது. கார்த்திகேயன் அபுதாபியில் வேலைக்கு சென்ற நிலை யில் மனைவியை பெற்றோர் வீட்டில் இருக்குமாறு தெரி வித்துள்ளார்.

    இதனையடுத்து வைத்தீஸ்வரி தாய் வீட்டில் இருந்து வந்ததுள்ளார். மாமனார் தியாகராஜன், மாமியார் வளர்மதி ஆகி யோர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கேரளா சென்றுள்ளனர். இதன் பின்னர் தீபாவளிக்கு வந்துள்ளனர்.

    அப்போது வைத்தீஸ்வரி கணவர் வீட்டுக்கு வந்து தனக்கு தேவையான பொருட்களை எடுக்க சென்றுள்ளார். அதற்கு மாமனார்-மாமி யார் அனுமதிக்கவில்லை. அவரை வீட்டுக்குள் நுழைய விடாமல் தடுத்ததுடன் திருமணத்தின்போது ரூ.2 லட்சம் செலவு செய்துள்ளோம். அந்த பணத்தை வரதட்சணை யாக கொடுக்க வேண்டும். இல்லை என்றால் விவாக ரத்து செய்து விடுவோம் என மிரட்டி அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து வைத்தீஸ்வரி ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனை தொடர்ந்து அவர் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததின் அடிப்படை யில் அனைத்து மகளிர் போலீசார் மாமனார், மாமியார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

    • தொண்டி அருகே பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள சித்தூர் வாடி ஆர்.சி. தொடக்கப் பள்ளி ஆண்டு விழா வின்சென்ட் அன்பரசு தலைமையில் நடந்தது.

    தலைமை ஆசிரியர் சுசைராஜ் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். தாளாளர் கிளமெண்ட் ராசா, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுரேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர், அருட்தந்தையர்கள், அருட் சகோதரிகள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் வாழ்த்துரை வழங்கினர்.

    மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியை பைலோன் மேரி நன்றி கூறினார்.பெற்றோர்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

    • பரமக்குடி அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
    • விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    பரமக்குடி

    பரமக்குடி புதுநகரில் உள்ள அப்துல்கலாம் பப்ளிக் பள்ளியில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

    பள்ளியின் சேர்மன் முகைதீன் முசாபர் அலி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் காசநோய் துணை இயக்குநர் ஜீவானந்தம், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் கழக இணைச்செயலாளர் காமராஜ், பரமக்குடி சங்கர வித்யாலயா பள்ளி தாளாளர் சவுமிய நாராயணன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

    முதல்வர் ஜேம்ஸ் ஜெயராஜ் பேசினார். இதற்கான ஏற்பாடுகளை முதல்வர் மற்றும் நிர்வாக முதன்மை அலுவலர் ஜெயசுதா இணைந்து செய்திருந்தார்.

    துணை முதல்வர்கள் அனில், கவிதா மற்றும் கே.சி. பொறுப்பாசிரியை கனிமொழி மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தனர்.

    பல்வேறு கலை நிகழ்ச்சியுடன் பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • 200 ஆண்டு பழமையான நாணயங்களை திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவர்கள் கண்டெடுத்தனர்.
    • 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.



    மாணவர்கள் அய்யப்பன், பிரவீன்ராஜ்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் மாணவர்க ளுக்கு பழமையான காசுகள், பானை ஓடுகளை அடை யாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    மாணவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருள்கள், காசுகளை விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்து வருகின்றனர்.

    இதுபற்றி பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லி யல் ஆய்வாளருமான ராஜ குரு கூறியதாவது:-

    9-ம் வகுப்பு மாணவர் பிரவின்ராஜ், 6-ம் வகுப்பு மாணவர் அய்யப்பன் ஆகியோர் 4 ஆங்கிலேயர் கால வட்டவடிவ காசுகளை கீழவலசை, சேதுக்கரையில் கண்டெடுத்துள்ளனர். இதில் 3 செப்புக் காசுகள், மற்றொன்று வெண்க லத்தால் ஆனது.

    இது கி.பி.1833-ல் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தின் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனியின் முத்திரையும், மறுபுறம் தராசு படமும் உள்ளது. தராசின் மேலே ஆங்கிலத்தில் குவாட்டர் அணா எனவும், அதன் கீழே அரபி வாசகமும் உள்ளது.

