என் மலர்
ராமநாதபுரம்
- தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- அவரது சிலைக்கு அடிக்கல் நாட்ட முயன்ற பேரவை நிறுவனர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்
தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவையினர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒட்ட பாலம் ரவுண்டானா பகுதியில் தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை ஏற்க மறுத்ததால் பரமக்குடி 5 முக்கு ரோட்டில் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தனர். இதற்கு போலீசார் அனுமதி வழங்கினர்.
ஆனால் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்த போலீசார் தடை விதித்தனர். இதனால் தேவேந்திர மக்கள் முன்னேற்ற பேரவை நிறுவனர் எஸ்.ஆர்.பாண்டியன் தலைமையில் பரமக்குடி ஒட்டப்பாலம் ரவுண்டானா பகுதியில் தடையை மீறி தியாகி இமானுவேல் சேகரன் சிலை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்காக திரண்டனர்.
தகவல் அறிந்த போலீசார் மாவட்ட எல்லையான மரிச்சுக்கட்டி பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற எஸ்.ஆர்.பாண்டி யன் தலைமையில் அணி வகுத்து வந்தவர்களை தடுத்து நிறுத்தினர்.
மண்டல செயலாளர் மங்களராஜ், செயலாளர் மருதகுமார் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாநில இளைஞரணி செய லாளர் வழிவிட்ட துரை பழனி, மாவட்ட செயலாளர் தவஅஜித், தமிழக தேசிய கழக மாநில இளைஞரணி செயலாளர் சண்முக பாண்டியன், முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் வனங்கை பாலா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்து வேனில் அழைத்து சென்று தனியார் மகாலில் வைத்தனர்.
- அபிராமம் சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இல்லை.
- சலுகைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 125-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கூலி வேலை செய்து பிழைத்து வரு கின்றனர். இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயர்நிலை, மேல்நிலை படிக்க அரசுப்பள்ளி கிடையாது.
அபிராமத்தில் 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதுவும் முறையாக செயல்படுவதில்லை. மேலும் 2 தனியார் பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் அரசின் சலுகைகள் இன்று வரை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-
அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.
இவர்களது பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்க்கு குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைபள்ளியில் படிக்க அரசு பள்ளி கிடையாது. 8-வது வரை மட்டுமே படிக்க அரசு பள்ளி உள்ளது. தமிழக அரசின் சலுகைகளான மருத்துவம், பொறியல் படிப்பவர்களுக்கு 7.5 சதவீத மாணவ- மாணவிகள் படிக்க அரசே முழு செலவையும் ஏற்கும் என்ற திட்டம், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவை அபிராமம் அதனை சுற்றியுள்ள மாணவர்களுக்கு கிடைக்க வாய்பில்லை.
இந்த சலுகைகளை பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்குதான் கிடைக்கும் என்ற நிலை நிலை உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது அபிராமம் பகுதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மூலகாரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளி தொடங்க கலெக்டரும், பள்ளி கல்வி துறையினரும் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பிளஸ்-2 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் மாநில அளவில் 12-வது இடம்பெற்றது.
- கடந்த ஆண்டு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இந்த ஆண்டு ராமநாதபுரம் பின்னடைவை சந்தித்துள்ளது.
ராமநாதபுரம்
தமிழகம் முழுவதும் பிளஸ் -2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 6790 பேரும், மாணவிகள் 7516 பேரும் என மொத்தம் 14306 பேர் தேர்வு எழுதினர்.இதில் 6413 மாணவர்கள், 7364 மாணவிகள் என மொத்தம் 13777 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி விழுக்காடு 94.45 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி விழுக்காடு 97.98 சதவீதம் ஆகும்.
