search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குழு உறுப்பினர் தேர்வுக்காக 108 பேர் கொண்ட வாக்காளர் பட்டியல்
    X

    வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் பெற்றுக்கொண்டார். 

    திட்டக்குழு உறுப்பினர் தேர்வுக்காக 108 பேர் கொண்ட வாக்காளர் பட்டியல்

    • திட்டக்குழு உறுப்பினர் தேர்வுக்காக 108 பேர் கொண்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
    • மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் பெற்றுக்கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தல் பணிக்கான உறுப்பினர்கள் தேர்வுக்கு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட திட்டமிடும் குழுவுக்கு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 9 உறுப்பினர்களும், நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களில் இருந்து 3 உறுப்பினர்களும் என 12 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளன.

    மேற்கண்ட தேர்தலுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் 17 பேரும், நகராட்சி உறுப்பினர்கள் 11 பேரும், பேரூராட்சி உறுப்பினர்கள் 108 பேரும் கொண்ட வாக்காளர் பட்டியல் தற்போது வெளியிடப் பட்டுள்ளது. இந்த பட்டியல் உள்ளாட்சி உறுப்பி னர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ், திட்டமிடும் குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட, திட்டக்குழு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் அபிதா ஹனீப் பெற்றுக்கொண்டார்.

    Next Story
    ×