    மற்றொன்று கி.பி.1887-ம் ஆண்டு விக்டோரியா மகாராணி காலத்தில் வெளியிடப்பட்டது. ¼ அணா மதிப்புள்ளது. ஒரு கால் அணா இந்தியா 1887 என ஆங்கிலத்தில் 5 வரிகளில் எழுதப்பட்டு உள்ளது. நாணயத்தின் பின்புறம் விக்டோரியா எம்பரஸ் என எழுதப்பட்டு அவரின் மார்பளவு படமும் உள்ளது.

    மாணவர் அய்யப்பன் சேதுக்கரை கடற்கரையில் கண்டெடுத்த 2 நாணயங்களில், ஒன்று கி.பி.1835-ல் வெளி யிடப்பட்டதாகும். இதில் ஒருபுறம் கிழக்கிந்தியக் கம்பெனி என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு அதன் நடுவில் ½ அணா என்றும், மறுபுறம் கம்பெனி முத்திரையும் உள்ளது.

    மற்றொன்று 6-ம் ஜார்ஜ் மன்னர் காலத்தில் கி.பி.1941-ல் வெளியிடப் பட்டது. இது ¼ அணா மதிப்புள்ளது.

    திருப்புல்லாணி வரும் பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடும் வழக்கம் பழங்காலம் முதல் இருந்துள்ளது. நீராடிய பிறகு ஆடை, காசுகளை கடலில் விட்டுச் செல்கிறார்கள். இந்த நாணயங்கள் இவ்வாறு போடப்பட்டதாக இருக்கலாம். பிரவின்ராஜ் கண்டெடுத்தது மக்களின் சேமிப்பில் உள்ளது.

    திருப்புல்லாணி மாணவர்கள் தங்கள் பகுதிகளில் பாண்டியர், சோழர், டச்சுக்காரர் நாணயங்களை ஏற்கனவே கண்டெடுத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ரம்ஜான் நோன்பு திறக்க இளைஞர்கள் இலவசமாக உணவளிக்கின்றனர்.
    • இளைஞர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை ரத்த உறவுகள் அமைப்பு மற்றும் சதக்கத்துல் சுன்னா அறக்கட்டளை சார்பில் சஹர் நேர உணவு தயார் செய்ய முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள், ஆலிம்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், வெளியூரில் இருந்து தங்கி பணிபுரியும் ஊழியர்கள், அரசு மருத்து வமனையில் உள்நோயாளிகளுக்கு துணை இருப்ப வர்கள், செவிலியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் ரமலான் நோன்பு வைப்ப தற்கான சஹர் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து இந்த அமைப்பின் நிறுவனர் செய்யது அகமது கபீர் கூறியதாவது:-

    12 பேர் கொண்ட இளைஞர் குழு மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 600 முதல் 700 பேர் வரைக்கும் இலவச உணவு வழங்குகிறோம்.

    பெரும்பாலும் நேரில் வந்து உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மருத்துவ மனையில் இருப்பவர்கள், வீடுகளில் ஆண் உதவி இல்லாத தாய்மார்களுக்கு எங்கள் அமைப்பின் இளைஞர்கள் வீடு தேடி போய் உணவை வழங்கி வருகின்றனர்.

    இலவச உணவு வழங்கு வதில் நாளொன்றுக்கு ரூ, 25 ஆயிரம் முதல் ரூ. 28 ஆயிரம் வரை செலவாகிறது. எங்கள் அமைப்பில் உள்ள இளைஞர்கள் தங்களால் முடிந்த பொருளாதார உதவியை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லை.

    நல்லுள்ளம் கொண்ட ஈகையாளர்கள் தங்களால் முடிந்த உதவியை பணமாகவோ, உணவுக்கான பொருளாகவோ வழங்கி னால் ரமலான் முழுவதும் இலவச உணவு வழங்க உதவியாக இருக்கும் என்றார்.

    அமைப்பு நிர்வாகிகள் பாஹிம், ஹமீது, சாலிம், நுஸைர், ஜியாவுல், ஷஹாதத், பாக்கர், முஜீபு ரஹ்மான், காசீம், ஹம்தான், ஜெய்னுலாப்தீன் இவர்களுடன் கீழக்கரை ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களும் இணைந்து இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை உணவு வழங்கும் பணியை சேவை யாக செய்து வருகின்றனர்.