தமிழக அளவில் தேர்ச்சி சதவீதத்தை ஒப்பிடும்போது 96.30 விழுக்காடு பெற்று மாநிலத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 12-வது இடத்தை பெற்றுள்ளது.மொத்தம் 70 அரசு பள்ளிகளில் 18 அரசு பள்ளிகளும்,அரசு உதவி பெறும் 37 பள்ளிகளில் 8 பள்ளிகளும்,53 மெட்ரிக் பள்ளிகளில் 47 மெட்ரிக் பள்ளிகளும்,100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவில் ஒப்பிடும்போது 160 பள்ளிகளில் 73 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடலாடியில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
- மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி, மாநில வர்த்தகர் அணி துணைச்செயலாளர் ராமர், மாவட்ட துணைச் செயலாளர் கருப்பையா, மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள் பால்ராஜ், முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர்-தி.மு.க. தேர்தல் பணிக்குழு துணைச் செயலாளர் சுந்தர்ராஜ் பேசினார். இதில் ஊராட்சித் தலைவர் கண்டிலான் மணிமேகலை முத்துராமலிங்கம், பெரியகுளம் நீர் பாசன சங்கத் தலைவர் ரவீந்திரநாத், இளைஞரணி அமைப்பாளர் சத்தியேந்திரன், தெற்கு ஒன்றிய இளைஞரணி முரளிதரன், மாவட்ட பிரதிநிதிகள் முருகன், கருப்பசாமி, புண்ணியவேல், ஒன்றிய துணைச் செயலாளர்கள் சர்புதீன், ராமகிருஷ்ணன், முத்துலட்சுமி பாண்டி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, முன்னாள் கடலாடி துணை சேர்மன் பத்மநாதன், ஒன்றிய அவை தலைவர் ராஜசேகரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடலாடி செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.
- பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொடர் கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை பல மடங்காக அதிகரித்துள்ளது.
- கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி ஒவ்வொரு சன்னதியாக சென்று வழிபட்டனர்.
ராமேசுவரம்:
தமிழகத்தில் பல மாநில பக்தர்கள் தரிசனம் செய்யும் புனித திருத்தலமாக போற்றப்படுவது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில். காசிக்கு நிகராக இந்த கோவில் விளங்குவதாலும், ராமர் வழிபட்ட கோவில் என்பதாலும் இந்த கோவிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடவும், சாமி தரிசனம் செய்யவும், தங்களது முன்னோர்களுக்கு பித்ரு வழிபாடு செய்யவும் வருகை தருகின்றனர்.
தற்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தொடர் கோடை விடுமுறை என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு கடந்த சில நாட்களாக பக்தர்களின் வருகை பல மடங்காக அதிகரித்துள்ளது.
இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் நேற்று இரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்திற்கு வர தொடங்கி விட்டனர். இன்று காலை ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருந்தனர். கோவிலில் உள்ள புனித தீர்த்தங்களில் நீராடி ஒவ்வொரு சன்னதியாக சென்று வழிபட்டனர்.
அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் பக்தர்கள் புனித நீராடினர்.இந்த நிலையில் காலையில் திடீரென அக்னி தீர்த்த கடற்பகுதியில் சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இருந்தபோதிலும் ஏராளமான பக்தர்கள் தொடர்ந்து புனித நீராடினார்கள். வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடல் உள்வாங்கியதாக கூறப்படுகிறது.
- ராமநாதபுரத்தில் இன்று தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் தலைமையில் நடக்கிறது.
- தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
ராமநாதபுரம்
தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை யிலான 'திராவிட மாடல்' அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதை யொட்டி தமிழகம் முழுவ தும் அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் கட்சி சார்பில் பொதுக்கூட் டங்கள் நடத்தப்பட்டு வரு கிறது.
இதேபோல் ராமநாதபுரம் வடக்கு நகர் தி.மு.க. சார்பில் வடக்கு நகர செயலாளரும், நகர் மன்ற தலைவருமான ஆர்.கே.கார்மேகம் தலைமை யில் ராமநாதபுரம் சந்தை திடலில் இன்று மாலை 6 மணிக்கு தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறு கிறது.
இந்த கூட்டத்தில் ராம நாதபுரம் எம்.எல்.ஏ.வும், மாவட்ட செயலாளருமான காதர்பாட்ஷா முத்துராம லிங்கம், மாநில இளைஞரணி செயலாளர் தூத்துக்குடி ஜோயல் ஆகியோர் கலந்து கொண்டு அரசின் சாதனை திட்டங்கள் குறித்து விளக்கி பேசுகிறார்கள்.
கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், வார்டு செயலாளர்கள், பிரதிநிதி கள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
- சக்கரக்கோட்டை ஊராட்சியில் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என தலைவர் யாழினி புஷ்பவள்ளி தெரிவித்தார்.
- ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் யூனியன் சக்கரக்கோட்டை ஊராட்சி யில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதன் தலைவரும். முதுகலை என்ஜினீயரிங் பட்டதாரியுமான யாழினி புஷ்பவள்ளி கூறியதாவது:-
ராமநாதபுரம மாவட்டத்திலேயே அதிக குடியிருப்புகளை கொண்ட, அதிக மக்கள் வசிக்க கூடிய பகுதியாக சக்கரக்கோட்டை ஊராட்சி உள்ளது. ஒரு நக ராட்சிக்கு இணையான மக் கள் தொகை கொண்ட இந்த ஊராட்சியில் மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்ற நான் மக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
ஊராட்சியில் அனைத்து பகுதிகளுக்கும் தரமான சாலை வசதி ஏற்படுத்தப் படும். பல புதிய விரிவாக்க பகுதிகளுக்கு புதிதாக சாலை உருவாக்க வேண்டி உள்ளது. இதுகுறித்து கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், கூடுதல் கலெக் டர் பிரவீன்குமார், ஊராட்சி களின் உதவி இயக்குனர் பரமசிவம், யூனியன் ஆணை யாளர்கள் கவனத்திற்கு எடுத்து சென்றுள்ளேன்.
இவ்வளவு அதிகமான மக்கள் தொகை கொண்ட ஊராட்சிக்கு தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஒரு சாலை பணி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. சாலை வசதியில்லாத பகுதிகளுக்கு முதல் கட்டமாக மெட்டல் சாலை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்.சக்கரக் கோட்டை ஊராட்சிக்கு சாலை பணிகளுக்கு கூடுத லாக நிதி ஒதுக்கீடு வழங்கு மாறு மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.
சேதுநகர், நேருநகர்-1, 2-வது தெருக்களில் தார் சாலை, நேருநகர்-சேட் இப் ராகிம் நகர் இணைப்பு சாலை ரூ.16 லட்சத்தில், திருவாடானை எம்.எல்.ஏ. கருமாணிக்கம் தொகுதி நிதியில் ரூ.5 லட்சத்தில் மகாசக்தி நகரில் சாலை, வாணி கிராமத்தில் ரூ.13 லட்சத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப் பட்டுள்ளது.
சிவஞானபுரத்தில் மகளிர் சுயஉதவி குழுவினர் பயன்படுத்தும் வகையில் ரூ.78 லட்சத்தில் மகால், 5 இடங்களில் பேவர்பிளாக் சாலைகள், கலை அரங்கம், காரிக்கூட்டம் இந்திரா நகரில் மயான சாலை, சின்டெக்ஸ்தொட்டி, சக்கரக்கோட்டையில் ரூ.22 லட்சத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடி நீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்படும்.
போக்குவரத்து நகர், மணி நகர், தென்றல் நகர், ஆதம் நகர், முல்லை நகர், தமிழ் நகர் பகுதிகளில் ஏராளமான புதிய மின் கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு வசதி செய்யப் பட்டுள்ளது. ஊராட்சி முழுவதும் குடிநீர் பைப் லைன்கள் விரிவாக்கம் செய்து குடிநீர் வினியோகிக் கப்படுகிறது. மேலவாணியில் செயல்படாமல் இருந்த நீர் தேக்க தொட்டி பயன்பாட் டிற்கு கொண்டுவரப்பட்டு பைப்லைன் அமைத்து காரிக் கூட்டம், வாணி, சக்கரக்கோட்டை, தவ்ஹீத் நகர் பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மஞ்சன மாரியம்மன் நகரில் ஜவஜீவன் திட்டத்தில் 300 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கி குடிநீர் வினியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.
