என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்
    X

    பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

    • பரமக்குடியில் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர் இறங்கினார்.
    • டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சவுராஷ்டிரா பிராமண ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா ெதாடங்கியது. தினமும் யாக சாலை பூஜைகள் நடந்து பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தன. பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு கும்ப திருமஞ்சனம் நடந்தது. நள்ளிரவு பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, நெல் மணி தோரணங்கள் கட்டி ஈட்டி, கத்தி, வளரி, வாள் ஏந்தி கள்ளழகர் கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளினார். அப்போது பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இதனால் மக்கள் செல்வ செழிப்புடன் வாழ்வதுடன், விவசாயம் செழித்து நல்ல வளர்ச்சி காண்பார்கள், அர்ச்சகர் சத்யா பட்டாச்சாரியார் தெரிவித்தார்.

    தொடர்ந்து பல்வேறு மண்டகப் படிகளில் சேவை சாதித்து தல்லாகுளம் மண்டபத்தை அடைந்தார். திருவிழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன், பொருளாளர் பாலமுருகன், டிரஸ்டிகள் நாகநாதன், கோவிந்தன், முரளிதரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×