என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • மர்மநபர்கள் வேகமாக மொபட் அருகில் சென்று ஜோதி அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தனர்.
    • செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி-கபிலர்மலை செல்லும் சாலையில் வசித்து வருபவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி ஜோதி (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் காலையில் தனது மொபட்டில் பரமத்தி-திருச்செங்கோடு செல்லும் சாலையில் உள்ள ஒத்தக்கடைக்கு இறைச்சி வாங்குவதற்காக சென்றார். பரமத்தியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் அர்த்தனாரிபாளையம் அருகே சென்றபோது அவருக்கு பின்னால் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜோதியை துரத்தினர்.

    மர்மநபர்கள் வேகமாக மொபட் அருகில் சென்று ஜோதி அணிந்திருந்த தாலி செயினை பிடித்து இழுத்தனர். உடனே சுதாகரித்துக் கொண்ட ஜோதி தாலி செயினை கையில் இறுக்கமாக பிடித்துக்கொண்டு மர்மநபர்களிடமிருந்து போராடியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இருப்பினும் மர்மநபர்கள் அவரை விடவில்லை. சாலையில் படுகாயங்களுடன் துடித்துக்கொண்டிருந்த அவரை சரமாரியாக தாக்கி ஜோதியிடம் இருந்து பாதி செயினை மர்மநபர்கள் பறித்துக்கொண்டனர். அவரது அலறல் சத்தம் கேட்டு சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அங்கு திரண்டு வருவதை கண்டதும் மர்ம நபர்கள் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி தலைமறைவாகி விட்டனர்.

    இது குறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஜோதியை காப்பாற்றி 108 ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் வழிப்பறி கொள்ளையர்கள் உருவம் பதிவாகி இருக்கிறதா? என ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் சம்பவ நடந்த பகுதியிலும் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது.
    • இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பான விதிமுறைகள் அடங்கிய பிளக்ஸ் பேனர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வைக்கப்பட்டிருந்தது. இந்த பிளக்ஸ் பேனரை மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் திருநாவுக்கரசு வேலூர் பேரூராட்சி அலுவ லகம் முன்பு வைக்கப்பட்டி ருந்த பிளக்ஸ் பேனரை கிழித்து சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.புகாரின் அடிப்படையில் வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கிழித்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார்.
    • இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த முத்துகாப்பட்டி சேரமாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    கத்திக்குத்து

    இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார். தனது குழந்தைகளை அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பெரியசாமி தங்கி உள்ள வீட்டிற்கு வனிதாவின் சகோதரர் செந்தில்குமரன் (40) சென்று குடும்ப பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இதில் இருவருக்கும் இடைேய திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது செந்தில்குமர னின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    கைது

    இதையடுத்து செந்தில்குமரன் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்னர்.

    இந்த கத்திகுத்து சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்த மங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கரு மாக்கவுண்டம்பாளை யத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 38). பட்டதாரி. இவரது மனைவி காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்த மங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஸ்மிதா (8), வைஸ்ணவ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியை காயத்ரி அவரது குழந்தைகளுடன் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அவரது தந்தை ராஜேந்திரன் வீட்டில் வசித்து வருகிறார். இங்கிருந்து அவரும் அவரது குழந்தைகளும் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.

    இதற்கிடையில் ராஜாவும் அவரது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.

    கத்திக்குத்து

    இந்த நிலையில் ராஜா நேற்று மாலை தனது மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமை விடு முறையையொட்டி கருமாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு போகலாம் என கூறி மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்ரி கணவருடன் சென்றார்.

    அவர்கள் சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகலூர்கேட் சக்தி நகர் அருகில் சென்றபோது மோட்டார்சைக்கிளை ராஜா நிறுத்தி விட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தைகள் எதிரிலேயே காயத்ரியை சரமாரியாக குத்தினார். அதன்பிறகு மகனை அழைத்துக்கொண்டு ராஜா மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த காயத்ரியை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தீவிர சிகிச்சை

    இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆசிரியை காயத்ரியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் காயத்ரிக்கு ெதாடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    தலைமறைவாக உள்ள அவரது கணவர் ராஜாவை ராசிபுரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது.
    • சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் டாக்டர். உமா பங்கேற்று, அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடந்தது.

