என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரிசு நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு
    X

    தரிசு நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு

    • தரிசு நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • விவசாயிகளிடம் இதன் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் அச்சங்குளம் ஊராட்சியில் வேளாண்மைத் துறையின் மூலம் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நில மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது அச்சங்குளம் ஊராட்சியில் விவசாயிகளால் ஒருங்கிணைக்கப்பட்ட கிளஸ்டர்களுக்கு பயன்பாடற்ற நிலங்களை சீரமைத்து விவசாய பணிகளை மேற்கொள்ள உள்ளதை விவசாயிகளிடம் இதன் பயன்கள் குறித்து கேட்டறிந்ததுடன், மேலும் இந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயன்பாடற்ற தரிசு நிலங்களை கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சீரமைத்து பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.

    இந்த ஆய்வின்போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நாகராஜன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×