என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது.
    • இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது.

    மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வேலை நாட்களில் பணிக்கு செல்லும்போது அல்லது பணியிலிருந்து திரும்பும் பொழுது தங்களுக்கு தேவையான அஞ்சல் சேவைகளை தடையின்றி பெறலாம். சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துதல் பதிவு தபால்களை அனுப்புதல், மணி ஆடர்களை அனுப்புதல் , அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களை செலுத்துதல் போன்ற சேவைகளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அஞ்சல் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாமக்கல் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து திருச்செங்கோடு தலைமை அஞ்சலகத்திலும் இந்த சேவை விரிவுபடுத்தபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி திருச்செங்கோடு தலைமை அஞ்சல் அதிகாரி உதயகுமார் மற்றும் துணை அஞ்சலக அதிகாரி தீபா முன்னிலையில் தொடங்கியது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அஞ்சல் உட்கோட்ட அதிகாரி ரமேஷ் மற்றும் சங்ககிரி அஞ்சல் உட்கோட்ட அதிகாரி நவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    • நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது.
    • தங்களது பெயர்களை செதுக்குவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மலைக்கோட்டை அதன் பொலிவை இழந்து வருகிறது.

    நாமக்கல்:Namakkal District News,

    நாமக்கல் நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை உள்ளது. இக்கோட்டையின் ஒருபுறம் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மர் கோவில்கள் உள்ளன. அதுபோல, கோட்டையின் மற்றொரு புறம் ரங்கநாதர் சந்நிதி உள்ளது.

    மலைக்கோட்டையின் கீழ்ப் பகுதியில் குளம் மற்றும் பூங்கா உள்ளது. புராதன சிறப்பு வாய்ந்த மலைக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள கோயில், குளம் ஆகியவற்றின் அழகைக் கண்டு ரசிக்க தினசரி ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர்.

    விடுமுறை நாட்களில் மலைக்கோட்டைக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கமான நாட்களை விட அதிகம் இருக்கும்.

    அவ்வாறு வரும் மக்கள் மலைக்கோட்டைக்கு சென்று பழமை வாய்ந்த திப்புசுல்தான் கோட்டை, ஆயுதக் கிடங்கு, குளம், தானியக் கிடங்கு உள்ளிட்ட இடங்களைக் கண்டு மகிழ்வர். இந்நிலையில், மலைக்கோட்டைக்கு மக்கள் அதிகளவில் வந்தாலும் அங்கு பாதுகாப்பு வசதி குறைவாக உள்ளதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதவது:-

    மலைக்கோட்டை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த காலத்தில் அத்துறை சார்பில் காவலர் ஒருவரை நியமித்து கண்காணிப்புப் பணி மேற்கொண்டு வந்தனர். சில ஆண்டுகளாக அங்கு காவலர் யாரும் இல்லை.இங்கு வருவோர் மலைக்கோட்டை சுவர் மீது எழுதுவது மற்றும் கற்களைக் கொண்டு தங்களது பெயர்களை செதுக்குவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், மலைக்கோட்டை அதன் பொலிவை இழந்து வருகிறது. இதைத் தடுக்க தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அங்குக் காவல் பணிக்கு ஊழியரை நியமிக்க வேண்டும். அதுபோல குற்றச்செயல்கள் நடைபெறாத வகையில் கண்காணிப்பு ,கேமரா வைக்க வேண்டும் என்றனர்.

    • கொல்லிமலையில்‌ நடை பெற்ற வல்வில்‌ ஓரி நிறைவு விழாவில்‌ கலெக்டர் டாக்டர் உமா, சேந்த மங்கலம்‌ எம்.எல்.ஏ. பொன்னுசாமி முன்னிலை வகித்தனர்.
    • விழாவில் 437 பயனாளிகளுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் நடை பெற்ற வல்வில் ஓரி நிறைவு விழாவில் கலெக்டர் டாக்டர் உமா, சேந்த மங்கலம் எம்.எல்.ஏ. பொன்னுசாமி முன்னி லையில் 437 பயனாளி களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    வில்வித்தை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கலைநிகழ்ச்சிகள் நடத்திய கலை குழுவினர் மற்றும் மாணவ, மாண வியர்களுக்கு, சிறந்த அரங்கங்கள் அமைத்த அரசு துறையினருக்கு சான்றி தழ் மற்றும் கேடயங்களை வழங்கினார்.வல்வில் ஓரி விழாவில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு துறைகளின் கண்காட்சி அரங்குகளை கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    தொடர்ந்து வல்வில் ஓரி அரங்கில் சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற தப்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், கொக்கலி யாட்டம், மயிலாட்டம், மான்கொம்பு, பழங்குடியினர் நடனம், சிலம்பாட்டம், பரத நாட்டியம், தெருகூத்து,

    சேர்வை ஆட்டம், கொல்லிமலையில் சுற்றுலா முக்கியத்துவம் குறித்த நாடகம், பள்ளி மாணவ, மாணவியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கலெக்டர் உமா பார்வையிட்டார்.

