நாமகிரிப்பேட்டையில் முறுக்கு வியாபாரி மனைவி தற்கொலை

முருகன் இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர்.இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நாமகிரிப்பேட்டையில் முறுக்கு வியாபாரி மனைவி தற்கொலை
Published on

நாமக்கல்:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கிராமம் சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரிச்செல்வி (34). கடந்த 10 வருடங்களாக அவர்கள் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியில் குடியிருந்து வருகின்றனர். முருகன் குடும்பத்தினர் முறுக்கு வியாபாரம் செய்து வந்தனர். இதற்கிடையில் கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று அதிகாலையில் சமையல் அறையில் கயிறு மூலம் மாரிச்செல்வி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாரிச்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com