என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு கூட்டம்
- பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
- லைசென்ஸ் இல்லாமலோ, போதிய ஆவணங்கள் இல்லாமலோ சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலையத்தில் டி.எஸ்.பி. சுதிர்லால் உத்தரவின்பேரில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களை அழைத்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் பேசிய காவல்துறை அதிகாரிகள், சமீப காலமாக இளைஞர்கள் அதிவேகமாக பைக் இயக்குவது, இரவு நேரங்களில் தேவையில்லாமல் சுற்றுவது, இரு சக்கரம் வாகனங்களை அதிக சத்தத்துடன் தெருக்களில் இயக்குவது போன்ற விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இவர்களால் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மேலும் லைெசன்ஸ் இல்லாமலோ, போதிய ஆவணங்கள் இல்லாமலோ சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர். இருசக்கரம் வாகனத்தை பறிமுதல் செய்தால் ஜமாத் பிரமுகர்களோ, மற்றவர்களோ அவர்களுக்கு பரிந்துரை செய்ய வேண்டாம் என்றும் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதில் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் மாதவன்,முத்துக்குமார், தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் முத்துச்செல்வம் மற்றும் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






