என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் கிராமத்தில் அமைந்துள்ள பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் பெண்கள் 501 திருவிளக்கேற்றி மகாலட்சுமி பூஜை, திருவிளக்கு பூஜை, மஞ்சள் பூஜை, குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து பூஜைகள் செய்தனர்.

    உலக மக்கள் அமைதி வேண்டியும், மாணவர்கள் கல்வி செல்வம் பெருகவும், மாதம் மும்மாரி மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடி இன்றி நலமுடன் வாழவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையின் போது புரோகிதர்கள் பக்தி பாடல் பாடிய போது திருமணமான பெண்கள், இளம் பெண்கள் அருள் வந்து பக்தி பரவசத்துடன் ஆடினர். அவர்களை உறவினர்கள், கோவில் பூசாரிகள், திருநீர், எலுமிச்சம்பழம் கொடுத்து அமைதிபடுத்தினர். இந்த பூஜையில் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

    • பொத்தனூரில் உள்ள பொன்னாச்சியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பொன்னாச்சியம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் யாக வேள்வி நடந்தது.
    • அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் உள்ள பொன்னாச்சியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பொன்னாச்சியம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் யாக வேள்வி நடந்தது. கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    அதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் ,கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • ஆலையின் அரவை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    கரும்பு அரவை

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலையின் அரவை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பருவத்திற்கு இதுவரை 4,270 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டு இதுநாள் வரை ஆலையின் அரவைக்கு பதிவு செய்யாத விவசாயிகள், அந்தந்த பகுதி கோட்ட கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்ற 15-ம் தேதிக்குள் விடுபடாது பதிவு செய்துகொள்ளலாம்.

    சொட்டுநீர் பாசனம்

    கரும்பு விவசாயிகளுக்கு நடப்பாண்டில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 375 எக்டர் பரப்பளவில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்பு நடவு செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதத்திலும் அரசு மானியம் வழங்கப்படுகிறது.

    நடவு பருவத்தில் அதிக அளவில் அகல பார் முறையில் 4.5 அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு முன்பதிவு செய்து பயன்பெறலாம். எனவே கரும்பு விவசாயிகள் அனைத்து அரசு திட்டங்களையும், பயன்பெற உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்யலாம்.

    கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைமை கரும்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு முழுவதுமாக கரும்பு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • இதற்கு முன்பு இவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் பணிபுரிந்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் பணிபுரிந்தார். திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக தீபா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இதற்கு முன்பு பணிபுரிந்தார். திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன் மற்றும் தீபா ஆகியோரை திருச்செங்கோடு நகர முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சங்கத் தலைவர்கள், போலீசார், பொதுமக்கள், பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ இன்று ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டை கள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு களுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்க ளுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக்கொள் முதல் விலை ரூ. 5.50 ஆக இருந்தது. ஜூலை மாதம் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 28-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக இருந்தது. நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள் முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை- 480, பர்வாலா-363, பெங்களூர்-465, டெல்லி-379, ஹைதராபாத்-420, மும்பை-480, மைசூர்-465, விஜய வாடா-440, ஹொஸ்பேட்-425, கொல்கத்தா-480.

    கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ இன்று ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. கடந்த 26-ந் தேதி 93 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 105 ரூபாயாக உயர்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.12 அதி கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழா ‌ நாளை மறுநாள் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
    • இதை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மற்றும் ராசிபுரம் பஸ் நிலையங்களில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    சேலம்:

    ஆடி மாத பவுர்ணமியையொட்டி இன்று அதிகாலை முதல் திரு வண்ணாமலையில் கிரிவல ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று இரவு முதல் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஆடிப்பெருக்கு விழா

    மேலும் கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழா நாளை மறுநாள் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மற்றும் ராசிபுரம் பஸ் நிலையங்களில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    மேலும் ஆடிப்பெருக்கு பண்டிகைையயொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து நாளை முதல் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மேட்டூர், பவானி கூடுதுறை, கொடுமுடி, மோகனூர், பூலாம்பட்டி, கல்வடங்கம், ஓகேனக்கல், அம்மாப்பேட்டை நீர்ப்பத்

    துறை, கே.ஆர்.பி. அணைக் கட்டு ஆகிய பகுதிகளுக்கும் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விடுப்புக்கு தடை

    மேலும் சிறப்பு பஸ்கள் தங்கு தடையின்று இயங்கும் வகையில் அனைத்து டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியா ளர்கள் ,அலுவலக பணியாளர்களுக்கு வார விடுப்பு உள்பட அனைத்து விடுப்புகளும் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே விடுப்பில் சென்றவர்கள் உடனடியாக பணியில் இணையும்படி அந்தந்த கிளை மேலாளர்கள் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அனைத்து தொழிலா ளர்க ளும் நேற்று முதல் 6-ந் தேதி வரை பணியில் தொடரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.
    • இந்நிலையில் பழைய பாலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய குழிகள் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தையும், கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள், லாரி கள், கார்கள், இருசக்கர வாக னங்கள் என ஏராளமான வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன.

