search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Privileges"

    • வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு.
    • அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.

    பிரச்சாரத்தை பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

    பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட பிரசார பயணம் சுற்றுப்பகுதியில் உள்ள வீடு, வீடாக சென்று அப்பகுதி மக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் நேரடியாகவும், துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    • அபிராமம் சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி இல்லை.
    • சலுகைகள் கிடைக்காமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள 125-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் கூலி வேலை செய்து பிழைத்து வரு கின்றனர். இவர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க முடியாத நிலை உள்ளது. இதற்கு காரணம் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உயர்நிலை, மேல்நிலை படிக்க அரசுப்பள்ளி கிடையாது.

    அபிராமத்தில் 1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. அதுவும் முறையாக செயல்படுவதில்லை. மேலும் 2 தனியார் பள்ளி மட்டுமே உள்ளது. இதனால் அரசின் சலுகைகள் இன்று வரை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

    இதுகுறித்து சமூக ஆர்வலர் அருணாசலம் கூறியதாவது:-

    அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகின்றனர்.

    இவர்களது பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்க்கு குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைபள்ளியில் படிக்க அரசு பள்ளி கிடையாது. 8-வது வரை மட்டுமே படிக்க அரசு பள்ளி உள்ளது. தமிழக அரசின் சலுகைகளான மருத்துவம், பொறியல் படிப்பவர்களுக்கு 7.5 சதவீத மாணவ- மாணவிகள் படிக்க அரசே முழு செலவையும் ஏற்கும் என்ற திட்டம், கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் ஆகியவை அபிராமம் அதனை சுற்றியுள்ள மாணவர்களுக்கு கிடைக்க வாய்பில்லை.

    இந்த சலுகைகளை பெற 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்தவர்களுக்குதான் கிடைக்கும் என்ற நிலை நிலை உள்ளது. எனவே இனிவரும் காலங்களிலாவது அபிராமம் பகுதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மூலகாரணமாக அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அரசு உயர்நிலை, மேல்நிலைபள்ளி தொடங்க கலெக்டரும், பள்ளி கல்வி துறையினரும் நடவடிக்கை எடுக்க ேவண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர்கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
    • எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா நொச்சியூர் கிராமத்தில் "இந்து மலைக்குறவர்" இனத்தை சேர்ந்த 38 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு உரிய ஜாதி சான்றிதழ் வழங்கப்படாததால் இவர்களின் பிள்ளைகள் பள்ளி கல்வியை முடித்து உயர் கல்வி பெறமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    ஜாதி சான்றிதழ் கேட்டு அதிகாரிகளிடம் முறையிட்டால் நடவடிக்கை எடுக்கவில்லை எனகூறுகின்றனர்.

    கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் கடந்த 11 வருடங்களாக ஜாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகின்றனர்.

    தங்கள் ஜாதியை தவிர்த்து பொய்யாக பிற ஜாதி பெயரை தங்களின் அடையாளமாக சான்றிதழ் பெற்றால் எதிர்காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு அரசிடமிருந்து கிடைக்ககூடிய சலுகைகள் பெற முடியாத நிலை உள்ளது.

    அந்த காலத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்காததால் தங்களின் முன்னோர்களுக்கு ஜாதி சான்றிதழ் இல்லை.

    ஆனால் தற்போது எங்கள் பிள்ளைகளும் பள்ளிகளுக்கு செல்வதால் சாதி,மத, இருப்பிட சான்றிதழ்கள் தேவை கட்டயாமாக உள்ளது.

    எனவே நொச்சியூர் கிராமத்தில் வசிக்கும் இந்து மலைவாழ் மக்களுக்கு உரிய ஜாதி சான்றிதழை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×