என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் திரையிடுவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர்களிடம் த.மு.மு.க. வலியுறுத்தியது.
- பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பனைக் குளம் த.மு.மு.க. சார்பில் துணை பொது செயலாளர் முகவை சலிமுல்லாகான், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் பாபு, மாவட்ட துணை செயலாளர் சுலை மான், நகர் தலைவர் முகமது அமீன், நகர் செயலாளர் முகமது தமீம், நகர் துணை செயலாளர் அக்பர் உள்ளிட்ட நிர்வாகிகள் ராமநாதபுரம் நகரில் உள்ள தியேட்டர்களின் உரிமையா ளர்களிடம் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியிடுவதை மறுபரி சீலனை செய்யக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சமீபத்தில் தமிழகத்தில் வெளியாகியுள்ள 'தி கேரளா ஸ்டோரி' , புர்கா, பர்கானா ஆகிய திரைப்படங் கள் தமிழகத்தில் ஒற்றுமை யாக வாழக்கூடிய இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மக்களி டையே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையிலும், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.
இல்லாத ஒன்றை உருவாக்கி இந்த திரைப் படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் பிரி வினையை ஏற்படுத்தும் வகையில் இந்த திரைப்படம் அமைந்துள்ளது. எனவே இந்த திரைப்படத்தை திரை யிடாமல் மதநல்லிணக்க ஒற்றுமைக்கு உதவிடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ம.தி.மு.க.சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
- அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
ராமநாதபுரம்
ம.தி.மு.க. 30-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி ராமநாதபுரம் நகர் பகுதியில் கொடியேற்று விழா மற்றும் ரத்ததான முகாம் முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக் தலைமையில் நடந்தது. அரசியல் ஆலோசனை குழு உறுப்பினரும், பரமக்குடி நகரசபை துணைத் தலைவருமான குணா, மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் கராத்தே பழனிச்சாமி முன்னிலை வகித்தனர்.
முன்னதாக புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் அரண்மனை, ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளில் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் ஏற்பாட்டிலும், கேணிக்கரை பகுதியில் நகர பொறுப்பாளர் சுப்பிரமணி ஏற்பாட்டிலும், பரமக்குடி நகர் பகுதியிலும் மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் கொடி ஏற்றி இனிப்பு வழங்கினார்.
திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் இளையராஜா முன்னிலையில் அரசு ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம் நடந்தது.
முகாமிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் நகர பொறுப்பாளர் ரத்தினகுமார் செய்திருந்தார்.
- ராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
- வருகிற 21-ந் தேதி சென்னையில் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் ராமநாதபுரம் பழைய பஸ் நிலையம் அருகே தனியார் விடுதியில் நடந்தது. இதில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவர் தியாகராஜன் கலந்துகொண்டார்.
அவர் கூறுகையில், வருகிற 21-ந் தேதி சென்னையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் ஐம்பெரும் விழா நடைபெற உள்ளது. அதில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 53 ஆயிரம் தொகுப்பு ஊதியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் காலமுறை ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தினர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி 53 ஆயிரம் ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதற்கான உத்தரவில் கையெழுத்தை போட்டு வாழ்வாதாரத்தை உருவாக்கினார்.
அவருக்கு கடலில் பேனா வைப்பதை ஆசிரியர் சமூகம் வரவேற்கிறது. அதை நினைவுபடுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் 53 ஆயிரம் மாணவர்களுக்கு பேனா வழங்கப்பட உள்ளது என்றார்.
- முளைக்கொட்டு உற்சவ விழா நடந்தது.
- ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள குஞ்சார் வலசையில் பிள்ளைக்காத்த காளியம்மன், கோட்டைமுனி கருப்பணசாமி கோவிலில் 2-ம் ஆண்டு முளைக் கொட்டு உற்சவ விழா தர்மகர்த்தா சரவணன் தலைமையில் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தினமும் இரவில் சமயராஜ், முனியாண்டி தலைமையில் ஒயிலாட்டம் நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, பூஜைகள் நடந்தன. இரவு இடையர் வலசை சக்தி வடிவேல் முருகன் கோவிலில் இருந்து அம்மன் கரகம் பிள்ளைக்காத்த காளியம்மன் கோவிலுக்கு வந்தடைந்தது. பக்தர்கள் அக்னிசட்டி, பால் குடம் எடுத்து வந்தனர். பொதுமக்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு எடுத்தும் வழிபாடு செய்தனர்.