    இந்நிலையில் இந்த பாலம் கட்டப்பட்டு 66 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பாலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய குழிகள் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது.

    இதனால் வாகனங்கள் தொடர்ந்து தடுமாறி செல்கின்றன. இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

    இந்த பழைய பாலத்தின் வழியாக சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

    எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் நெடுகிலும் ஏற்பட்டுள்ள குழிகளை சீரமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • நாட்டமங்கலம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஏழூர் முதல் குருசாமிபாளையம் செல்லும் சாலையின் தரம் மற்றும் கணத்தினை ஆய்வு செய்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் ராசிபுரம் பராமரிப்பு கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் மற்றும் திட்டம் சாரா பணிகளை சேலம் நெடுஞ்சாலை துறை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் ஒரு பகுதியாக நாட்டமங்கலம் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ஏழூர் முதல் குருசாமிபாளையம் செல்லும் சாலையின் தரம் மற்றும் கணத்தினை ஆய்வு செய்தார். மேலும் ராசிபுரம் நெடுஞ் சாலை உட்கோட்டத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் சாலை அகலப்படுத்தி மேம்பாடு செய்தல், புறவழிச் சாலை பாலப்பணிகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார். சாலை பரா மரிப்பு பணி களான பாலம் சுத்தம் செய் யும்பணியினை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கி னார். நிகழ்ச்சியில் கோட்ட பொறியாளர் திரு குணா, ராசிபுரம் நெடுஞ் சாலை கட்டுமானம் மற்றும் பரா மரிப்பு உதவி கோட்ட பொறி யாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர் மணிகண் டன்ஆகியோர் கலந்து கொண்டனர். 

    • நாதன் (65) கூலித் தொழிலாளி இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
    • இந்த நிலையில் நேற்று காலை நாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    திருச்செங்கோடு பால்மடை காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாதன் (65) கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிகிறது. இவரது 2-வது மகன் பிரபு அதே பகுதியில் உள்ளதாகவும் அவர் தந்தையை பராமரித்து வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை நாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது.
    • காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது.

    ராசிபுரம்:

    சேலம் மேற்கு தபால் கோட்டத்திற்கு உட்பட்ட ராசிபுரம் தபால் நிலையம் வழக்கமாக காலை 9.30 மணி முதல் பகல் 2.30 மணி வரை சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று முதல் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை (12 மணி நேர சேவை) தபால் துறையின் வங்கி தொடர்பான சேவைகளும், இதர அனைத்து தபால் சேவைகளையும் வழங்கும் பணி தொடங்கியது. இதற்காக கூடுதலாக ஒரு கவுண்டர் திறக்கப்பட்டுள்ளது. 3 ஷிப்ட் ஆக பிரித்து ஊழியர்களை பணி அமர்த்தி இரவு 8 மணி வரை செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்பகல் 2.30- க்கு பிறகும் தபால் நிலையத்திற்கு மக்கள் வந்து சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தலாம்.இனிமேல் ராசிபுரம் தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு, தொடர் வைப்பு கணக்கு, குறித்த கால வைப்பு கணக்கு, மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கு, மாதாந்திர வருமான கணக்கு, அடல் பென்ஷன் திட்டம், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பரிவர்த்தனைகள், விரைவு தபால் பார்சல் சேவை அயல்நாட்டு தபால் சேவை, மணியாடர் சேவை ஆகிய அனைத்தும் இரவு 8 மணி வரை வழங்கப்படும்.இந்த தகவலை சப் - போஸ்ட்மாஸ்டர் ஹெலன் செல்வராணி, உட்கோட்ட ஆய்வாளர் சரவணன், உதவி சப்-போஸ்ட் மாஸ்டர் நிர்மலா, பி.எல்.ஐ. வளர்ச்சி அதிகாரி சிவகுமார் ஆகியோர் தெரிவித்தனர்.

    • முருகன் இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர்.
    • இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    நாமக்கல்:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர். முருகன் குடும்பத்தினர் முறுக்கு வியாபாரம் செய்து வந்தனர். இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சமையல் அறையில் கயிறு மூலம் மாரிச்செல்வி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாரிச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
    • மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பள்ளி மாணவ மாணவிகள் ஓட்டுநர் உரிமம், பழகுநர் உரிமம் இல்லாமல் மோட்டார் வாகனம் ஓட்டினால் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 2019 சட்டப்பிரிவு 199-ஏ படி பெற்றோர்கள் பாதுகாவலர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் வாகனம் 12 மாதங்களுக்கு சாலையில் ஓடுவது ரத்து செய்யப்படும். வாகனம் ஓட்டிய சிறுவர்கள் 25 வயது வரை எந்த வாகன ஓட்டுநர் உரிமமும் பெற இயலாது. எனவே பெற்றோர்கள், பொதுமக்கள் இதில் கவனம் செலுத்தி தங்களது குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா தெரிவித்து உள்ளார்.

    ×