என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவிலில்  10-ம் நாள் மண்டகப்படி விழா
    X

    மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவிலில் 10-ம் நாள் மண்டகப்படி விழா

    • மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவிலில் 10-ம் நாள் மண்டகப்படி விழா நடந்தது.
    • அழகர்சாமி பாண்டியனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் உத்தர கோசமங்கையில் ராமநாத புரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மங்களநாதர் -மங்களேஸ்வரி கோவில் உள்ளது. இங்கு கடந்த 25ந்தேதி சித்திரை திருவிழா தொடங்கி நடந்து வந்தது.

    சித்திரை மாதம் 22-ம் நாளான நேற்று(5-ந்தேதி) இறுதி மண்டபடியான 10ம் நாள் மண்டகப்படி நடை பெற்றது. ஒருங்கிணைந்த 101 தேவேந்திர குல வேளா ளர் சமுதாயத்திற்கு முதலாம் ஆண்டு மண்டக படியாக மாலை 6 மணி யளவில் உற்சவ மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் மங்க ளேஸ்வரி அம்பாள் ஒரு வாகனத்திலும், மற்றொரு வாகனத்தில் பிரியாவிடை -சோமஸ்கந்தர் ஆகியோர் சிம்மாசனத்தில் அமர்ந்து வீதி உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    இந்த முதலாம் ஆண்டு பரிவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மகாசபை யின் தலைவராக இருக்கும் புத்தேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அழகர்சாமி பாண்டியனுக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது.

    Next Story
    ×