கருப்பணசாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சியும், பொதுமக்களின் சார்பில் அன்னதானமும் நடந்தது.அம்மன் கரகம் தென் கடற்கரைக்குச் சென்று கடலில் பூஜிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா சரவணன், கோவில் கமிட்டி தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் ராம்கி, ஆலோசகர் தனசேகர் மற்றும் கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- கழிவு செய்யப்பட்ட அரசு வாகனம் ஏலம் விடப்பட உள்ளது.
- விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் விலைப்புள்ளியை கோரலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் அலுவலக வாகன எண்.TN01G0660 கழிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனத்தை வருகிற 19-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூல கட்டிட வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. டேவனித் தொகை ரூ.3 ஆயிரம் செலுத்திய பின்பே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஏலத்தை மாற்றம் செய்யவோ ரத்து செய்யவோ ஏலக்குழுத் தலைவருக்கு முழு அதிகாரம் உள்ளது. ஏலம் எடுப்பவர் ஏலம் முடிந்த உடன் முழு தொகையை அன்றே செலுத்த வேண்டும். ஏலத் தொகைக்குரிய ஜி.எஸ்.டி. 18 சதவீதம் செலுத்தப்பட வேண்டும். பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் அன்றைய தினம் விலைப்புள்ளியை கோரலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவிலில் 10-ம் நாள் மண்டகப்படி விழா நடந்தது.
- அழகர்சாமி பாண்டியனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் உத்தர கோசமங்கையில் ராமநாத புரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மங்களநாதர் -மங்களேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு கடந்த 25ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வந்தது.
சித்திரை மாதம் 22-ம் நாளான நேற்று(5-ந்தேதி) இறுதி மண்டபடியான 10ம் நாள் மண்டகப்படி நடை பெற்றது. ஒருங்கிணைந்த 101 தேவேந்திர குல வேளா ளர் சமுதாயத்திற்கு முதலாம் ஆண்டு மண்டக படியாக மாலை 6 மணி யளவில் உற்சவ மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் மங்க ளேஸ்வரி அம்பாள் ஒரு வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் பிரியாவிடை -சோமஸ்கந்தர் ஆகியோர் சிம்மாசனத்தில் அமர்ந்து வீதி உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இந்த முதலாம் ஆண்டு பரிவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மகாசபை யின் தலைவராக இருக்கும் புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி பாண்டியனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது.
- திட்டக்குழு உறுப்பினர் தேர்வுக்காக 108 பேர் கொண்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
- மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் பெற்றுக்கொண்டார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் பணிக்கான உறுப்பினர்கள் தேர்வுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்ட திட்டமிடும் குழுவுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 9 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 3 உறுப்பினர்களும் என 12 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன.
மேற்கண்ட தேர்தலுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் 17 பேரும், நகராட்சி உறுப்பினர்கள் 11 பேரும், பேரூராட்சி உறுப்பினர்கள் 108 பேரும் கொண்ட வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. இந்த பட்டியல் உள்ளாட்சி உறுப்பி னர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட, திட்டக்குழு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் பெற்றுக்கொண்டார்.
- பரமக்குடியில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர் இறங்கினார்.
- டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா ெதாடங்கியது. தினமும் யாக சாலை பூஜைகள் நடந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. நள்ளிரவு பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, நெல் மணி தோரணங்கள் கட்டி ஈட்டி, கத்தி, வளரி, வாள் ஏந்தி கள்ளழகர் கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இதனால் மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்வதுடன், விவசாயம் செழித்து நல்ல வளர்ச்சி காண்பார்கள், அர்ச்சகர் சத்யா பட்டாச்சாரியார் தெரிவித்தார்.
தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து தல்லாகுளம் மண்டபத்தை அடைந்தார். திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், பொருளாளர் பாலமுருகன், டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
- பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள புல்வாய்குளம் கிராமத்தில் பழமையான சீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி அன்று சித்திரை திருவிழாவையொட்டி பெருமாள் கள்ளழகர் வேடம் அணிந்து ஆற்றில் இறங்கினார். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் விலை நிலங்களில் விளைந்த நெல், கேழ்வரகை இடித்து புட்டு வைத்து பெருமாளுக்கு படைத்து வழிபாடு நடத்தினர்.
விழாவையொட்டி 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை புல்வாய்குளம் கிராம மக்கள், மாணவ நல மன்றம் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
- கமுதி அருகே குண்டாற்றில் அழகர் இறங்கினார்.
- திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை தெற்குதெரு பெருமாள் கோவிலில் 10 நாட்களுக்கு முன்பு சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் அந்த பகுதி மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் நடந்தது.
3 நாட்களாக தெற்குதெரு முழுவதும் குதிரை வாகனத்தில் அழகர் வீதி உலா வந்தார். கடைசி நாளான நேற்று மொட்டை கருப்பணசாமி கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, சிராய்குத்து நேர்த்திக் கடன்கள் செலுத்தினர்.
பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளம், வான வேடிக்கையுடன், குதிரை வாகனத்தில் அழகர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, குண்டாற்றில் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
- காரில் 79 பார்சல்களில் தலா 2 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
- கடத்தல்காரர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் பகுதியில் ஜே.ஜே.நகரில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று மர்ம கார் ஒன்று சில நாட்களாக நின்றிருந்தது.
இதுகுறித்து மத்திய புலனாய் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை கடந்த 2 நாட்களாக தீவிரமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை வரையிலும் அந்த காரை எடுக்க யாரும் வரவில்லை.
இந்நிலையில் போலீசார் அந்த காரின் கண்ணாடியை உடைத்து அந்த காரை இயக்கி மண்டபம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து அந்த காரின் உள்பகுதி மற்றும் பின்பகுதியை உடைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த காரில் 79 பார்சல்களில் தலா 2 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அந்த பார்சல்களில் இருந்த மொத்தம் 158 கிலோ கஞ்சாவையும், அந்த காரையும் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த கார் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பதிவு எண் கொண்டதாகும். ரூ.1 கோடி மதிப்புடைய கார் என்றும் கூறப்படுகிறது.
அந்த காரின் பதிவு எண்ணை வைத்து அது யாருடையது? காரில் கஞ்சா கடத்தி வந்த கடத்தல்காரர்கள் யார்-யார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கோவிலுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்த சொகுசு காரில் கஞ்சா பார்சல்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், காரில் இருந்த கஞ்சா பார்சல்கள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டதாகவும், கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
- ராமேசுவரம் வந்த மர்ம நபர்கள் பயங்கரவாதிகளா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலுக்கு சொந்தமான வாகனங்கள் நிறுத்து மிடம் ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ளது. இங்கு நேற்று இரவு வெளிமாநிலத்தைச் சேர்ந்த சொகுசு கார் ஒன்று வந்தது. அதில் சில மர்ம நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது 4-க்கும் மேற்பட்ட நபர்கள் காரில் வந்து இறங்கியதாகவும், அவர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாகவும் அந்தப்பகுதி மக்கள் தெரிவித்தனர். போலீசாரின் வருகை குறித்து அறிந்த மர்ம நபர்கள் தப்பிச்சென்று விட்டனர். ஆனால் அவர்கள் வந்த கார் கோவில் வாகனம் நிறுத்து மிடத்தில் உள்ளது. இந்த காரில் என்னென்ன பொருட்கள் என்பது தெரியவில்லை.
ராமேசுவரத்தில் பணியாற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவு போலீசார் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி. பிரிவு போலீசார் உள்ளூர் போலீசார் தப்பிச்சென்ற மர்மநபர்கள் எங்கு பதுங்கியுள்ளனர்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவர்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். ராமேசுவரம் வந்த மர்ம நபர்கள் பயங்கரவாதிகளா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள் உள்ளதா? அல்லது கஞ்சா, தங்கம் போன்ற கடத்தல் பொருட்கள் உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






