என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதியவர் தற்கொலை
- நாதன் (65) கூலித் தொழிலாளி இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார்.
- இந்த நிலையில் நேற்று காலை நாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்செங்கோடு பால்மடை காமாட்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாதன் (65) கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். இவரது மனைவி மற்றும் மூத்த மகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிகிறது. இவரது 2-வது மகன் பிரபு அதே பகுதியில் உள்ளதாகவும் அவர் தந்தையை பராமரித்து வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை நாதன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






