என் மலர்
நாமக்கல்
- மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
- அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்
பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் கோவிலில் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
மலர் அலங்காரம்
அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரை அருகே உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், பரமத்தி வேலூர் பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதிஅம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் ஆடி 18 பண்டிகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
- மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி ஆடி 1-ந் தேதி முதல் தொடங்கியது.
- இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி ஆடி 1-ந் தேதி முதல் தொடங்கியது. நிகழ்ச்சியில் மகாபாரத கதையில் வரும் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் போன்று அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையான இன்று துரியோதனனை பீமன் வதம் செய்து அதில் இருந்து வரும் ரத்தத்தை எடுத்து திரவுபதி தனது கூந்தலில் தடவிய பின்னரே கூந்தலை முடிந்து கொள்ளுவதோடு இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை எடுத்துக்கூறும் வகையில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. போரில் வெற்றி பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து நிகழ்ச்சிக்காக பயன்படுத்திய ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சுத்தம் செய்து வெற்றியை கொண்டாடும் வகையில் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி் நடைபெற்றது.
- நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் கொண்டு சந்தோஷ் தனது நண்பனை பார்ப்பதற்காக வெப்படைக்கு சென்றார்.
- வெப்படை தெற்கு பாளையம் சாலையில் சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வந்தபோது பின்னால் நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பினார்.
பள்ளிப்பாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அலமேட்டை சேர்ந்தவர் சந்தோஷ். இம்மாணவன் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்கு செல்லாமல் தனது தந்தையின் மோட்டார்சைக்கிளை எடுத்துக் ெகாண்டு சந்ேதாஷ் தனது நண்பனை பார்ப்பதற்காக வெப்படைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினார்.
அப்போது வெப்படை தெற்கு பாளையம் சாலையில் சந்தோஷ் மோட்டார்சைக்கிளில் வந்தபோது பின்னால் நந்தகுமார் என்பவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை கவனிக்காமல் திரும்பினார். அப்போது மோட்டார்சைக்கிள் மீது நந்தகுமார் என்பவரின் இருசக்கர வாகனம் ேமாதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சந்ேதாஷ் சாலையில் உள்ள தடுப்பு சுவரில் தலை மோதி படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு சந்தோஷை பள்ளிப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இந்த விபத்து சம்பவம் குறித்து பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளி மாணவன் சந்தோஷ், மோட்டார்சைக்கிள் ஓட்டி விபத்துக்குள்ளான வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ காட்சி பதை பதைக்க வைக்கும் வகையில் உள்ளது.
- கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர்.
- இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கவர்ச்சி திட்டம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இந்த தம்பதி கடந்த 2010-ம் ஆண்டு முதல் திருசெங்கோடு தெற்கு ரதவீதியில் உள்ள வடிவேலன் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தினர். இந்த நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பணம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் மோகன்ராஜ் -செந்தமிழ்செல்வி இறந்த நிலையில் அவரது மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகியோர் இந்த நிதி நிறுவனத்தை கவனித்து வந்தனர்.
இந்த நிதி நிறுவனத்தில் கவர்ச்சிகரமான திட்டத்தில் சேர்ந்து பணத்தை இழந்த அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (41) மற்றும் 97 முதலீட்டாளர்கள் நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி சவுந்தர்யா - தமிழ்கண்ணன் தம்பதி மீது மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்
இதேபோல் திருச்செங்கோடு கச்சேரி சாலை அருளகம் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 79). இவரது மனைவி செல்லம்மை (75).
இந்த தம்பதியின் மகன் அருணாச்சலம்(45), மருமகள் சொர்ணமாலா (38) மற்றும் சோமசுந்தரத்தின் மகள்கள் காந்திமதி (54) , வள்ளியம்மை (50) ஆகிய 6 பேர் வீட்டில் சோமசுந்தரம் செட்டியார் நிதி நிறுவனம் என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் பல்வேறு கவர்ச்சி திட்டங்களை கூறி பணம் பெற்றுள்ளனர்.
இது குறித்து அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவருடைய மனைவி துர்காதேவி (43) நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். இதே போல் மேலும் 11 முதலீட்டாளர்கள் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் விசாரணை நடத்தி நிதி நிறுவனத்தை கவனித்து வந்த அவர்கள் 6 பேர் மீதும் ேமாசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தகவல் தெரிவிக்கலாம்
இந்த 2 நிதி நிறுவனங்களிலும் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரிடையாக வந்து காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை புகார் அளிக்கலாம்.
இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், அதில் கூறியுள்ளார்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
- இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 27.78 குவிண்டால் எடை கொண்ட 85-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.80.40-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.35-க்கும், சராசரி விலையாக ரூ.78.30-க்கும் என ரூ 2 லட்சத்து 16ஆயிரத்து 348-க்கு விற்பனையானது.
- பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
- முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பரமத்தி வேலூர்:
பரமத்திவேலூர் தாலுகா ராமதேவம் கிராமத்தில் அமைந்துள்ள பொன் காளியம்மன் கோவிலில் ஆடி பவுர்ணமி முன்னிட்டு கோவிலை சேர்ந்த அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் 501 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ பொன்காளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதைத் தொடர்ந்து அனைத்து குடிப்பாட்டு மக்கள் சார்பில் பெண்கள் 501 திருவிளக்கேற்றி மகாலட்சுமி பூஜை, திருவிளக்கு பூஜை, மஞ்சள் பூஜை, குங்குமம், மலர்களால் அர்ச்சனை செய்து பூஜைகள் செய்தனர்.
உலக மக்கள் அமைதி வேண்டியும், மாணவர்கள் கல்வி செல்வம் பெருகவும், மாதம் மும்மாரி மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மக்கள் நோய் நொடி இன்றி நலமுடன் வாழவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிளக்கு பூஜையின் போது புரோகிதர்கள் பக்தி பாடல் பாடிய போது திருமணமான பெண்கள், இளம் பெண்கள் அருள் வந்து பக்தி பரவசத்துடன் ஆடினர். அவர்களை உறவினர்கள், கோவில் பூசாரிகள், திருநீர், எலுமிச்சம்பழம் கொடுத்து அமைதிபடுத்தினர். இந்த பூஜையில் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
- பொத்தனூரில் உள்ள பொன்னாச்சியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பொன்னாச்சியம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் யாக வேள்வி நடந்தது.
- அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் உள்ள பொன்னாச்சியம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு, பொன்னாச்சியம்மனுக்கு லட்சார்ச்சனை மற்றும் யாக வேள்வி நடந்தது. கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
அதேபோல் பரமத்திவேலூர் பேட்டை மகா மாரியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூர் செல்லாண்டியம்மன், புது மாரியம்மன், பேட்டை பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன் ,கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ஆலையின் அரவை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கரும்பு அரவை
நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நடப்பு ஆண்டு அரவைப் பருவத்திற்கு 2.50 லட்சம் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆலையின் அரவை வருகிற நவம்பர் மாதத்தில் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பருவத்திற்கு இதுவரை 4,270 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே நாமக்கல் மாவட்டத்தில் கரும்பு பயிரிட்டு இதுநாள் வரை ஆலையின் அரவைக்கு பதிவு செய்யாத விவசாயிகள், அந்தந்த பகுதி கோட்ட கரும்பு அலுவலர்களை தொடர்பு கொண்டு வருகின்ற 15-ம் தேதிக்குள் விடுபடாது பதிவு செய்துகொள்ளலாம்.
சொட்டுநீர் பாசனம்
கரும்பு விவசாயிகளுக்கு நடப்பாண்டில் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 375 எக்டர் பரப்பளவில் மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் மூலம் கரும்பு நடவு செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதத்திலும், இதர விவசாயிகளுக்கு 75 சதவிகிதத்திலும் அரசு மானியம் வழங்கப்படுகிறது.
நடவு பருவத்தில் அதிக அளவில் அகல பார் முறையில் 4.5 அடி இடைவெளியில் கரும்பு நடவு செய்து சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கு முன்பதிவு செய்து பயன்பெறலாம். எனவே கரும்பு விவசாயிகள் அனைத்து அரசு திட்டங்களையும், பயன்பெற உரிய ஆவணங்களுடன் முன்பதிவு செய்யலாம்.
