என் மலர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. அதுபோல் நேற்றிரவும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2மணி நேரம் வரை மழை பெய்தது. குறிப்பாக ஆலங்குடி பகுதியில் கன மழை பெய்தது. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன், யோகேஸ்வரன், சின்னத்தம்பி, வெள்ளையன், தில்லைக்கண்ணு ஆகியோரது வீடுகளின் சுற்றுச்சுவர்களில் உடைப்பு ஏற்பட்டு மழைநீர் புகுந்தது.
மேலும் ஆலங்குடி அரசினர் பெண்கள் மேல் நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மழைநீர் குளம்போல தேங்கியது. பள்ளியின் சுற்றுச்சுவர்களும் உடைந்து சேதம் அடைந்தன.தெருக்களில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கின்றன. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இதே போல் பெரம்பலூரிலும் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மழையினால் இரவு நேரத்தில் சுமார் 1 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர், மங்களமேடு, அத்தியூர், அகரம் சீகூர், எறையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையால் எறையூர்-பெருமத்தூர் சாலையோரம் உள்ள அரச மரத்தின் பெரிய கிளை முறிந்து சாலையின் நடுவே விழுந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரக்கிளையை அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல் அப்பகுதியில் பலத்த மழையால் மரங்கள் சரிந்து விழுந்தன.
கரூரில் பரவலாக பெய்த மழையின் காரணமாக கரூரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மாவட்டத்தில் அதிகபட்சமாக பஞ்சப்பட்டியில் 52.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் கரூரில் 7 மிமீ., குளித்தலையில் 2மி.மீ., தோகைமலையில் 5 மி.மீ., கிருஷ்ணராயபுரத்தில் 3 மி.மீ., மாயனூரில் 5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் மாவட்டத்தில் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் சில இடங்களில் லேசான தூரலுடன் மழை பெய்தது. #Rain
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாயக்கர்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் வெள்ளைச்சாமி, கணேசன் (வயது38). அண்ணன்-தம்பிகளான இவர்கள் அறந்தாங்கியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்களுக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர்.
இன்று காலை இருவரும் ஓட்டலுக்கு வேலைக்கு சென்றனர். அப்போது திடீரென அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் உண்டானது. இதில் ஆத்திரமடைந்த வெள்ளைச்சாமி கத்தியால் கணேசனை குத்த முயன்றார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பியோடினார்.
இருப்பினும் வெள்ளைச்சாமி, கணேசனை துரத்தி சென்று சரமாரியாக கத்தியால் குத்திக்கொன்றார். நடுரோட்டில் ஓட ஓட விரட்டி தம்பியை அண்ணனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து கொண்டு ஓடினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கணேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வெள்ளைச்சாமியை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள கடுக்காகாடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் அப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்த கோவிலில் உள்ள மாடகாளி உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு அடிக்கடி பக்தர்கள் கிடாவெட்டு பூஜைகள் நடத்துவது வழக்கம். மேலும் நேர்த்திக்கடனாக கோவில் உண்டியலில் பக்தர்கள் பணம், தங்க நகைகளையும் காணிக்கையாக செலுத்துவதும் உண்டு. இந்தநிலையில் நேற்று முன்தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
பின்னர் இரவு வழக்கம்போல கோவில் பூசாரி கோவிலை அடைத்து விட்டு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர். அப்போது கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கும், வடகாடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உண்டியலை பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “கடந்த ஒரு ஆண்டாக உண்டியல் திறக்கப்படாததால் பக்தர்கள் செலுத்திய பணத்தின் மதிப்பு பல ஆயிரக் கணக்கில் இருக்கும். மேலும் சென்ற ஆண்டும் கும்பாபிஷேகத்தின்போது கோவிலில் இருந்த மற்றொரு உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. கோவிலுக்கு செலுத்தும் காணிக்கை தொடர்ந்து திருட்டுபோவது வேதனை அளிக்கிறது” என தெரிவித்தனர்.
இந்தநிலையில் மணிகண்டனும், வினோதினியும் பதிவு திருமணம் செய்ததோடு, கோவைக்கு சென்று கடந்த 2 மாதங்களாக அங்கு குடும்பம் நடத்தி வந்துள்ளனர். பின்னர் கடந்த மாதம் அங்கிருந்து கீரனூருக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென காரில் வந்த சிலர் மணிகண்டனை கடத்தி சென்றுவிட்டனர்.
இது குறித்து கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வினோதினி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கடத்தி சென்றவர்கள் யாரென்று விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே வினோதினியை அவரது பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
இந்தநிலையில் திடீரென வினோதினி கீரனூரில் உள்ள ஒரு செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று கொண்டு மணிகண்டனுடன் தன்னை சேர்த்து வைக்க வேண்டும், கடத்தி சென்றவர்களிடம் இருந்து அவரை மீட்டுத்தர வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கீரனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினோதினியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் மணிகண்டன் வந்தால் மட்டுமே தான் கீழே இறங்கி வருவேன் என கூறினார்.
பின்னர் போலீசார்- பொதுமக்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமாதான மடைந்த வினோதினி, திடீரென கீழே இறங்கி வருகிறேன். ஆனால் நீங்கள் எனக்காக பஸ் மறியலில் ஈடுபட வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை வைத்தார். அதற்கு பொதுமக்கள், நீ கீழே இறங்கி வா. உனக்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என கூறினர். இதையடுத்து செல்போன் கோபுரத்தில் இருந்து வினோதினி கீழே இறங்கி வந்தார். பின்னர் போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும் வினோதினியின் காதல் கணவர் மணிகண்டனை யார் கடத்தி சென்றார்கள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் கீரனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே உள்ள காந்தி பூங்கா மேம்படுத்தப்பட்டது. பின்னர் அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேம்படுத்தப்பட்ட பூங்காவை திறந்து வைத்தார். பின்னர் அவர் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள உடற்பயிற்சி கருவிகளில் உடற்பயிற்சிகள் செய்தார். இதில் புதுக்கோட்டை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதுக்கோட்டை திருவப்பூர் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கல்வி நிதியில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்விக் அதிகாரி வனஜா, மாவட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவப்பூரில் அமைக்கப்பட்டு உள்ள கால்நடை மருத்துவ கிளை நிலையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து பேசினார். இதில் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கலில் கவர்னருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய தி.மு.க.வை சேர்ந்த 192 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதை கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
சேலம்- சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்கப்படும் திட்டத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் வருகிற 4-ந்தேதி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டு உள்ளோம். அனுமதி வழங்கவில்லை என்றாலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மத்திய அரசால் போடப்பட்டு உள்ள வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உள்ளது.
காவிரி நதி நீர் பிரச்சினையில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கு முன்பே அ.தி.மு.க. சார்பில் வெற்றி விழா கூட்டம் நடத்தி வருகிறது. இதைவிட கேலிக்கூறியது வேறு ஒன்றும் இல்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் வழங்கப்பட்டு உள்ள தீர்ப்பு என்பது பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வர விருப்பம் இல்லாமல், பிரச்சினையை நீடிக்க செய்ய வழிவகுக்கும் தீர்ப்பாக உள்ளது. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.வால் வெற்றி பெற முடியாது. #mutharasan #salemgreenroad







