search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "World Breastfeeding Week"

    • உலக தாய்ப்பால்‌ வார விழா "தாய்ப்பால்‌ ஊட்டலை சாத்தியமாக்குவோம்‌ பணிபுரியும்‌ பெற்றோரின்‌ வாழ்வில்‌ மாறுதலை உருவாக்குவோம்‌" என்ற தலைப்பில்‌ நடைபெற்றது.
    • தாய்க்கும்‌ சேய்க்கும்‌ பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள்‌ நலனில்‌ அதிக கவனம்‌ செலுத்தி வருகிறார்கள்‌.

    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா "தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

    விழாவில் கலெக்டர் உமா பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மகளிரும், குழந்தைகளும் நலமுடன் வாழ்ந்தால் மாநிலம் செழிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, தாய்க்கும் சேய்க்கும் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி, மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

    பெண்கள் மற்றும் குழந்தை களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் 2023 ஆம் ஆண்டு உலகத் தாய்ப்பால் வாரத்தின் கருத்தாக "தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம் பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடைபெற்று வருகிறது

    பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவை யான ஊட்டச்சத்துகள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் உள்ளது. தாய்ப்பால் கொடுப்பது தாயின் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. குழந்தையின் சிறப்பான ஆரோக்கியமான வளர்ச்சி, மேம்பாடு மற்றும் உடல் நலத்திற்காக பிறந்தது முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதால் எடைக்குறைபாடு உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாடில்லாத ஆரோக்கியமான குழந்தையாக வளருவார்கள்.

    தாய்ப்பால் உட்கொள்வ தால் குழந்தைகள், கூர்ந்த அறிவுத் திறன் வாய்ந்தவர்களாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்றவை பிற்காலத்தில் வருவதை தடுக்கிறது. தாய்ப்பால் புகட்டுவதால் தாய்மார்களுக்கு பிரசவத்துக்கு பின் வரும் இரத்த கசிவு போன்ற ஆபத்து குறைகிறது. பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரிவிகிதத்தில் அமைந்துள்ளன. எனவே அனைத்து தாய்மார்களும் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் தாய்ப்பால் தானம் வழங்கிய தாய்மார்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பிரசவித்த தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகங்களையும் கலெக்டர் டாக்டர். உமா தலைமையில் நாமக்கல் எம்.எல்.ஏ. ராமலிங்கம் முன்னிலையில் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்தாஅருள்மொழி, இணை பேராசிரியர் டாக்டர் சுரேஷ் கண்ணன், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் குணசேகரன், நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணப்பன், குழந்தைகள் நல டாக்டர்மஹாலட்சுமி, மற்றும் தாய்மார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • இந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு ரோட்டரி சங்கம் சார்பாக விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்வில் கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டாக்டர் திவ்யா,

    ரோட்டரி தலைவர் இளஞ்செழியன், செயலாளர் ரகுநந்தன், முன்னாள் பட்டய தலைவர் மாதவன், டாக்டர் ரியாஸ் அகமது, விருவீடு விக்னேஷ் ரவீந்திரன், அட்வகேட் ஹரிஹரன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பிரசவமான சுமார் 150 தாய்மார்களுக்கு புரோட்டீன் பவுடரும், குழந்தைகளுக்கு 2 செட் உடை மற்றும் நேப்கின்களும் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரசவமான சுமார் 150 தாய்மார்களுக்கு புரோட்டீன் பவுடரும், குழந்தைகளுக்கு 2 செட் உடை மற்றும் நேப்கின்களும் வழங்கப்பட்டது.

    இந்திய மருத்துவச் சங்கம் திண்டுக்கல் கிளை, பெண் மருத்துவர் பிரிவு மற்றும் திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னாள் இணை இயக்குநரும், திண்டுக்கல் காஸ்மாஸ் லயன்ஸ் சங்கத்தலைவருமான அமலாதேவி தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினார்.

    இந்திய மருத்துவச் சங்கத்தலைவர் மகாலட்சுமி, செயலாளர் கிறிஸ்டோபர்பாபு, துணை மருத்துவக் கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உதவி நிலைய மருத்துவர் ராஜாரசூல், குழந்தை நல மருத்துவர் மாலா , மகப்பேறு மருத்துவ சங்க செயலாளர் விஜயா, பொருளாளர் செல்வராணி மற்றும் பெல்லா பிரிமியர் ஹைஜீனிக் புராடக்ஸ் விற்பனை பிரிவு மேலாளர் பெனின்ரை, திண்டுக்கல் லயன்ஸ் சங்க பொருளாளர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மகப்பேறு துறை தலைவர் கீதா செய்திருந்தார்.

    ×