என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதுவது போல் ஒருவர் ஓட்டி சென்றார்.
    • ஆத்திரம் அடைந்த இருசக்கரத்தில் சென்றவர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    நாமக்கல்:

    நாமக்கல்-திருச்சி சாலையில் லாரி ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதுவது போல் ஒருவர் ஓட்டி சென்றார். ஆத்திரம் அடைந்த இருசக்கரத்தில் சென்றவர் லாரியை நிறுத்தி டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சுமார் ½ மணி நேரம் 2 பேருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வாகன ஓட்டிகளே சண்டையிட்ட இருவரையும் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். நாமக்கல் பேருந்து நிலையம் மற்றும் பூங்கா சாலை, திருச்சி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் காலை வேளையில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    • தமிழக அரசு, பொதுமக்க ளுக்கு பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
    • அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் பங்கு அதிகம் உள்ளதால் பெருமைப்படுகிறோம்.

    நாமக்கல்:

    கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க வேண்டும் என உள்ளாட்சி பிரதிநிதிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு, பொதுமக்க ளுக்கு பல்வேறு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

    அரசு திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில், கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களின் பங்கு அதிகம் உள்ளதால் பெருமைப்படுகிறோம்.

    தற்போது தமிழகத்தில் உள்ள, மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டமாகும்.

    ஆனால், தமிழகத்தில் உள்ள கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்காதது வேதனை அளிக்கிறது.

    நாங்களும் முழுநேரம் பொதுமக்களுக்கு பணிகளை செய்து வருகிறோம். அதனால், எங்கள் மனுவை கருத்தில் கொண்டு, கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்கள், வார்டு உறுப்பினர்களுக்கும் மதிப்பூதியம் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நித்யா என்ற பட்டதாரி இளம்பெண் அருகில் உள்ள முள்காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
    • அப்போது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரைப்பாளையத்தை சேர்ந்த நித்யா என்ற பட்டதாரி இளம்பெண் அருகில் உள்ள முள்காட்டில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை பார்த்த 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே நித்யா படுகொலை சம்பவத்தை தொடர்ந்து ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கைகளில் தீவைப்பு, வாழை, பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது, மின்மோட்டார்களை கிணற்றில் வீசுவது உள்ளிட்ட பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றன. மேலும் வடமாநில தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவமும் நடந்தது.

    இந்நிலையில், இப்பகுதி யில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில் தொடர்பு இருப்பதாக வாலி பர்கள் சிலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். இவ்வாறு கைதாகி பரமத்தி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ள கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையத்தைச் சேர்ந்த சங்கர் (32), ஜேடர்பாளையம் அருகே வேட்டுவம் பாளை யத்தை சேர்ந்த நல்லசிவம் (32) ஆகிய 2 பேரிடமும் ஜேடர்பாளையம் போலீசார் விசாரணை நடத்த பரமத்தி நீதிமன்றத்தில் மனு அளித்தனர்.

    நீதிமன்றம் ஒரு நாள் விசாரணைக்கு மட்டும் அனுமதி அளித்தது. அதன் பேரில் சங்கர், நல்லசிவம் ஆகிய 2 பேரையும் விசார ணைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். நாள் முழுவதும் வேல கவுண்டம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து ரகசியமாக தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில் மேலும் யார், யார் இந்த அசம்பாவித சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது குறித்து கேட்டனர். விசாரணைக்கு பிறகு சங்கர், நல்லசிவம் இருவரையும் பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் பரமத்தி சப்-ஜெயிலில் அடைத்தனர்.

    • மனோஜ் (21). இவர் கடந்த 22-ந் தேதி தனது ஆட்டோவில் மங்களமேடு காலனி வழியாக சென்று கொண்டிருந்தார்.
    • மாயவனுக்கும், மனோஜூக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மங்களமேடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் மனோஜ் (21). இவர் கடந்த 22-ந் தேதி தனது ஆட்டோவில் மங்களமேடு காலனி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மாயவன் (54) என்பவர் இந்த வழியாக ஏன் வந்தாய் என கேட்டுள்ளார். இதில் மாயவனுக்கும், மனோஜூக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே மனோஜ் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் (18), கொமராபாளையத்தை சேர்ந்த தீபன்ராஜ் (28), குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சதீஷ் (32) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 5 பேருடன் சேர்ந்து மாயவனையும் அவருக்கு ஆதரவாக தட்டிக் கேட்ட கிருஷ்ணன் (42), வரதம்மாள்(60), ராசாயி (60) ஆகியோரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த 4 பேரும் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து கிருஷ்ணன் பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிருஷ்ணன், அவரது உறவினர்களை தாக்கிய மனோஜ், ஈஸ்வரன், தீபன்ராஜ், சதீஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த தகராறில் காயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் அங்கிருந்து மாயமாகி விடடார். தலைமறைவான அந்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

