என் மலர்
உள்ளூர் செய்திகள்

குண்டாற்றில் இறங்கிய அழகர்
- கமுதி அருகே குண்டாற்றில் அழகர் இறங்கினார்.
- திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பசும்பொன்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை தெற்குதெரு பெருமாள் கோவிலில் 10 நாட்களுக்கு முன்பு சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் அந்த பகுதி மக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். தினமும் கலை நிகழ்ச்சி, கரகாட்டம் நடந்தது.
3 நாட்களாக தெற்குதெரு முழுவதும் குதிரை வாகனத்தில் அழகர் வீதி உலா வந்தார். கடைசி நாளான நேற்று மொட்டை கருப்பணசாமி கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, சிராய்குத்து நேர்த்திக் கடன்கள் செலுத்தினர்.
பெருமாள் கோவிலில் இருந்து மேளதாளம், வான வேடிக்கையுடன், குதிரை வாகனத்தில் அழகர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, குண்டாற்றில் இறங்கினார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
Next Story