    ஆலோசனை

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் டாக்டர். உமா பங்கேற்று, அந்தந்த துறை பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். இதையடுத்து புதிய தாலுகா கட்டிடம் கட்டுமான பணியை பார்வையிட்டார். இந்த பணிகளை வருகிற 31-ந் தேதிக்குள் முடித்து, செப். 1-ந் தேதி அலுவலகம் திறப்பு விழா நடத்தும் வகையில் பணிகளை துரிதப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் டாக்டர் உமா நிருபர்களிடம் கூறியதாவது:- நாமக்கல் மாவட்ட அளவில் நடந்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பம் வழங் கும்முகாமில் இதுவரை 2.42 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒவ்வொரு துறை பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பணிகள் துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இது போல் ஒவ்வொரு தாலுகா அலுவலகங்களிலும் ஆய்வு நடைபெற்று வரு கிறது. புதிய தாலுகா அலுவலக கட்டுமான பணிகள் ஆக. 31ல் நிறைவடையும் வகையில் பணிகள் துரிதப் படுத்த அறிவுறுத்தப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார். புதிய தாலுகா அலுவலக கட்டிடம் அருகே பயணியர் மாளிகை யாரும் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் அதை தலைமை தபால் அலுவலகமாக மாற்ற அனுமதி வழங்க வேண்டி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் காமராஜ், சித்ரா, மல்லிகா உள்ளிட்ட பலர் கோரிக்கை கொடுத்தனர்.

    ஆய்வின் போது தாசில்தார் தங்கம், ஆர்.ஐ.க்கள் முருகேசன், கார்த்திகா, வி.ஏ.ஓ. முருகன், செந்தில்குமார், ஜனார்த்தனன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • அய்யனார் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    நாமக்கல்:

    மதுரை மாவட்டம் பெருமாநல்லூரை அடுத்த பேரையூர் பகுதியை சேர்ந்தவர் முக்கராஜ். இவரது மகன் அய்யனார் (வயது 29). கூலி தொழிலாளி.

    இவர் நாமக்கல் ராமாவரம்புதூர் பகுதியில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள மது பாரில் வேலை பார்த்து வந்தார்.

    வழக்கம்போல் நேற்று இரவு மதுபாரில் வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு சுமார் 1 மணி அளவில் அதே பகுதியில் தான் தங்கி உள்ள அறைக்கு சென்றார். அப்போது மது போதையில் 2-வது மாடியில் தடுப்பு சுவரை பிடித்து நின்றவாறு செல்போனில் அய்யனார் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது தடுப்பு சுவர் திடீரென இடிந்தது. இதனால் அய்யனார் நிலைதடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்லதுரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யனார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

    • செந்தில்குமரனின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்னர்.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த முத்துகாப்பட்டி சேரமாதேவி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் பெரியசாமி (வயது 36). இவர் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து லாரிகள் மூலம் கோழி லோடு ஏற்றிச் செல்லும் வேலைக்கு செல்கிறார். இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    இதனிடையே மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பெரியசாமி சேந்தமங்கலம் சாலை மேம்பாலம் அருகே தனியாக வசித்து வருகிறார். தனது குழந்தைகளை அவ்வப்போது மனைவியின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் பெரியசாமி தங்கி உள்ள வீட்டிற்கு வனிதாவின் சகோதரர் செந்தில்குமரன் (40) சென்று குடும்ப பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இதில் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    அப்போது செந்தில்குமரனின் வயிற்று பகுதியில் பெரியசாமி கத்தியால் குத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதையடுத்து செந்தில்குமரன் கொடுத்த புகாரின்பேரில் நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியசாமியை கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்னர்.

    இந்த கத்திகுத்து சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
    • சோதனையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவர்கள் கைது.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மற்றும் போலீசார் பரமத்திவேலூர் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சட்டவிரோதமாக வேலூர் 4 ரோடு, சந்தை பகுதி, செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் மது பாட்டில்களை விற்பனை செய்த வேலூர் கிழக்கு தெரு, தேர் வீதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (39), வேலூர் கந்த நகரை சேர்ந்த மோகன் (65) டிரைவர், பரமத்திவேலூர் அருகே உள்ள வீரணம்பாளையம், தண்ணீர் பந்தல் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (48) மற்றும் பாலப்பட்டி அருகே உள்ள செங்கப்பள்ளியை சேர்ந்த பாரத் (29) ஆகிய 4 பேர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 50 மது பாட்டில்களையும் ஒரு மோட்டார் சைக்கிள், ஒரு ஸ்கூட்டர், ஒரு மொபட் உள்ளிட்ட 3 வாகனங்களையும் பறிமுதல் செய்து, தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.
    • இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கீழேரிப் பட்டியில் நிதி மோசடி செய்த வர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவில் முதலீட்டா ளர்கள் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த தேவனாங்குறிச்சி கிராமம் கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த முத்துகவுண்டர் மகன் மோகன்ராஜ். இவரது மனைவி செந்தமிழ்செல்வி.