    தூய பொதுசேவைகளின் மூலம் சிறந்த எடுத்துக் காட்டாக வாழும் இளை ஞர்களை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்து வருகி ன்றனர்.

    • ராணுவத்தில் சேர ஆன்லைன் பதிவு தேதி நீட்டிக்கப்பட்டது.
    • விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    திருச்சி மண்டல ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலர் தீபக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-

    இந்திய ராணுவம் ஜீனியர் கமிஷன் அதிகாரிகள்/பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளது. முதல் கட்டத்தில் joinindianarmy.nic.in (இந்திய ராணுவத்தில் சேரவும்) இணையதளத்தில் பதிவு செய்து ஆன்லைனில் விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களும் பொது நுழைவுத்தேர்வுகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    2-ம் கட்டத்தில் பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் அந்தந்த ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகங்களால் தீர்மானிக்கப்பட்ட இடங்களில் ஆட்சேர்ப்பு பேரணிக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் உடல்தகுதி சோதனைகள் மற்றும் உடல் அளவீட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். இறுதியாக 3-ம் கட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் பேரணி நடைபெறும் இடத்தில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் ஆன்லைன் பதிவு 20.3.2023 வரை இருந்த நிலையில் தற்பொழுது 31.3.2023 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. புதிவு செய்யும் செயல்முறை முந்தையதைப்போலவே உள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டை அல்லது 10-ம் வகுப்பு சான்றிதழை பயன்படுத்தி பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் 4-வது வார்டில் அங்கன்வாடி மையத்தை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
    • ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2020-21 நிதியின் கீழ் யானைகல் வீதியில் அங்கன்வாடி மையம் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது.

    4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டியம்மாள் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

    இதையடுத்து நகராட்சி சேர்மன் ஆர்.கே.கார்மேகம், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம் ஆகியோரது முயற்சியால் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இதன் திறப்பு விழா நடந்தது.

    நகராட்சி சேர்மன் ஆர்.கே. கார்மேகம் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டி யம்மாள், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுரேந்திரன், உதவி பொறியாளர் செல்வகுமார், மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஜே.ஆர்.பி.மணிகண்டன் நன்றி கூறினார்.

    • பாம்பனில் வாளை மீன்கள் அதிக அளவில் பிடிபட்டது.
    • உள்ளூர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாளை மீன்களை வாங்கி சென்றனர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீன்பிடி தொழிலை நம்பி உள்ளனர். இலங்கை கடற்படை நடவடிக்கை காரணமாக ராமேசுவரம் பகுதி மீனவர்கள் முழுமையாக மீன்பிடி தொழிலில் ஈடுபட முடியாத சூழல் உள்ளது.

    இதற்கிடையில் பாம்பனில் 80-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 4 ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு சென்றனர். இவர்கள் மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடித்து விட்டு பாம்பன் திரும்பினார்கள்.

    இதில் பெரும்பாலான மீனவர்களுக்கு நல்ல மீன்பாடு கிடைத்தது. மீனவர்களின் வலைகளில் வௌ மீன், பாறை மீன், மா உழா உள்ளிட்ட பல்வேறு மீன்கள் சிக்கின. பல மீனவர்களின் வலைகளில் வாளை மீன்கள் அதிகமாக சிக்கி இருந்தன.

    இதனால் வாளை மீன் சீசன் தொடங்கி உள்ள தாகவும், இனி வரும் நாட்க ளில் வாளை மீன்கள் அதிக மாக கிடைக்கும். சீசன் தொடங்கி உள்ளதால் வருமானம் அதிகரிக்கும் என்று மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    வாளை மீன் கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விறபனையாகின. அவை களை வியாபாரிகள் வாங்கி கேரள மீன் மார்க்கெட்டு களுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உள்ளூர் பகுதி மக்களும் ஆர்வமுடன் வாளை மீன்களை வாங்கி சென்றனர்.

    • மண்டபம் அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் வேதாளை பகுதியில் இருந்து தொடா்ந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் ஆகியோா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் கடல் அட்டை கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து குப்பை என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை நடத்தியபோது சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத் தப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி தோப்பின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    ×