    கொல்லிமலை வட்டம், செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில் வருவாய் துறை சார்பில் 24 பயனாளி களுக்கு ரூ.4.80 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், கூட்டுறவுத் துறை சார்பில் 96 பயனாளி களுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.64.51 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவி களையும், மகளிர் திட்டம் சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.98.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 24 பயனாளிகளுக்கு ரூ.28.31 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தோட்டக்கலைத் துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.69,150/- மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.843/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில் 8 பயனாளிகளுக்கு ரூ.17,960/- மதிப்பிலான நலத்திட்ட உதவி களையும், பழங்குடியி னர் நலத்துறை சார்பில் 45 பயனாளி களுக்கு நலவாரிய உறுப்பினர் அட்டைகளும், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் 138 பழங்குடியின மாணவிகளுக்கு ரூ.50,000/- மதிப்பில் ஸ்வெட்டர்க ளையும் என மொத்தம் 437 பயனாளி களுக்கு ரூ.3.20 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

    மேலும், வல்வில் ஓரி மற்றும் சுற்றுலா விழாவில் நடைபெற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட 17 பள்ளிகளை சேர்ந்த 427 மாணவ, மாண வியர்களுக்கும், 360 கலைஞர்க ளுக்கும், வல்வில் ஓரி அரங்கில் அமைக்கப்பட்ட 22 அரசுத்துறைகளின் பணி விளக்க கண்காட் சியில், சிறப்பாக அரங்கம் அமைத்த தற்காக முதல் இடம் ெபற்ற வனத்துறைக்கும், 2-ஆம் இடம் பெற்ற காவல் துறைக்கும், 3-ஆம் இடம் பெற்ற ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் ஆகிய துறைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்களையும், தொடர்ந்து, வில்வித்தை போட்டி யில் வெற்றி பெற்ற போட்டியாளர்க ளுக்கும், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிய ருக்கும் கலெக்டர் உமா பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்சிவக்குமார், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, நாமக்கல் வருவாய் ஆர்.டி.ஓ. சரவணன், வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, துணை இயக்குநர் தோட்டக்கலைத் துறை கணேசன், மாவட்ட மேலாளர் தாட்கோ ராமசாமி, பழங்குடியினர் திட்ட அலுவ லர்பீட்டர், மாவட்ட சுற்றுலா அலுவலர் அபராஜிதன், மாவட்ட முன்னோடி வங்கி பொது மேலாளர் முருகன், உதவி இயக்கு நர் பட்டுவளர்ச்சி முத்துப்பாண்டி யன், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) முரு கன், அத்மா குழுத்தலைவர் செந்தில் முருகன், கொல்லி மலை தாசில்தார் அப்பன்ராஜ், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது.
    • முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 8 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் 1-ந்தேதி முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த 1-ந்தேதி ஒரு முட்டையின் விலை ரூ. 4.10 ஆக இருந்தது. நேற்று நடைபெற்ற என்இசிசி கூட்டத்தில் முட்டை விலை 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 480, பர்வாலா 384, பெங்களூரு 465, டெல்லி 398, ஐதராபாத் 405, மும்பை 460, மைசூர் 457, விஜயவாடா 420, ஹொஸ்பேட் 425, கொல்கத்தா 495.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 105 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக் கோழி ஒரு கிலோ ரூ. 78 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

    • ஆண்கள், பெண்கள், மாணவ மாணவிகள் என தனித்தனியாக போட்டி நடந்தது.
    • வெற்றி பெறும் வீரர்களுக்கு வல்வில் ஓரி கோப்பை, ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.

    கொல்லிமலை:

    கொல்லிமலையை ஆண்ட கடை 7 வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின் போது அரசின் சார்பில் விழா நடக்கிறது. இவ்வாண்டு நேற்றும் இன்றும் வல்வில் ஓரி விழா சிறப்பாக நடந்தது.

