search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ori festival at Kollimalai"

    • நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம், வல்வில் ஓரி சிலை, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • சேப்பாச்குளம்பட்டி நியாய விலைக் கடையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கொல்லிமலை:

    நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வல்வில் ஓரி அரங்கம், வல்வில் ஓரி சிலை, தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய இடங்களில் வல்வில் ஓரி விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பாலம்

    கொல்லிமலை வளப்பூர் நாடு பஞ்சாயத்து புத்தக்கல் ஓடையில் நபார்டு ஆர்.ஐ.டி.எப்., திட்டத்தின் கீழ் 254.63 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணியினையும், செல்லூர்நாடு பஞ்சாயத்து அரைக்கல்பட்டியில் பழங்குடியினர் பகுதியில் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கிணறு, நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தார்.

    கொல்லிமலை

    சோளக்காடு சேப்பாங் குளம்பட்டி அரசு துணை சுகாதார நிலையத்தை பார்வையிட்டு போதிய மருந்துகள் இருப்பு, டாக்டர்கள் வருகை பதிவேடு, மருத்துவ வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    சேப்பாச்குளம்பட்டி நியாய விலைக் கடையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வில் தோட்டக்கலை துறை துணை இயக்குநர் கணேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபரஜித் குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், சரவணன் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

    ×