என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாமக்கல்:

    ஆடி மாதம் 2-வது வெள்ளிக் கிழமையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    சந்தனகாப்பு

    நாமக்கல் பலப்பட்டறை மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல், செல்லாண் டியம்மன் கோவில், வண் டிக்காரன்தெரு பகவதி யம்மன் கோவில், அன்புநகர் சுய வேம்பு மாரியம்மன் கோ வில், கொண்டிசெட்டிபட்டி காளியம்மன் கோவில், மாருதிநகர் மகா மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    ராசிபுரம்

    ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவிலில் வளையல் அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராத னைகள் நடைபெற்றது. எல்லை மாரியம்மன் கோவில், அங்காள பர மேஸ்வரி அம்மன் கோவில், அழியா இலங்கை அம்மன் கோவில், அத்தனூர் மாரியம்மன் கோவில்களிலும் அம்ம னுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

    பரமத்திவேலூர்

    இதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள நன்செய் இடை யாறு மகா மாரி யம்மன், செல்லாண்டி யம்மன், மகாமாரியம்மன், பேட்டை மாரியம்மன், பகவதி யம்மன், கொந்தளம் மாரியம்மன், பாண்ட மங்கலம் மாரியம்மன், பகவதியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளை யம் பகவதி அம்மன், பர மத்தி அங்காள பரமேஸ்வரி அம்மன், ஆனங்கூர் மாரி யம்மன், செல்லாண்டி அம்மன், வடகரை யாத்தூர் பகவதிஅம்மன் கோவில்களில் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். சேந்த மங்கலத்தில் பச்சு டையாம்பட்டி காளியம்மன் கோவில், கொல்லி மலை நாச்சியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்க ளில் சிறப்பு வழி பாடு மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

    எருமப்பட்டி

    எருமப்பட்டி அருகே பொட்டிரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கன்னி மார் கோவிலில் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி சாமிக்கு மலர் அலங்காரங்கள் செய்யப் பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் பொட்டி ரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வருகின்ற ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.
    • இதையொட்டி டாஸ்மாக் மது கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வருகின்ற ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    விடுமுறை

    இந்த நிலையில் விழா நடைபெறும் நாட்க ளான ஆகஸ்ட் 1, 2 மற்றும் 3-ந் தேதிகளில் கொல்லிமலை பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை விட மாவட்ட கலெக்டர் உமா மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    இதை தொடர்ந்து கொல்லி மலையில் உள்ள செங்கரை, சோளக்காடு, செம்மேடு, காரவள்ளி, அடிவாரம் பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு 1,2,3 தேதிகளில் விடுமுறை அளித்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கமலக்கண்ணன் உத்தரவிட்டு உள்ளார். 

    • தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி வகுப்பு கள் இலவசமாக நடத்தப் பட்டு வருகிறது.
    • பயிற்சி பெற்ற மாணவர்கள் 2022-ம் ஆண்டு சீருடைப்பணியா ளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர், காவலர் தேர்வில் 17 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் செயல் பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், பல்வேறு போட்டித் தேர்வு களுக்கான பயிற்சி வகுப்பு கள் இலவசமாக நடத்தப் பட்டு வருகிறது.

    22 பேர் தேர்ச்சி

    இங்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் 2022-ம் ஆண்டு சீருடைப்பணியா ளர்கள் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 5 பேர், காவலர் தேர்வில் 17 பேர் என 22 பேர் தேர்ச்சி பெற்று தற்போது அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.

    இதேபோல டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் 17 பேர் நல்ல மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றுள்ளனர். குரூப்-2-ல் 34 பேர் முதல்நிலை தேர்வு எழுதி உள்ளனர்.

    இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா கூறியதாவது:

    போட்டி தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவல கத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை அளிக்கப்படு கிறது. வாரந்தோறும் 2 தேர்வு நடத்தப்படுகின்றன. தேர்விற்கான பாடக்குறிப்பு கள், அன்றாட பயிற்சி தாள்கள் மாண வர்களுக்கு அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு கள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    கொல்லிமலை அருகே வாழவந்தி நாடு ஊராட்சி கரையாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (51). விவசாயியான இவர் நேற்று தோட்டத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த கரடி அவரை தாக்கியது. இதில் காயமடைந்த அவர் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை நாமக்கல் ஆர்.டி.ஓ. சரவணன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை பெற்று வரும் பழனிசாமி உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார். அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • பரமத்திவேலூர் பேட்டையில் திருஞானசம்பந்தர் மடாலயம் உள்ளது. இந்த மடாலயத்தில் சம்பவத்தன்று இரவு சிவனடியார்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
    • 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆம்ளிபார், மைக் மற்றும் உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    பரமத்திவேலூர் பேட்டையில் திருஞானசம்பந்தர் மடாலயம் உள்ளது. இந்த மடாலயத்தில் சம்பவத்தன்று இரவு சிவனடியார்கள் இரவு தூங்கிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. சிவனடியார்கள் காலையில் எழுந்து பார்த்தபோது அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்த்துவதற்காக வைக்கப்பட்டிருந்த ஆம்ளிபார், மைக் மற்றும் உபகரணங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர். இவரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல்-சேலம் சாலை தனியார் மருத்துவமனை பின்புறம் சிலர் சூதாடுவதாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
    • மேலும் சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.20,600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல்-சேலம் சாலை தனியார் மருத்துவமனை பின்புறம் சிலர் சூதாடுவதாக நாமக்கல் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடி கொண்டிருந்த நாமக்கல் பழையபாளையத்தை சேர்ந்த கமலகண்ணன் (47), வீசாணம் சந்திரகுமார் (42), தூசூர் வீரகுமார் (38), வெள்ளாளத்தெரு அருள் (50), கிழக்கு வீதி மணிராஜ் (26), கோம்பை தெரு பாஸ்கர் (40) ஆகிய 6 பேரை பிடித்து போலீசார் கைதுசெய்தனர். மேலும் சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.20,600 பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • விசைத்தறி கூடத்தின் மேலாளராக வேலை பார்த்து வரும் சித்திக் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பெட்டி பெட்டியாக வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
    • இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 21 பெட்டிகளில் பல்வேறு மதுவகைகளை கொண்ட 704 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    குமாரபாளையம்:

    வெப்படை போலீசார் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியில் சட்ட

    விரோதமாக மதுவிற்பனை செய்வது குறித்து போலீசா ருக்கு தொடர்ந்து புகார் வந்தன. இந்நிலையில் வால்ராசபாளையம் பகுதி யில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் போலீசார் அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தின் மேலே உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.

    அப்போது விசைத்தறி கூடத்தின் மேலாளராக வேலை பார்த்து வரும் சித்திக் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பெட்டி பெட்டியாக வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 21 பெட்டிகளில் பல்வேறு மதுவகைகளை கொண்ட 704 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் போலியா னதா அல்லது அரசு மதுபான கடை பாட்டில்களா என்பது குறித்து சேலம் ரசாயன ஆலைக்கு சோதனைக்காக போலீசார் அனுப்பி உள்ளனர்.

    • மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரி
    • பல்வேறு ஊர்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    ராசிபுரம்:

    மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் வன்முறையை கண்டித்தும், அங்குள்ள பா.ஜ.க. ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோரியும் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் போராட்டம் நடத்தினர்.

    இந்தப் போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் பாச்சல் சீனிவாசன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஸ்ரீ ராமலு முரளி முன்னிலை வகித்தார்.

    இதில் ராசிபுரம் வட்டார தலைவர் கணேசன், வெண்ணந்தூர் வட்டாரத் தலைவர் சொக்கலிங்க மூர்த்தி, பேரூராட்சி தலைவர்கள் நாமகிரிப்பேட்டை இளங்கோ, பிள்ளாநல்லூர் சண்முகசுந்தரம், வெண்ணந்தூர் சிங்காரம், அத்தனூர் பூபதி, நகராட்சி கவுன்சிலர் லலிதா பாலு, குருசாமிபாளையம் பேரூராட்சி கவுன்சிலர் கந்தசாமி, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கோபால், மாநில மகளிர் காங்கிரஸ் நிர்வாகி மகேஸ்வரி, வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சண்முகம், ராசிபுரம் நகர காங்கிரஸ் நிர்வாகிகள் மாணிக்கம், பழனிசாமி, மதுரை வீரன், கோவிந்தராஜ், ஜெயபால் ராஜ், சேக் உசேன் பலர் கலந்து கொண்டனர்.