    நேற்று மலர்கண்காட்சி நிகழ்ச்சி தொடங்கியது. இன்று வல்வில் ஓரி மன்னரின் ஆற்றலை போற்றும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் வில்வித்தை சங்கத்தின் சார்பில் தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டிகள் நடந்தது.

    இப்போட்டி கொல்லிமலை செம்மேடு பஸ் நிலையத்தில் நடந்தது. போட்டியை கலெக்டர் உமா, பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    போட்டிகள் இந்தியன், ரிக்கர்வ், காம்பவுண்ட் என 3 பிரிவுகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் 19 வயதுக்கு மேற்பட்டோர் 7 வயது பிரிவாக ஆண்கள், பெண்கள், மாணவ மாணவிகள் என தனித்தனியாக போட்டி நடந்தது.

    போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் மற்றும் வல்வில் ஓரி கோப்பை ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது. 

    • கடை 7 வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின் போது அரசின் சார்பில் விழா நடக்கிறது.
    • வில்வித்தை சங்கத்தின் சார்பில் தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டிகள்

    கொல்லிமலை:

    கொல்லிமலையை ஆண்ட கடை 7 வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனுக்கு ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கின் போது அரசின் சார்பில் விழா நடக்கிறது. இவ்வாண்டு நேற்றும் இன்றும் வல்வில் ஓரி விழா சிறப்பாக நடந்தது.

    வில்வித்தை போட்டி

    நேற்று மலர்கண்காட்சி நிகழ்ச்சி தொடங்கியது. இன்று வல்வில் ஓரி மன்னரின் ஆற்றலை போற்றும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் வில்வித்தை சங்கத்தின் சார்பில் தென்னிந்திய அளவிலான வில்வித்தை போட்டிகள் நடந்தது.

    இப்போட்டி கொல்லிமலை செம்மேடு பஸ் நிலையத்தில் நடந்தது. போட்டியை கலெக்டர் உமா, பொன்னுசாமி எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    போட்டிகள் இந்தியன், ரிக்கர்வ், காம்பவுண்ட் என 3 பிரிவுகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் 19 வயதுக்கு மேற்பட்டோர் 7 வயது பிரிவாக ஆண்கள், பெண்கள், மாணவ மாணவிகள் என தனித்தனியாக போட்டி நடந்தது.

    போட்டிகளில் தமிழ்நாடு, ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இப்போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்கள் மற்றும் வல்வில் ஓரி கோப்பை ரொக்க பணம் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகிறது.

    விழாவில் அட்மா குழு தலைவர் செந்தில் முருகன், ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் அப்பன் ராஜ், நாமக்கல் மாவட்ட வில்வித்தை சங்கத்தின் தலைவர் கேசவன், அரசு அதிகாரிகள், விளையாட்டு வீரர்கள், சுற்றுலா பயணிகள், மக்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • மரவாபாளையத்தில் பிரபாகரன் (47) என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.
    • சோதனையில் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டாரத்தில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பரமத்தி அருகே உள்ள மரவாபாளையத்தில் பரமத்தி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் மரவாபாளையத்தில் பிரபாகரன் (47) என்பவர் வீட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

    இதனையடுத்து பிரபாகரன், பரமத்தி ஆயில் மில் தெருவை சேர்ந்த சிவா(29), பரமத்தியை சேர்ந்த சதாம் உசேன்(29), சாதிக் பாஷா(22), மரவாபாளையம் குடித்தெருவை சேர்ந்த பவன்குமார்(27), மணிகண்டன் (29) உள்ளிட்ட 6 பேரை பிடித்து சோதனை நடத்தினர். சோதனையில் அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக வெளி மாநில லாட்டரி டிக்கெட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து ரொக்கம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது.
    • அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே உள்ள தாலுகா அலுவலகம் எதிரே தனியார் ஓட்டல் செயல்படுகிறது. இங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில்கள் விற்பதாக பரமத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட தாபா கடைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு திருட்டுத்தனமாக மதுபாட்டில் வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து ஓட்டல் உரிமையாளர் கந்தசாமி( 50) என்பவரை கைது செய்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விரலி ரகம் 1150 மூட்டைகளும், உருண்டை ரகம் 350 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன.
    • மொத்தம் 1550 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 12 லட்சத்துக்கு ஏலம் போன தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.இதில் அரியாக்கவுண்டம் பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

    அதேபோல் ஒடுவன்குறிச்சி, ஈரோடு, சேலம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியா பாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர். இதில் விரலி ரகம் 1150 மூட்டைகளும், உருண்டை ரகம் 350 மூட்டைகளும், பனங்காலி ரகம் 50 மூட்டை களும் கொண்டுவரப்பட்டிருந்தன.

    விரலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 109 முதல் அதிகப்பட்சமாக ரூ.15 ஆயிரத்து 802-க்கும், உருண்டை ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 702-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயி ரத்து 512-க்கும், பனங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 99-க்கும், அதிகப்பட்சமாக ரூ.16 ஆயிரத்து 369-க்கும் ஏலம் விடப்பட்டது.

    மொத்தம் 1550 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 12 லட்சத்துக்கு ஏலம் போன தாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில் அதிக விலைக்கு மஞ்சள் விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிக ளும் அதிக அளவில் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    • 50 செயற்குழு உறுப் பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை
    • நாமக்கல் தாலுகா லாரி உரிமையா ளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பி னர்கள் உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை மைய மாக கொண்டு லாரி உரிமை யாளர்கள் சங்கமாக நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.

    தேர்தல்

    இந்த சங்கத்தின், 2023-26ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கு, சதர்ன் ரீஜன் எல்பிஜி டேங்கர் லாரி உரி மையாளர்கள் சங்கத்தலை வர் சுந்தர்ராஜன் தலைமை யில் தேர்தல் கமிட்டி அமைக்கப் பட்டுள்ளது.

    நிர்வாகிகள் தேர்தல் நடத்துவது சம்மந்த மான, தேர்தல் கமிட்டி உறுப்பினர் கள் ஆலோசனைக் கூட் டம் சங்க அலவலகத்தில் நடைபெற்றது.தேர்தல் குழு தலைவர் சுந்தர்ராஜன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இதில் நாமக்கல் தாலுகா லாரி உரி மையா ளர்கள் சங்கத்தின் 2023-26ம் ஆண்டுக்கான தலைவர், உதவித்தலைவர், செயலா ளர், பொருளாளர், உதவிச் செயலாளர் மற்றும் 50 செயற்குழு உறுப் பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வருகிற செப்டம் பர் மாதம் 10-ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து தேர்தல் குழுத்தலைவர் சுந்தர்ராஜன் கூறியதாவது:- நாமக்கல் தாலுகா லாரி உரிமையா ளர்கள் சங்கத்தில் மொத்தம் 4,445 உறுப்பி னர்கள் உள்ளனர். சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் நடத்த 14 பேர் கொண்ட தேர்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள் ளது. தேர்த லுக்கான வேட்பு மனு தாக்கல் வரும் ஆக. 28, 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. 31-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 1-ந் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசிநாளாகும்.

    அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    வாக்குப்பதிவு

    தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை லாரி உரிமையா ளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெறு கிறது. அன்று இரவு நிர்வா கிகள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    11-ந் தேதி (செப்டம்பர்) காலை செயற்குழு உறுப்பி னர்கள் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்படும். இவ்வாறு சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

    இந்த நிலையில் நாமக்கல் தாலுகா லாரி உரிமை யாளர்கள் சங்க தற்போதைய செயலாளர் அருள் தலைமை யில் ஒரு அணியினரும், தற்போதைய உதவித் தலை வர் சுப்புரத்திணம் தலை மையில் ஒரு அணி யினரும் புதிய நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து, இப்போதே தங்களது ஆதர வாளர்க ளுடன் தீவிர ஓட்டு வேட்டை யில் ஈடுபட்டு வருகின்றனர். 

    • சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கு ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், வேலூர், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோகனூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது.

    இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. சிறு விவசாயிகள் பரமத்தி வேலூர் வாழைத்தார் விற்பனை சந்தைக்கு வாழைத்தார்களை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.350-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.5-க்கும் ஏலம் போனது.

    ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.400-க்கும், பச்சைநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக ரூ.350-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.400-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.7-க்கு விற்பனையானது. ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பூவன் வாழைத்தார்கள் வரத்து அதிகரித்ததால் விலை சரிவுவடைந்துள்ளது.

    • பச்சரி படையலை அங்கிருந்தவர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.
    • பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி ஆற்றிற்கு வந்து குளித்து பிள்ளையார் பிடித்து வழிபட்டனர்

    பரமத்திவேலூர்

    நாமக்கல் மாவட்டம் காவிரி கரையோர பகுதிகளான பரமத்திவேலூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம் தடுப்பணை பகுதி, ஜேடர்பாளையம் பரிசல் துறை, வடகரையாத்தூர், கண்டிப்பாளையம் பரிசல்துறை, ஆனங்கூர், அய்யம்பாளையம், பொன்மலர்பாளையம், கொந்தளம், வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனூர், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவேரி கரையோரம் ஆடி 18 விழா நடைபெற்றது.

