கடல் அட்டைகள் பறிமுதல்

மண்டபம் அருகே ரூ.10 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள்.
Published on

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் வேதாளை பகுதியில் இருந்து தொடா்ந்து இலங்கைக்கு தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் வனத்துறையினா் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினா் ஆகியோா் தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் கடல் அட்டை கடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் மண்டபம் அடுத்துள்ள வேதாளை கடற்கரை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து குப்பை என்பவருக்கு சொந்தமான தோப்பில் சோதனை நடத்தியபோது சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதப்படுத் தப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை கியூ பிரிவு போலீசார் கைப்பற்றி தோப்பின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com