கூடுதல் விவரங்கள் பெறுவதற்கு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைமை கரும்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவைக்கு முழுவதுமாக கரும்பு வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
- இதற்கு முன்பு இவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் பணிபுரிந்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு டவுன் இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு இவர் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் பணிபுரிந்தார். திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக தீபா பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இதற்கு முன்பு பணிபுரிந்தார். திருச்செங்கோடு இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன் மற்றும் தீபா ஆகியோரை திருச்செங்கோடு நகர முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், சங்கத் தலைவர்கள், போலீசார், பொதுமக்கள், பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
- பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ இன்று ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டை கள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடு களுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்க ளுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.
கடந்த ஜூன் 30-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக்கொள் முதல் விலை ரூ. 5.50 ஆக இருந்தது. ஜூலை மாதம் பல்வேறு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து கடந்த 28-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.20 ஆக இருந்தது. நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள் முதல் விலை ரூ.4.10 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்): சென்னை- 480, பர்வாலா-363, பெங்களூர்-465, டெல்லி-379, ஹைதராபாத்-420, மும்பை-480, மைசூர்-465, விஜய வாடா-440, ஹொஸ்பேட்-425, கொல்கத்தா-480.
கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ இன்று ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. கடந்த 26-ந் தேதி 93 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை படிப்படியாக உயர்ந்து தற்போது 105 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதனால் கடந்த 6 நாட்களில் மட்டும் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.12 அதி கரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.
- கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழா நாளை மறுநாள் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.
- இதை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மற்றும் ராசிபுரம் பஸ் நிலையங்களில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
சேலம்:
ஆடி மாத பவுர்ணமியையொட்டி இன்று அதிகாலை முதல் திரு வண்ணாமலையில் கிரிவல ஊர்வலம் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று இரவு முதல் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆடிப்பெருக்கு விழா
மேலும் கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழா நாளை மறுநாள் 3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதை ஒட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் சேலம் மற்றும் ராசிபுரம் பஸ் நிலையங்களில் இருந்து 25 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும் ஆடிப்பெருக்கு பண்டிகைையயொட்டி சேலம் கோட்டத்தில் இருந்து நாளை முதல் 200-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் மேட்டூர், பவானி கூடுதுறை, கொடுமுடி, மோகனூர், பூலாம்பட்டி, கல்வடங்கம், ஓகேனக்கல், அம்மாப்பேட்டை நீர்ப்பத்
துறை, கே.ஆர்.பி. அணைக் கட்டு ஆகிய பகுதிகளுக்கும் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடுப்புக்கு தடை
மேலும் சிறப்பு பஸ்கள் தங்கு தடையின்று இயங்கும் வகையில் அனைத்து டிரைவர், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியா ளர்கள் ,அலுவலக பணியாளர்களுக்கு வார விடுப்பு உள்பட அனைத்து விடுப்புகளும் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விடுப்பில் சென்றவர்கள் உடனடியாக பணியில் இணையும்படி அந்தந்த கிளை மேலாளர்கள் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அனைத்து தொழிலா ளர்க ளும் நேற்று முதல் 6-ந் தேதி வரை பணியில் தொடரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.
- இந்நிலையில் பழைய பாலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய குழிகள் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டத்தையும், கரூர் மாவட்டத்தையும் இணைக்கும் வகையில், கடந்த 1957-ம் ஆண்டு காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தனியார் மற்றும் அரசு பேருந்துகள், லாரி கள், கார்கள், இருசக்கர வாக னங்கள் என ஏராளமான வாகனங்கள் இரவு, பகலாக சென்று வருகின்றன.
இந்நிலையில் இந்த பாலம் கட்டப்பட்டு 66 ஆண்டுகளுக்கு மேல் ஆனதன் காரணமாக அதன் அருகே புதிய பாலம் கட்டப்பட்டது. இந்நிலையில் பழைய பாலத்தில் நெடுகிலும் சுமார் 13-க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய குழிகள் பாலத்தின் குறைக்கே ஏற்பட்டுள்ளது.
இதனால் வாகனங்கள் தொடர்ந்து தடுமாறி செல்கின்றன. இரவு நேரத்தில் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் குழிகள் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் சில நேரங்களில் உயிரிழக்கும் ஆபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்த பழைய பாலத்தின் வழியாக சிரமப்பட்டு வாகனங்களை ஓட்டிச் செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் நெடுகிலும் ஏற்பட்டுள்ள குழிகளை சீரமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






