என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருணாநிதி பிறந்தநாள் விழா"

    • கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தனர்.
    • 7-வது வார்டு சார்பில் விழா.

    அரக்கோணம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுகவினர் பல்வேறு இடங்களில் இலவச வேட்டி சேலை மற்றும் உணவு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

    அரக்கோணம் நகரம் 7-வது வார்டில் நகர திமுகவினர் வட்டச் செயலாளர் பாலாஜி தலைமையில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி்னர். இலவச வேட்டி சேலை மற்றும் உணவு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி, நகர துணைத்தலைவர் அன்பு லாரன்ஸ், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், பூக்கடை அரி, நகர மாணவரணி அமைப்பாளர் பொன்னரசு, வட்ட பிரதிநிதி சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    காரையூரில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணை செய லாளர்சின்னையா, பொதுக் குழுஉறுப்பினர் தென்ன ரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் லியோனி சிறப்புரையாற்றினார்.

    இதில் நகரச்செயலாளர் அழகப்பன், மாவட்டப் பிரதிநிதிகள் சிக்கந்தர், விஜயன், துணைச்செயலாளர்கள் திலகவதி முருகேசன், கண்ணன், பாஸ்கரன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் நாகராஜன், ஒன்றிய அவைத்த லைவர் மீராகனி,  நிர்வாகிகள் கணேசமூர்த்தி, முரளிதரன், மணிமாறன், திருப்பதி, சின்னையா, அண்ணாத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    முன்னதாக மாவட்ட பிரதிநிதி தவசுமணி வரவேற்று பேசினார். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதிதாசன் நன்றி கூறினார். தொடக்கத்தில் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ராஜீவின் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
    ×