    • பூ சாகுபடி செய்யப்பட்டு நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
    • கடந்த 10 நாட்களாகவே பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட சுற்றுப்புறத்தில் இருந்து பூ சாகுபடி செய்யப்பட்டு நாமக்கல் பஸ் நிலையத்தில் உள்ள மார்க்கெட்டு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். மேய்க்கல்நாயக்கன்பட்டி, ஏழூர் பட்டி, பொடிரெட்டிபட்டி, தம்மம்பட்டி, நாமகிரிபேட்டை, முள்ளுக்குறிச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து சாகுபடி செய்யப்படும் பூக்கள் நாமக்கல் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வரும். உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கின்றன. மல்லிகை பூ சேலம், ஈரோடு, கரூர், திருச்செங்கோடு, மற்றும் திண்டுக்கல்லில் இருந்து வியாபாரிகள் பூக்களை வாங்கிசெல்கொன்றன. கடந்த 10 நாட்களாகவே பூக்கள் வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளது. பூக்கள் விலை விபரம் மல்லிகைப்பூ ரூ.480, முல்லை ரூ.80, சாமந்தி ரூ.400, சம்மங்கி ரூ.100, கோழிக்கொண்டை ஒரு கட்டு ரூ 20-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. 

    • நாமக்கல், கருப்பட்டிபாளையம் சாலை, கலைவாணர் நகரில் வசிப்பவர் சுரேஷ்குமார் லாரி புரோக்கர்.
    • சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வீட்டு பூட்டை உடைத்து பார்த்த போது சுரேஷ்குமார் இறந்தநிலையில் கிடந்துள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல், கருப்பட்டிபாளையம் சாலை, கலைவாணர் நகரில் வசிப்பவர் சுரேஷ்குமார் (52) . லாரி புரோக்கர். இவரது மனைவி மலர்கொடி, இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளன. மகள் திருமணம் ஆனநிலையில் மகன் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மனைவி மலர்கொடி, மகன் கவின்குமார் வெளியூர் சென்று வீடு திரும்பிஉள்ளனர். அப்போது வீடு உள்ளே பூட்டி இருந்தது. இதனையடுத்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி வீட்டு பூட்டை உடைத்து பார்த்த போது சுரேஷ்குமார் இறந்தநிலையில் கிடந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசை கண்டித்து மகளிர் அணி சார் பில் நாமக்கல்- மோகனூர் சாலை பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டதிற்கு மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி தலைமை வகித்தார்.

    நாமக்கல்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் கலவரத்தில், மாதக் கணக்கில் பெண்கள் மீது கொடூர பாலியல் தாக்குதலும், உச்சகட்டமாக பெண் கள் அங்கு நிர்வாணப்ப டுத்தப்பட்டு பாலி யல் வன்கொடுமை செய்யப்பட்டதை, இதுவரை கண்டு கொள்ளாமல் இருக்கும் மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பா.ஜ.க அரசை கண்டித்து மகளிர் அணி சார் பில் நாமக்கல்- மோகனூர் சாலை பி.எஸ்.என்.எல் அலுவலகம் எதிரே இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டதிற்கு மாநில மகளிர் தொண்டர் அணி செயலாளர் ராணி தலைமை வகித்தார். ராசிபுரம் நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதிலட்சுமி, மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தை கலவரத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் , மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகள், சார்பு அணி மகளிர் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், வார்டு மற்றும் கிளைகழகமகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி, நிர்வாகிகள்,மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல், ராமாவரம்புதூரை சேர்ந்தவர் நிசார் அகமது தனியார் நிறுவனத்தில் இரவு காவலராக பணியாற்றி வரும் இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
    • நேற்று வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றுவிட்டு, இன்று காலை வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பிரிட்ஜில் அவர் வைத்திருந்த ரூ.3000 பணம் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல், ராமாவரம்புதூரை சேர்ந்தவர் நிசார் அகமது(53). தனியார் நிறுவனத்தில் இரவு காவலராக பணியாற்றி வரும் இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றுவிட்டு, இன்று காலை வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பிரிட்ஜில் அவர் வைத்திருந்த ரூ.3000 பணம் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் நிசார் அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.
    • விவசாயிகள் தங்களின் கரும்புகளை எடுத்துச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா அண்ணா நகர், பெரிய மருதூர், சின்ன மருதூர் பாகம்பாளையம், சானார் பாளையம், சேளூர், பிலிக்கல்பாளையம், கொத்த மங்கலம், ஆனங்கூர், ஜேடர்பா ளையம், கவுண்டம்பாளையம், திடுமல், சிறு நல்லி கோவில், குரும்பல மகாதேவி, ஜமீன் இளம்பள்ளி ,சோழசிரா மணி, மாரப்பம்பாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயி ரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர்.

    வெல்லம் தயாரிப்பு

    விவசாயிகள் தங்களின் கரும்புகளை எடுத்துச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்கின்றனர். பதிவு செய்யாத விவசாயிகள் வெல்லம் தயாரிக்கும் ஆலை களுக்கு டன் ஒன்றுக்கு ரூ.2800 வரை விற்பனை செய்து வருகின்றனர்.