    இவர்கள் இருவரும் கடந்த 2010-ம் ஆண்டு திருச்செங் கோடு, தெற்கு ரதவீதியில் நிதி நிறுவனம் தொடங்கி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தனர். இதையடுத்து கீழேரிப்பட்டி பகுதியை சேர்ந்த ஏராள மானோர் இந்த நிதி நிறுவ னத்தில் முதலீடு செய்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்பு மோகன்ராஜ் மற்றும் அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகிய இருவரும் இறந்து விட்டனர். இதையடுத்து நிதி நிறுவனத்தை அவர்களது மகள் சவுந்தர்யா, அவரது கணவர் தமிழ்கண்ணன் ஆகி யோர் நடத்தி வந்ததாக தெரி கிறது.மேலும் முதலீட்டா ளர்களுக்கு முதிர்வு தொகை உள்ளிட்ட வற்றை வழங்காமல் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

    • உலக தாய்ப்பால்‌ வார விழா "தாய்ப்பால்‌ ஊட்டலை சாத்தியமாக்குவோம்‌ பணிபுரியும்‌ பெற்றோரின்‌ வாழ்வில்‌ மாறுதலை உருவாக்குவோம்‌" என்ற தலைப்பில்‌ நடைபெற்றது.
    • தாய்க்கும்‌ சேய்க்கும்‌ பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள்‌ நலனில்‌ அதிக கவனம்‌ செலுத்தி வருகிறார்கள்‌.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா "தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் உமா பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, தாய்க்கும் சேய்க்கும் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தை களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு உலகத் தாய்ப்பால் வாரத்தின் கருத்தாக "தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது

    பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவை யான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் உள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. குழந்தையின் சிறப்பான ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலத்திற்காக பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் எடைக்குறைபாடு உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தையாக வளருவார்கள்.

    தாய்ப்பால் உட்கொள்வ தால் குழந்தைகள், கூர்ந்த அறிவுத் திறன் வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை பிற்காலத்தில் வருவதை தடுக்கிறது. தாய்ப்பால் புகட்டுவதால் தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பின் வரும் இரத்த கசிவு போன்ற ஆபத்து குறைகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் அமைந்துள்ளன. எனவே அனைத்து தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் தாய்ப்பால் தானம் வழங்கிய தாய்மார்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பிரசவித்த தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகங்களையும் கலெக்டர் டாக்டர். உமா தலைமையில் நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் முன்னிலையில் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தாஅருள்மொழி, இணை பேராசிரியர் டாக்டர் சுரேஷ் கண்ணன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணப்பன், குழந்தைகள் நல டாக்டர்மஹாலட்சுமி, மற்றும் தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ மனையில் 150 துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் நோயாளிகளை அழைத்து செல்வது, மருந்து மாத்திரை வாங்கி கொடுப்பது, தூய்மை பணி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

    தர்ணா

    தனியார் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சம்ப ளம் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை 30-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு மருத்துவமனையில் அமர்ந்து தர்ணா போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களுக்கு ரூ.720 என தினக்கூலி அடிப்படையில் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இப்போது ரூ.320 மட்டுமே வழங்கப்படுகிறது. விடுமுறை எடுத்தால் ஒரு நாளைக்கு ரூ.825 வரை பிடித்தம் செய்கின்றனர். எனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    பணிகள் பாதிப்பு

    அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் மருத்து வமனையில் தூய்மை பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது.

    • மகா மாரியம்மன் கோவி லில் பால்குட அபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை மகா மாரியம்மனுக்கு கண பதி ஹோமமும், யாக வேள்ளியும் நடைபெற்றது.
    • மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 100 திருவிளக்கு நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையா றில் மிகவும் பிரசித்தி பெற்ற மகா மாரியம்மன் கோவி லில் பால்குட அபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை காலை மகா மாரியம்மனுக்கு கண பதி ஹோமமும், யாக வேள்ளியும் நடைபெற்றது.மாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் 100 திருவிளக்கு நடைபெற்றது. இரவு கோயில் வளாகம் முன்பு 1008 திருவிளக்கு பூஜையும் நடை பெற்றது. இதில் ஆயிரக்க ணக்கான பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கு பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.

    நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் பக்தர்கள் காவிரியாற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடங்க ளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்த டைந்தனர். பகல் 12- மணிக்கு மகா மாரி யம்மனுக்கு 10,008 பால்குட அபிஷேகம் நடை பெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபி ஷேக ஆராதனை களும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடை பெற்றது. இதில் கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

    ஊஞ்சல் உற்சவம்

    இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடு களை நன்செய் இடையாறு மகா மாரி யம்மன் கோவில் பரம்பரை அறங்கா வலர்கள், எட்டுப் பட்டி ஊர் தர்ம கர்த்தாக்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் பொத்தனூர் மகாபகவதி அம்மன் கோவிலில் 108பால்குட அபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை பம்பை மேளம் முழங்க பால்குடங்க ளுடன் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று பால் குடங்களுக்கு அபி ஷேகம் செய்து பால்குடங்க ளுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தனர்.

    காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் பகவதி அம்ம னுக்கு பாலா பிஷேகமும், திருமஞ்சன அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், அன்னதானமும் நடை பெற்றது. விழாவிற்கான ஏற்பாடு களை பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் பால்குட அபிஷேக விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர்.

    ×