சிவஞானபுரத்தில் இருந்து ரெயில்வே தண்ட வாளம் வழியாக சக்கரக் கோட்டை முனி யசாமி கோவில் வழியாக தரவை பகுதி வரை ரூ.60 லட் சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த பணிமுடிவடையும் இடத்தில் கழிவுநீர் சுத்திக ரிப்பு நிலையம் அமைத்து தண்ணீரை மறுசு ழற்சி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. பாரதிநகர் தெற்கு பகுதியில் மக்கும் குப்பைகள் அனைத் தும் திடக்கழிவு மேலாண்மை செய்து திரவ இயற்கை உரம் தயாரித்து ஒரு கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
- விவசாயிகள் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரணிகள் சீரமைத்தல், பண்ணை குட்டைகள் அமைத்தல் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் நுண்ணுயிர் பாசன திட்டத்தில் உபகரணங்கள் வழங்கி வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
விவசாயிகளுக்கு விளை நிலங்களில் பண்ணை குட்டை அமைத்து பயன்பெறும் திட்டம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் ஒரு பகுதியில் பண்ணை குட்டை அமைக்கும் பொழுது மழைக்காலங்களில் பெறக்கூடிய தண்ணீர் சேமிப்பதன் மூலம் வறட்சி காலங்களில் விவசாயி களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
அதுமட்டுமின்றி பண்ணை குட்டைகள் அமைப்பது விவசாயி களுக்கு இணை தொழிலாக மீன் வளர்க்க, கறவை மாடுகளுக்கு தீவனப்புல் வளர்க்க பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், பாசிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் உம்மூர் சலீமா நூர் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தொண்டி சிந்தாத்திரை அன்னை ஆலய தேர்பவனி நடந்தது.
- பங்கு இறைமக்கள் கலந்துகொண்டனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை எதிரே உள்ள புனித சிந்தாத்திரை அன்னை ஆலய திருவிழா பங்குத்தந்தை சவரிமுத்து தலைமையில் நடந்தது. சிவகங்கை வட்டார அதிபர் ஜேசுராஜ் கொடியேற்றி தொடங்கி வைத்தார்.
மேத்தா, முத்துமாலை, மரிய அந்தோணி, ஸ்டீபன், ஜான்பால், ஜோசப் ராஜா, குழந்தை யேசு, அன்பரசு, ஜோசப் லூர்துராஜா ஆகியோர் நவ நாள் திருப்பலி நடத்தினர்.
விழா நிறைவில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவான் அம்புரோஸ் திருப்பலி நடத்தி குழந்தைகளுக்கு புதுநன்மை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் தேர்பவனி நடந்தது. முகிழ்தகம், ஆர்.சி.நகர், வட்டாணம் தெற்கு தோப்பு, வெள்ளாளக் கோட்டை, வேலங்குடி, நரிக்குடி, கோடி வயல், சின்னத்தொண்டி காந்தி நகர், சவேரியார்பட்டினம், விளக்கனேந்தல், புடனவயல், புதுக்குடி, தண்டலக்குடி, தொண்டி, செங்காலன் வயல் ஆகிய பங்கு இறைமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
- மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது.
- கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம், கொடிப்பங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட உள்ள சவேரியார் பட்டினம் குடியிருப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.
இதனை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிங் பீட்டர் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, மின் ஊழியர் ராஜேந்திரன் தலைமையில் பணியாளர்களைக் கொண்டு மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன.
விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சீரமைத்ததற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
- ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
- பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ம.தி.மு.க. ஒன்றியம் சார்பில் கட்சியின் 30-வது ஆண்டு தொடக்க நடந்தது. பஸ் நிலையம் முன்பு பொங்கல் வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
தெற்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் நாகபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் பொன்ராஜ், திம்மநாதபுரம் வெயில்முத்து, மாயக் கண்ணன், நகரச் செயலாளர்முத்துப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் புதுக்குளம் போஸ், வழிவிட்டான், தேனிச்சாமி, சாந்தி நாகராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்கள் முருகன், பெருமாள், கிருஷ்ணன், கிளைச் செயலாளர்கள் சின்ன முனியாண்டி மோகன் குமார், ராமமூர்த்தி ஜெகன், அய்யரப்பன், கிளாமரம் கிருஷ்ணன், சேதுராஜபுரம் மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தரிசு நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- விவசாயிகளிடம் இதன் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் அச்சங்குளம் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் மூலம் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது அச்சங்குளம் ஊராட்சியில் விவசாயிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட கிளஸ்டர்களுக்கு பயன்பாடற்ற நிலங்களை சீரமைத்து விவசாய பணிகளை மேற்கொள்ள உள்ளதை விவசாயிகளிடம் இதன் பயன்கள் குறித்து கேட்டறிந்ததுடன், மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பாடற்ற தரிசு நிலங்களை கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சீரமைத்து பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