    வாங்கிய கரும்புகள் மூலம் சாறு பிழிந்து பாகு ஆக்கி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம், நாட்டு சர்க்கரை தயாரித்து 30 கிலோ சிப்பம் ஆக்குகின்ற னர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியா பாரி களுக்கும், அருகாமை யில் செயல்பட்டு வரும் வெல்லம் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.

    வெல்லம் சிப்பங்களை வாங்கி தமிழகத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களுக் கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மராட்டியம். உத்தராஞ்சல் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

    கடந்த வாரம் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம் ரூ1,230-க்கும், அச்சு வெல்லம் ரூ.11,70- க்கும் விற்பனையானது.

    தற்போது 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம்ரூ 1,235-க்கும், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் ரூ.1,200-க்கும் விற்பனை யானது. கரும்பு ஒரு டன் ரூ.2800 வரை விற்பனை யாகிறது. வெல்லம் உற்பத்தி அதிகரிப்பல் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது.
    • பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.

    பரமத்திவேலூர்;

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவராக தி.மு.க.,வைச் சேர்ந்த சோமசேகர் உள்ளார்.

    போலீசில் புகார்

    இவர் பாண்டமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா விற்பனையால் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். இப்பகுதியில் கள்ளத்தன மாக மது விற்பனையும், லாட்டரி விற்பனையும் நடக்கிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமத்தி வேலூர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து பாண்ட மங்கலம் பேரூராட்சி தலைவர் சோமசேகர் கூறியதாவது:-

    பாண்டமங்கலத்தில் கஞ்சா, லாட்டரி, சந்து கடையில் மது விற்பனை நடக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்டித்து வாட்ஸ் அப்பில் மெசேஜ் போட்டுள்ளேன்.

    தொடர்ந்து இப்பகுதியில் கஞ்சா, லாட்டரி, சட்டவிரோத மது விற்பனையை அனுமதிக்க முடியாது. கஞ்சா விற்பனையால் இளைஞர்களை வாழ்வு சீரழிகின்றது. பொதுமக்கள் நலன் கருதி சட்ட விரோத செயல்களை தடுக்க பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டர் இந்திராணியிடம் புகார் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என கூறினார்.

    பாண்டமங்கலத்தில் நடக்கும் சட்டவிரோத செயல்களை போலீசார் கண்டு கொள்வதில்லை. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம், வல்வில் ஓரி சிலை, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • சேப்பாச்குளம்பட்டி நியாய விலைக் கடையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொல்லிமலை:

    நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம், வல்வில் ஓரி சிலை, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பாலம்

    கொல்லிமலை வளப்பூர் நாடு பஞ்சாயத்து புத்தக்கல் ஓடையில் நபார்டு ஆர்.ஐ.டி.எப்., திட்டத்தின் கீழ் 254.63 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணியினையும், செல்லூர்நாடு பஞ்சாயத்து அரைக்கல்பட்டியில் பழங்குடியினர் பகுதியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கிணறு, நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.

    கொல்லிமலை

    சோளக்காடு சேப்பாங் குளம்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு போதிய மருந்துகள் இருப்பு, டாக்டர்கள் வருகை பதிவேடு, மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    சேப்பாச்குளம்பட்டி நியாய விலைக் கடையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் கணேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபரஜித் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    • சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.
    • சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அசைவ பிரியர்கள் உள்ளதால் ஆடு, கோழி, காடை, வாத்து இறைச்சி விற்பனை ஜோராக நடக்கிறது.

    பருவநிலை மாற்றத்தால் தற்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமலால் அவதிப்படுகின்றனர். சளி இருமலுக்கு ஆஸ்த்துமா நோய்க்கு நல்ல மருந்தாக இருப்பதால் வாத்து முட்டை விலை உயர்ந்தாலும், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வாங்கி வருகின்றனர்.

    சில வாரத்துக்கு முன்பு 8 ரூபாய்க்கு விற்ற வாத்து முட்டை தற்போது 4 ரூபாய் உயர்ந்து 12 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

    இது குறித்து வாத்து முட்டை விற்பனை செய்யும் கடை உரிமையாளர் கூறியதாவது, தேவை அதிகரித்ததால், வாத்து முட்டை கடும்தட்டு பாடு ஏற்பட்டதால் வாத்து முட்டை விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி முட்டையை விட வாத்து முட்டைகள் அதிக சத்துக்கள் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள வாத்து பண்ணைகள் மூலம் முட்டை கொள்முதல் செய்து பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்கிறோம். வாத்து முட்டை 12 ரூபாய்க்கும், வேக வைத்த வாத்து முட்டை 15 ரூபாயும், வாத்து முட்டை ஆம்லெட் ரூ.30 ஆகும் விலை உயர்ந்துள்ளது என கூறினார்.

    ×