    பரமத்திவேலூர்

    இதேபோல் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி சார்பில் பொத்தனூர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பரமசிவம், காந்தி, மாவட்ட பொருளாளர்கள் மணி, குப்புசாமி, கபிலர்மலை, பரமத்தி மற்றும் மோகனூர் வட்டார தலைவர்கள் நடராஜன், முத்துசாமி, குப்புசாமி, பரமத்தி வட்டாரத் தலைவர் சந்திரன் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஓமலூர்

    சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையத்தில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க மற்றும் மணிப்பூர் பா.ஜ.க அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் மூத்த நிர்வாகி மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மெழுகு தீபம் ஏந்தி மத்திய பா.ஜ.க. அரசையும், மணிப்பூர் பா.ஜ.க அரசையும் கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து 1 மணி நேரமாக மெழுகு தீபம் ஏந்தி போராட்டம் நடத்தினர்.

    • பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார்.
    • காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல் பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி விவசாயி, இவர் தனது விவசாய தோட்டத்தில் கருப்பு சாகுபடி செய்திருந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கரும்பை அறுவடை செய்த பின் விவசாய தோட்டத்திலேயே கரும்பு தோகைகளை போட்டிருந்தார். காய்ந்து போன கரும்பு தொகைகளுக்கு தீ வைத்துள்ளார்.

    அப்போது காற்று பலமாக வீசியதால் அருகில் விவசாயம் செய்யப்படாமல் பல்வேறு செடி கொடிகள் முளைத்து காய்ந்து இருந்த செடிகளில் தீ பரவியது. அப்பகுதியில் இருந்த பொது மக்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் வேகமாக அருகில் இருந்த தோட்டத்துக்கும் பரவியது. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததனர்.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகில் உள்ள விவசாய தோட்டங்களுக்கு பரவாமல் தடுத்தனர் இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
    • கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது.

    பள்ளிபாளையம்:

    பள்ளிபாளையம் ஆண்டிகாடு பகுதியில் அளவு குறைவாக கான்கீரிட் சாலை போடப்பட்டது. இது குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. கலெக்டர் உத்தரவால் நேற்று மீண்டும் கான்கீரிட் சாலை சீரமைக்கப்பட்டது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலரும், கொ.ம.தே.க., நாமக்கல் மேற்குமாவட்ட துணை செயலாளருமான சாமி கூறியதாவது:- பள்ளிபாளையம் நகராட்சி 8-வது வார்டில் ஆண்டிகாடு பகுதியில் 14 லட்சத்தில் சுமார் 200 மீ. துாரத்திற்கு கான்கீரிட் சாலை கடந்த 25 நாட்களுக்கு அமைக்கும் பணி நடந்தது.அமைக்கப்பட்ட கான்கீரிட் சாலை உயரம் குறைவாக உள்ளதால், கலெக்டருக்கு ஆதாரத்து டன் புகார் அனுப்பினேன். கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து சமந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து கான்கீரிட் சாலையை ஆய்வு செய்தனர். நேற்று, 5 செ.மீ., உயரத்திற்கு அதிகரித்து மீண்டும் சாலையை சீரமைத்தனர். இவ்வாறு அவர் கூறினார்.

    • இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் செஞ்சுடையாம் பாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஒன்றில் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில். போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செஞ்சுடையாம்பாளை யத்தில் உள்ள பிரேம்குமார் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்டுள்ள மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 கிலோ எடையுள்ள பான் மசாலா,குட்கா, ஹான்ஸ் , பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் பிரேம்குமார் (29) என்பவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
    • பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு பஞ்சாயத்து பகுதியில் காபி, அன்னாசி பழம், வாழை, மிளகு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு குரங்குகள், முயல்கள், நரிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வாழவந்திநாடு பஞ்சாயத்து கரையன்காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனிசாமி (51), காளி (70). இவர்கள் இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

    வழக்கம்போல் இருவரும் இன்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் வழியாக தோட்ட வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    காளியம்மன் கோவில் அருகே சென்றபோது மறைந்திருந்த கரடி, அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. முகம், கை, கால் , கழுத்து, உடல் உள்ளிட்ட பகுதிகளில் குடித்து குதறியது. இதனால் நிலைகுலைந்த இருவரும் படுகாயங்களுடன் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செம்மேடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவம் நடந்த வனப்பகுதியில் கரடியை பிடிப்பதற்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 2 பேரை கரடி கடித்து குதறிய சம்பவத்தால் வாழவந்திநாடு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    ×