என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • படிப்பில் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகளிலும் ரூபிகா சிறந்து விளங்கி பரிசுகள் பெற்று தங்களுக்கும், தங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்தார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிப்பட்டி கிராமத்தை சேர்ந்த அய்யனார். இவரது மனைவி கற்பகவள்ளி. இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

    கணவன், மனைவி 2 பேரும் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது 3 குழந்தைகளும் ஆசாரிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இதில் மூத்த மகள் ரூபிகா (வயது14) ஆசாரிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் முத்துசங்கிலிபட்டி கிராமத்தில் உள்ள சில தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    பணிகள் முடிவடைந்ததும் பணிகள் மதிப்பீடு, திட்டம் குறித்த விவரங்கள் எழுதப்பட்ட விளம்பர சுவர் கட்டப்பட்டது. இந்த சுவரின் அடித்தளம் உறுதியாக அமைக்காமல் வெறும் செங்கல், சிமெண்டு மூலம் தரமற்று இருந்துள்ளது.

    இந்நிலையில் ரூபிகா சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். முத்து சங்கிலிபட்டி தெருவில் நுழைந்த போது அங்கு வைக்கப்பட்டு இருந்து ஒப்பந்த பணி விளம்பர சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

    அந்த சுவர் ரூபிகாவின் மீது விழுந்ததை தொடர்ந்து அவர் வலியால் அலறினார்.

    இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் மாணவியை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவியின் கால்களை பரிசோதித்த டாக்டர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறினர்.

    இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியின் கால்களில் பிளேட் வைக்கப்பட்டு, மாவுக்கட்டு போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    அரசு பணிக்காக வைக்கப்பட்ட சுவர் இடிந்து விழுந்து கால்கள் முறிந்து வீட்டில் கடந்த 15 நாட்களாக மாணவி படுத்தபடுக்கையாய் உள்ள நிலையில், இது குறித்து சம்பந்தபட்ட ஒப்பந்தகாரரோ, அரசு அதிகாரிகளோ இதுவரை வந்து விசாரணை கூட நடத்தவில்லை என்று மாணவியின் பெற்றோர் கண்ணீர்மல்க தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் தெரிவிக்கையில், தங்கள் மகளுக்கு உரிய சிகிச்சை அளித்து அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டரிடமும் புகார் அளித்துள்ளோம்.

    படிப்பில் மட்டுமின்றி பல்வேறு விளையாட்டுகளிலும் ரூபிகா சிறந்து விளங்கி பரிசுகள் பெற்று தங்களுக்கும், தங்கள் கிராமத்திற்கும் பெருமை சேர்த்தார். ஆனால் தற்போது அவர் படுத்த படுக்கையாய் கிடப்பதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கூலி வேலை பார்க்கும் எங்களால் தற்போது வேலைக்கும் செல்ல முடியவில்லை. எங்களது மகள் பூரண நலம் பெற்று எழுந்து நடப்பாரா என்றும், பழையபடி படிப்பு மற்றும் விளையாட்டுகளில் பங்கேற்க முடியுமா? என்றும் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே ரூபிகாவின் மருத்துவ செலவை அரசு ஏற்று அவரை பழைய நிலைக்கு கொண்டுவர உதவவேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். 

    • பொங்களாயி அம்மன் திருவிழா பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
    • கோவில் வளாகத்தில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உள்பட பொதுமக்கள் அசைவ உணவை வாங்கி சாப்பிட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையாம்பட்டி கிராமம் போதமலை அடிவாரத்தில் உள்ள ஆலமரத்தடியில் பிரசித்தி பெற்ற மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் உள்ளது. இதன் திருவிழா வருடந்தோறும் ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து வருவது வழக்கம். பொங்களாயி அம்மன் திருவிழா பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    வழக்கம்போல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பொங்களாயி அம்மன் மலர்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. மேலும் மலர்களால் மலர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. வாழை, தேங்காய் குலைகள், தோரணங்கள் கட்டப்பட்டு மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை நாதன் பூசாரி செய்தார்.

    பொங்களாயி அம்மனுக்கு நடந்த பூஜையில் பெண்கள் பங்கேற்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். அசைவ அன்னதானம் வழங்குவதற்காக 12 மூட்டை பச்சரிசியை கொண்டு பொங்கல் தயாரித்தனர்.

    அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக 177-க்கும் மேற்பட்ட ஆடுகளை கொண்டு வந்து பலியிட்டனர். அவ்வாறு பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சிகளை விடிய விடிய பெரிய பெரிய பாத்திரங்களில் வைத்து சமைத்தனர். அவ்வாறு சமைக்கப்பட்ட ஆட்டு இறைச்சியை பொங்கல் சாதத்துடன் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு இன்று (திங்கட் கிழமை) காலை 6 மணி முதல் வழங்கினர். கோவில் வளாகத்தில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உள்பட பொதுமக்கள் அசைவ உணவை வாங்கி சாப்பிட்டனர். இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இதில் வடுகம், பட்டணம், புதுப்பட்டி, ராசிபுரம், புதுப்பாளையம், ஒடுவன்குறிச்சி, வடுகம் முனியப்பம்பாளையம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, மெட்டாலா, ஆயில்பட்டி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு மேல் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தர்மக்கர்த்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.
    • விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மேட்டுக்காடு அருந்ததியர் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன் (24), கூலி தொழிலாளி. இவரது உறவினர் அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (21). இவர்கள் 2 பேரும் நேற்று முத்துக்காளிப்பட்டி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு கறி விருந்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    பின்னர் கறி விருந்தை முடித்துக் கொண்டு அவர்கள் 2 பேரும் மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர். இரவு 9.30 மணியளவில் அவர்கள் ராசிபுரம்-ஆண்டகளூர் கேட் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே இருந்த வளைவில் சாலையோரத்தில் இருந்த தடுப்பு சுவரில் அவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து மோதியது.

    இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். பிரபாகரன் காயத்துடன் உயிருக்கு போராடினார். இதுபற்றி தெரியவந்ததும் ராசிபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த பிரபாகரனை மீட்டு சிகிச்சைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் பலியானார்.

    இதையடுத்து விபத்தில் பலியான சுரேஷ், பிரபாகரன் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து ராசிபுரம் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
    • ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், வட கரையாத்தூர் ஊராட்சி ஜேடர்பாளையம் அருகே பள்ளாபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தமிழ் வழி கற்போம் என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

    பயிற்சி மையம்

    பயிற்சி மையத் தொடக்க விழாவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் கலந்து

    கொண்டு தமிழ் மொழி கற்போம் திட்டத்தின் சிறப்புகள் குறித்து விளக்கி பேசினார்.

    வட்டார கல்வி அலுவலர் சுரேஷ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா, மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கி ணைப்பாளர் ஈஸ்வரன், வடகரையாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா குணசேகரன், கபிலர்மலை துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்கல்வி

    பயிற்சி மையத்தில் வடகரையாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கரும்பு ஆலைகளில் பணிபுரியும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறப்பு பயிற்சி மையத்தில் தொடர் கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பயிற்சி மைய தொடக்க விழாவிற்கான ஏற்பாடுகளை கபிலர்மலை வட்டார பள்ளி செல்லா குழந்தைகளின் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி செய்திருந்தார்.

    • காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்க ளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • நாமக்கல்லில் அதிகபட்ச மாக ரு. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் நகரில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்கத்து மாவட்டங்க ளில் இருந்தும் அதிகளவில் காய்கறிகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தக்காளி விலை

    இந்த நிலையில் தமி ழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது. நாமக்கல்லில் அதிகபட்ச மாக ரு. 140 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. மேலும் காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது.

    இதனால் ஏழை, மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் தக்காளி வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் பெரும்பாலான வீடுகளில் தக்காளி வாங்குவதை நிறுத்தி விட்டனர். விலை குறைவாக விற்கப்பட்ட போது கிலோ கணக்கில் தக்காளியை வாங்கி சென்ற பொதுமக்கள் தற்போது விலை உயர்வின் காரணமாக கிராம் கணக்கில் தக்காளியை வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    தங்கத்தை போல் தக்காளி விலையும் தினமும் அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது. ஆனாலும் முதல் ரக தக்காளி 100 ருபாய்க்கு கீழ் குறையாமல் இருந்து வருகிறது.

    ரூ.200-க்கு விற்பனை

    நாமக்கல்லில் இன்று ஞாயிற்றுக்கிழமை என்ப தால் இதுவரை இல்லாத அளவுக்கு தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ தக்காளி ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. நாமக்கல் பார்க் ரோடு பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளில் தக்காளி ரூ.200-க்கு விற்கப்பட்ட தால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் நாமக்கல் உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்டது. அதுவும் சிறிது நேரத்திலேயே விற்று தீர்ந்து விட்டது.