    படையல்

    இன்று காலை பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் முளைப்பாரியை கொண்டு வந்து காவிரி ஆற்றில் குளித்து பின்னர் காவிரி கரையோரத்தில் மஞ்சள் பிள்ளையார், மணல் பிள்ளையார் போன்றவற்றை வைத்து தேங்காய், பழம் உடைத்து, மஞ்சள் கயிறு, பச்சரியில் சர்க்கரை கலந்த படையலை சாமிக்கு வைத்து வழிபட்டனர்.

    இந்த பச்சரி படையலை அங்கிருந்தவர்களுக்கு பிரசாதமாக வழங்கினர். மஞ்சள் கயிறை பெரியவர்களும், குழந்தைகளும் கையில் கட்டிக் கொண்டனர்.

    தொடர்ந்து காவிரி ஆற்றங்கரை அருகில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் காவிரி ஆற்றங்கரை மணல் பகுதியில் குடும்பத்தினருடன் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவு பண்டங்களை சாப்பிட்டு அங்கு ஓய்வெடுத்து சென்றனர்.

    முளைப்பாரி

    அதேபோல் ஆனங்கூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் பகுதிக்கு ஆனங்கூர், பாகம்பாளையம், சின்ன மருதூர், கழுவங்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் காவிரி ஆற்றிற்கு வந்து குளித்து பிள்ளையார் பிடித்து வழிபட்டனர்.

    பின்னர் தங்கள் கொண்டு வந்த முளைப்பாரிகளை காவிரி ஆற்றில் விட்டனர்.

    பரமத்திவேலூர் காவிரி

    வேலூர் காவிரி ஆற்றில் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வந்திருந்து புனித நீராடி காவிரி ஆற்றங்கரையில் பிள்ளையார் வைத்து சாமி தரிசனம் செய்தனர்.

    முளைப்பாரியை ஆற்றில் விட்டும், புதுமணத் தம்பதிகள் தாலிக்கயிறை மாற்றிக் கொண்டனர்.

    மதியம் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சியும் விமரிசையாக நடைபெற்றது.

    இதேபோல் இங்கு மோட்ச தீபம் விடும் நிகழ்ச்சி மற்றும் பரிசல் போட்டி நடத்தப்படுவது வழக்கம். இதனை காண சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வருவார்கள்.

    அனுமதி

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் காவிரி ஆற்றில் குளிக்கவும், பூஜைகள் நடத்தவும் மாவட்ட நிர்வாகம், போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் தடை விதித்திருந்தனர்.

    இதனால் பக்தர்களும், பொதுமக்களும் ஏமாற்றம் அடைந்தனர்.

    தற்போது காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் செல்கிறது. இதனால் பூஜை கள் நடத்தவும், பரிசல் போட்டி நடத்தவும் மாவட்ட நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளனர்.

    படகு போட்டி

    இதையடுத்து இன்று மாலை 5 மணியளவில் பரமத்திவேலுார் காவிரியாற்றில் படகு போட்டியும், அதனை தொடர்ந்து மாலை 6 ஆறு மணிக்கு மேல் ஈஸ்வரன் கோவிலில் இருந்து மோட்ச தீபம் கொண்டு வந்து படகில் எடுத்துச் சென்று காவிரியின் நடு ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இதனிடையே பாதுகாப்பு கருதி காவிரி கரையோரத்தில் ஆம்புலன்ஸ் வாகனம், தீயணைப்பு மீட்பு குழுவினர் மற்றும் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    பள்ளிபாளையம்

    பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றில் அதிகாலை 4 மணி முதலே பக்தர்கள் குவிய தொடங்கினர். அவர்கள் காவிரியில் நீராடிய பின்னர் பூஜைகள் செய்து வழிபட்டனர். இங்கு வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலர் செங்கோட்டுவேல் தலைமையில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் பள்ளிபா ளையம் வசந்த நகரில் கண்ணனூர் மாரியம்மன் கோவிலில் ஆடிப்பண்டிகை முன்னிட்டு பொங்கல் வைத்தும், கிடா பலியிட்டும் பக்தர்கள் வழிபட்டனர்.

    ×