என் மலர்
நீங்கள் தேடியது "Karunanidhi Birthday Celebration"
- ஒரிசா மாநிலத்தில் நடந்த ரெயில்விபத்து காரணமாக கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தள்ளி வைப்பதாக தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.
- நத்தம் பகுதியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊர்வலமாக குதிரையில் சவாரி செய்தும், அன்னதானம் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
நத்தம்:
தமிழகத்தில் கடந்த 3-ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில் ஒரிசா மாநிலத்தில் நடந்த ரெயில்விபத்து காரணமாக கருணாநிதி பிறந்தநாள் கொண்டாட்டத்தை தள்ளி வைப்பதாக தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் விழாவில் ஊர்வலமாக குதிரையில் சவாரி செய்தும், அன்னதானம் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இதனையடுத்து கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக தி.மு.க நிர்வாகிகளான வேலம்பட்டி கந்தசாமி, கொசவபட்டி மரிய ஆரோக்கியம், பூசாரிபட்டி உத்தமன், கண்ணமனூர் கனகராஜ், ராகலாபுரம் சரவணன் ஆகிய 5 பேரையும் தற்காலிகமாக கட்சியில் இருந்து நீக்குவதாக தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
- கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்தனர்.
- 7-வது வார்டு சார்பில் விழா.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நகர திமுகவினர் பல்வேறு இடங்களில் இலவச வேட்டி சேலை மற்றும் உணவு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அரக்கோணம் நகரம் 7-வது வார்டில் நகர திமுகவினர் வட்டச் செயலாளர் பாலாஜி தலைமையில் கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி்னர். இலவச வேட்டி சேலை மற்றும் உணவு வழங்கினர்.
நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் கலாவதி, நகர துணைத்தலைவர் அன்பு லாரன்ஸ், மாவட்ட பிரதிநிதிகள் ரவிச்சந்திரன், பூக்கடை அரி, நகர மாணவரணி அமைப்பாளர் பொன்னரசு, வட்ட பிரதிநிதி சுரேஷ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