    சேலம்

    இதேபோல் சேலத்தில் இன்று 1 கிலோ தக்காளி ரூ.140 முதல் ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது.

    • 16-வது வார்டில் உள்ள செயல் படாத பொதுக்கழிப்பிடத் திற்கு முன்பு அப்பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவு பொருட்களை கொட்டப் பட்டு வருகின்றனர்.
    • குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் இப்பகுதியிலேயே குப்பைகளை டன் கணக்கில் சேகரித்து பேரூராட்சி தூய்மை பணியாளர் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருவள்ளு வர் சாலையில், வணிக நிறு வனங்கள் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகம், மற்றும் 100க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டில் உள்ள செயல் படாத பொதுக்கழிப்பிடத் திற்கு முன்பு அப்பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவு பொருட்களை கொட்டப் பட்டு வருகின்றனர்.

    தீ வைத்து எரிப்பு

    பேரூராட்சி நிர்வாகம் பழைய பை-பாஸ் அருகில் உள்ள குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லாமல் இப்பகுதியிலேயே குப்பைகளை டன் கணக்கில் சேகரித்து பேரூராட்சி தூய்மை பணியாளர் மூலம் தீ வைத்து எரிக்கப்பட்டு வருகின்றன.

    அதுபோல் நேற்று மாலை அதிக அளவில் குப்பைகளை சேகரித்து தீ வைத்ததில் காற்றின் காரணமாக தீ மள மள பரவி வேகமாக எரிய தொடங்கியது. இதன் காரணமாக கரும் புகையால் அப்பகுதியில் புகைமூட்டம் போல் ஆனது. இதனால் அப்பகுதியில் உள்ள குடி யிருப்பு வாசிகள் உடனே தங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து தீயை தண்ணீரை ஊற்றி அணைக்கமுயற்சித்தனர்.

    மேலும் தூய்மை பணியா ளர்களும் தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சித் தும் தீயை அணைக்க முடி யாததால் கரூர் மாவட்டம் புகலூர் தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீ அனைத்து கட்டுப்படுத்தி தீ அருகி லுள்ள வீடுகள், கடைகள், பத்திரப்பதிவு அலுவலகம் ஆகிய பகுதிகளில் பரவா மல் தவிர்க்கப்பட்டது.

    மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள், வணிக நிறுவனங்கள் வைத்திருக்கும் கடை உரிமையாளர்கள் கூறுகை யில் பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் பேரூ ராட்சி மூலம் சேகரிக்கப்படும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், கழிவு பொருட் கள், கெட்டுப்போன, அழு கிய பழங்கள், காய்கறிகள் ஆகியவைகளை கொண்டு வந்து இப்பகுதியில் கொட்டி தீ வைப்பது தொடர்கதை யாகவே இருந்து வருகிறது.

    பலமுறை பேரூராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இதேபோல் தீ வைத்து எரித்து வருகின்றனர். இத னால் எங்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    மேலும் தீ வைப்பதால் புகை மூட்டத்தால் எங்கள் குழந்தைகளுக்கு மூச்சு திண றலும் பல்வேறு விதமான நோய்களும் ஏற்படுகிறது. ஆகையால் மாவட்ட நிர்வா கம் உடனடியாக தலையிட்டு குடியிருப்பு , பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளபகுதி அருகே குப்பைகள் கொட்டா மல் தீ வைக்காமல் பாது காக்க வேண்டும்.

    இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

    • முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.
    • கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.20 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதே போல முட்டைக்கோழி கிலோ ரூ.73-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர்.

    எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.78 ஆக அதிகரித்து உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்தமுடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.103 ஆக அதிகரித்து உள்ளது.

    • அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஜங்கலாபுரத்தை சேர்ந்தவர் அங்கமுத்து (73), இவரது மனைவி சர்மிளா, மகன் சக்திவேல். அங்கமுத்து நாமக்கல்லில் உள்ள லாரி பட்டறையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல்-சேலம் சாலையில் நடந்து செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானார். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அங்கமுத்து இறந்துவிட்டார்.

