என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bank managers arrested"

    புதுக்கோட்டையில் விவசாயியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சோழ கம்பட்டியை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 42), விவசாயி. இவர் புதுக்கோட்டை கீழராஜ வீதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு ரூ. 14 லட்சம் வழங்க   வங்கி நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது.

    இந்த நிலையில் அந்த வங்கியின் மேலாளர் பிரவீன்குமார், துணை மேலாளர் பிராங்க்ளின், உதவி துணை மேலாளர் ராம்குமார், ஊழியர்கள் பிரபாகர், மாரிமுத்து ஆகியோர் ராமதாசுக்கு ரூ.2 லட்சம் மட்டும் வழங்கி விட்டு மீதி ரூ.12லட்சத்தை மோசடி செய்ததாக கூறப்படுகிறது.

    இதனிடையே வங்கியில் இருந்து விவசாயி ராமதாசுக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் ரூ.14 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்பட்டிருந்தது. இதனால் அவர் அதிர்ச்சியடைந்ததோடு, வங்கி ஊழியர்களால் தாம் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்தார். 

    இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடி தொடர்பாக வங்கி மேலாளர் பிரவீன்குமார், துணை மேலாளர் பிராங்க்ளின் ஆகியோரை கைது செய்தார்.

    மேலும் தலைமறைவாக உள்ள ராம்குமார், பிரபாகர், மாரிமுத்து ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 
    ×