என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல்-சேலம் சாலை தனியார் மருத்துவமனை பின்புறம் சிலர் சூதாடுவதாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • மேலும் சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.20,600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல்-சேலம் சாலை தனியார் மருத்துவமனை பின்புறம் சிலர் சூதாடுவதாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடி கொண்டிருந்த நாமக்கல் பழையபாளையத்தை சேர்ந்த கமலகண்ணன் (47), வீசாணம் சந்திரகுமார் (42), தூசூர் வீரகுமார் (38), வெள்ளாளத்தெரு அருள் (50), கிழக்கு வீதி மணிராஜ் (26), கோம்பை தெரு பாஸ்கர் (40) ஆகிய 6 பேரை பிடித்து போலீசார் கைதுசெய்தனர். மேலும் சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.20,600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • விசைத்தறி கூடத்தின் மேலாளராக வேலை பார்த்து வரும் சித்திக் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பெட்டி பெட்டியாக வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
    • இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 21 பெட்டிகளில் பல்வேறு மதுவகைகளை கொண்ட 704 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    குமாரபாளையம்:

    வெப்படை போலீசார் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியில் சட்ட

    விரோதமாக மதுவிற்பனை செய்வது குறித்து போலீசா ருக்கு தொடர்ந்து புகார் வந்தன. இந்நிலையில் வால்ராசபாளையம் பகுதி யில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் போலீசார் அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தின் மேலே உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது விசைத்தறி கூடத்தின் மேலாளராக வேலை பார்த்து வரும் சித்திக் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பெட்டி பெட்டியாக வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 21 பெட்டிகளில் பல்வேறு மதுவகைகளை கொண்ட 704 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் போலியா னதா அல்லது அரசு மதுபான கடை பாட்டில்களா என்பது குறித்து சேலம் ரசாயன ஆலைக்கு சோதனைக்காக போலீசார் அனுப்பி உள்ளனர்.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரி
    • பல்வேறு ஊர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    ராசிபுரம்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஸ்ரீ ராமலு முரளி முன்னிலை வகித்தார்.

    இதில் ராசிபுரம் வட்டார தலைவர் கணேசன், வெண்ணந்தூர் வட்டாரத் தலைவர் சொக்கலிங்க மூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் நாமகிரிப்பேட்டை இளங்கோ, பிள்ளாநல்லூர் சண்முகசுந்தரம், வெண்ணந்தூர் சிங்காரம், அத்தனூர் பூபதி, நகராட்சி கவுன்சிலர் லலிதா பாலு, குருசாமிபாளையம் பேரூராட்சி கவுன்சிலர் கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோபால், மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மகேஸ்வரி, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், ராசிபுரம் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம், பழனிசாமி, மதுரை வீரன், கோவிந்தராஜ், ஜெயபால் ராஜ், சேக் உசேன் பலர் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்

    இதேபோல் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொத்தனூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், காந்தி, மாவட்ட பொருளாளர்கள் மணி, குப்புசாமி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் மோகனூர் வட்டார தலைவர்கள் நடராஜன், முத்துசாமி, குப்புசாமி, பரமத்தி வட்டாரத் தலைவர் சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஓமலூர்

    சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க மற்றும் மணிப்பூர் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் மூத்த நிர்வாகி மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகு தீபம் ஏந்தி மத்திய பா.ஜ.க. அரசையும், மணிப்பூர் பா.ஜ.க அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து 1 மணி நேரமாக மெழுகு தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    • பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார்.
    • காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி விவசாயி, இவர் தனது விவசாய தோட்டத்தில் கருப்பு சாகுபடி செய்திருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார். காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் விவசாயம் செய்யப்படாமல் பல்வேறு செடி கொடிகள் முளைத்து காய்ந்து இருந்த செடிகளில் தீ பரவியது. அப்பகுதியில் இருந்த பொது மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக அருகில் இருந்த தோட்டத்துக்கும் பரவியது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததனர்.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர் இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
    • கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், கொ.ம.தே.க., நாமக்கல் மேற்குமாவட்ட துணை செயலாளருமான சாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் நகராட்சி 8-வது வார்டில் ஆண்டிகாடு பகுதியில் 14 லட்சத்தில் சுமார் 200 மீ. துாரத்திற்கு கான்கீரிட் சாலை கடந்த 25 நாட்களுக்கு அமைக்கும் பணி நடந்தது.அமைக்கப்பட்ட கான்கீரிட் சாலை உயரம் குறைவாக உள்ளதால், கலெக்டருக்கு ஆதாரத்து டன் புகார் அனுப்பினேன். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து சமந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து கான்கீரிட் சாலையை ஆய்வு செய்தனர். நேற்று, 5 செ.மீ., உயரத்திற்கு அதிகரித்து மீண்டும் சாலையை சீரமைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செஞ்சுடையாம்பாளை யத்தில் உள்ள பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்டுள்ள மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் பிரேம்குமார் (29) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
    • பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு பஞ்சாயத்து பகுதியில் காபி, அன்னாசி பழம், வாழை, மிளகு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு குரங்குகள், முயல்கள், நரிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வாழவந்திநாடு பஞ்சாயத்து கரையன்காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனிசாமி (51), காளி (70). இவர்கள் இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