    • 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது.
    • கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு தினந்தோறும் முனியப்பசாமிக்கு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மண்டலாபிஷேக 48-வது நாள் நிறைவு விழா நடைபெற்றது.‌

    நாமக்கல்:

    பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள சேளூர் சாணார்பாளையத்தில் சுமார் 60 அடி உயரமுள்ள திருப்பதி முனியப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு தினந்தோறும் முனியப்பசாமிக்கு கட்டளைதாரர்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. மண்டலாபிஷேக 48-வது நாள் நிறைவு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு முனியப்பசாமிக்கு யாகவேள்வி பூஜையும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனையும், பிரசாதம் வழங்குதலும், அன்னதானமும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை சேளூர் சாணார்பாளையம் திருப்பதி முனியப்பசாமி கோயில் விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்

    • திருச்செங்கோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சாரதா சமதி இணைந்து நடத்தும் 23-ம் ஆண்டு 18 மகா திருவிழாக்கு பூஜை கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடந்தது.
    • 1008 பெண்கள் கலந்து கொண்டு குங்குமம் மற்றும் மலர்களால் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை செய்து வணங்கினார்கள் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மீக உரையாற்றினார்.

    திருச்செங்கோடு:

    உலக நன்மைக்காகவும் வன்முறை ஒழியவும் சகோதரத்துவம் நிலவும் சகிப்புத்தன்மை ஓங்கவும் சர்வ மத நல்லிணக்கம் ஏற்படவும் மழை வேண்டியும் நவகிரக தோஷ நிவர்த்திக்காகவும் திருச்செங்கோடு அருள்நெறி வார வழிபாட்டு திருக்கூட்டமும் திருச்செங்கோடு திருவிளக்கு பூஜை விழா கமிட்டியும் திருச்செங்கோடு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆசிரமம் சாரதா சமதி இணைந்து நடத்தும் 23-ம் ஆண்டு 18 மகா திருவிழாக்கு பூஜை கைலாசநாதர் கோவில் சொக்கப்ப முதலியார் அரங்கத்தில் நடந்தது. இதில் 1008 பெண்கள் கலந்து கொண்டு குங்குமம் மற்றும் மலர்களால் போற்றி பாடல்கள் பாடி திருவிளக்கு பூஜை செய்து வணங்கினார்கள் திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு ஆன்மீக உரையாற்றினார்.நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, உறுப்பினர்கள் கார்த்திகேயன், பிரபாகரன், அருணா சங்கர், அர்ஜுனன், தியாகராஜன், விசாகவேல், பரமசிவம் சாமி, லட்சுமண சாமி, மயில் முருகேசாமி, நீலமேகம், ஆசிரியர் மணி, ராஜேஷ்வரன், மீனாட்சி ரவிச்சந்திரன், ரேணுகா லட்சுமண சாமி, உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

    • பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளில் பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.
    • வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, ஓலப்பாளையம், குச்சிபாளையம், பாலப்பட்டி, மோகனூர், குப்புச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அனிச்சம் பாளையம், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம் வெங்கரை, பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லிக் கோவில், தி.கவுண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், பச்சநாடன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.

    வாழைத்தார்

    வாழைத்தார் விளைந்த வுடன் கூலி ஆட்கள் மூலம் வெட்டி உள்ளூர் பகுதி களுக்கு வரும் வியாபாரி களுக்கும், பரமத்தி வேலூ ரில் செயல்பட்டு வரும் தினசரி வாழைத்தார் ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வாழைத்தார்களை வாங்கி செல்வதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து வாழைத்தர்களை வாங்கி செல்கின்றனர்.

    வாங்கிய வாழைத்தார் களை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப் பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.450-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.250-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.500-க்கும் ஏலம் போனது.

    வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.700-க்கு விற்பனையானது.

    • எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.
    • மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருச்செங்கோடு:

    எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் பஸ்நிறுத்தத்தில் எலச்சி பாளையம் சப்-இன்ஸ் பெக்டர் ராமச்சந்தி ரன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் சிக்கி னார். அப்போது அங்கு வந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின்னாக பேசினார்.

    சந்தேகமடைந்து போலீ சார் விசாரித்த போது அவர் சேலம் மாவட்டம், பெரியசீரகாபாடியைச் சேர்ந்த மோகன்குமார் (39) என்பதும், அவர், எலச்சிபா ளையம் அருகே மோர்பா ளையம் பிரிவு சாலையில் உள்ள ஒரு செல்போன் கடையில் கடந்த 18-ந் தேதி 10 செல்போன்களை திருடிச் சென்றதும் தெரிய வந்துள் ளது.

    கைது

    மேலும் அவரிடம் இருந்த 10 செல்போன்களையும் பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×