    வழக்கம்போல் இருவரும் இன்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் வழியாக தோட்ட வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    காளியம்மன் கோவில் அருகே சென்றபோது மறைந்திருந்த கரடி, அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. முகம், கை, கால் , கழுத்து, உடல் உள்ளிட்ட பகுதிகளில் குடித்து குதறியது. இதனால் நிலைகுலைந்த இருவரும் படுகாயங்களுடன் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செம்மேடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவம் நடந்த வனப்பகுதியில் கரடியை பிடிப்பதற்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 2 பேரை கரடி கடித்து குதறிய சம்பவத்தால் வாழவந்திநாடு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளாராக சரவணன் பொறுப் பேற்றுக்கொண்டார்.
    • இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி புதிய ஆணையாளாராக சரவணன் பொறுப் பேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு குமாரபாளையம் நகராட்சி தலைவர் சஷ்டி விஜயகண்ணன், பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, கவுன்சிலர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
    • கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் உழவர் சந்தைக்கு கோனூர், திண்டமங்கலம், கீழ்சாத்தம்பூர், கீரம்பூர், கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி, பொட்டிரெட்டிபட்டி, எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல், புதுச்சத்திரம், சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    கிலோ ரூ.130

    உழவர் சந்தையில் தற்போது அதிகபட்ச விலையாக சின்னவெங்காயம் கிலோ ரூ.80, இஞ்சி ரூ.280, கத்தரிக்காய் ரூ.60-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் தக்காளி தட்டுப்பாட்டை தொடர்ந்து அதன் விலை உயர்ந்து கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதையடுத்து நாமக்கல் தோட்டக்கலைத் துறையினர் விவசாயிகளிடம் இருந்து தக்காளியை நேரிடையாக வாங்கி நாமக்கல் உழவர் சந்தையில் விற்று வந்தனர்.

    இதனால் வெளிச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.130 வரை விற்ற நிலையிலும், உழவர் சந்தையில் ரூ.90-க்கு விற்கப்பட்டன.

    விற்பனை நிறுத்தம்

    இந்நிலையில் கடந்த 3 நாட்களாக நாமக்கல் உழவர் சந்தையில் தக்காளி விற்பனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தக்காளி வாங்க உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றன. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், தக்காளி விலை தொடர்நது உயர்ந்து வந்ததால், விவசாயிகளிடம் நேரடியாக வாங்கி உழவர் சந்தையில் விற்கப்பட்டது. தற்போது தட்டுபாடு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தக்காளி கிடைக்கவில்லை. இதனால் தக்காளி விற்பனை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே நாமக்கல் உழவர் சந்தையில் மீண்டும் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

    • பேக்கிங் செய்த உணவு பண்டங்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்து வழங்குவதாக, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • நேற்று வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் தயாரிப்பு தேதி இல்லாத பேக்கிங் செய்த உணவு பண்டங்கள் தரமற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்து வழங்குவதாக, பொதுமக்கள் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் சுகாதாரமற்ற தண்ணீரில் திண்பண்டங்கள் தயாரிப்பதாகவும் புகார் எழுந்தது.பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் நாமக்கல் உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர் செல்வகுமார் மற்றும் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் நேற்று வேலூரில் உள்ள பேக்கரி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பழைய பை-பாஸ் சாலையில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மேற்கொண்ட ஆய்வில் தயாரிப்பு தேதி இல்லாமல் திண்பண்டங்கள் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து பேக்கரி கடைக்கு நோட்டீஸ் வழங்கி, சுகாதாரமற்ற 4 கிலோ திண்பண்டங்களை பறி முதல் செய்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.மேலும் சுகாதாரமற்ற முறை யில் பேக்கரிகளில் திண்பண் டங்கள் தயாரிப்பது மற்றும் தயாரிப்பு தேதி இல்லாமல் விற்பனை செய்வது கண்டு பிடிக்கப்பட்டால் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை பள்ளி கல்வித்துறை சார்பாக உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரோஜா தலைமையில் புகையிலை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை பள்ளி கல்வித்துறை சார்பாக உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சரோஜா தலைமையில் புகையிலை தின உறுதிமொழி எடுக்கப்பட்டது. அலங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலர் மருத்துவர் கார்த்திகா கலந்து கொண்டு புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளும் அதற்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி புகையிலை எதிர்ப்பு தின பேரணியை துவக்கி வைத்தார் இப்பேரணியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாலமுரளி பாபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சிவக்குமார் சிவானந்தன் ஆசிரியர்கள் சண்முகசுந்தரம் பிரியா கார்த்திக் மற்றும் மாணவ மாணவிகள் இப் பேரணியில் கலந்து கொண்டனர்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
    • முதற்கட்டமாக நேற்று முதல் 4.8.2023 வரை 611 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரி மைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நேற்று முதல் 4.8.2023 வரை 611 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. 2-வது கட்டமாக 5.8.2023 முதல் 16.8.2023 வரை 303 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

    இதனைத்தொடர்ந்து, நேற்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி பேரூராட்சி சமு தாய கூடம் மற்றும் வேலூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை கலெக்டர் டாக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளின் போது, விண்ணப்பங்க ளைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி, விண்ணப் பங்கள் பதிவேற்றம் செய்யும் உள் ளிட்ட பணிகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் விண்ணப்ப பதிவு முகாமில் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர், மின் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முகாம் பொறுப்பு அலுவ லர்கள் உறுதி செய்திடல் வேண்டு மெனவும், ஆவ ணங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்திட வேண்டும் என அலுவ லர்க ளுக்கு கலெக்டர் டாக்டர் உமா அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆதிதிரா விடர் நல அலுவலர் சுகந்தி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச் செல்வி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×