என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • 2 சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள், குளங்கள் மாசடையும்.
    • கிராம சபைக்கூட்டத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    நாமக்கல்:

    குமாரபாளையம் தாலுகாவை சேர்ந்த கிராம மக்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா எலந்தகுட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் அரசு பள்ளி உள்ளன. இந்த பகுதியில் 2 சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அவ்வாறு சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் விவசாய நிலங்கள், குளங்கள் மாசடையும்.

    எலந்தக்கொட்டை, பல்லக்காபாளையம், சவுதாபுரம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகிறோம். எனவே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித் துள்ளனர். 

    • இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர்.
    • வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலுகா மொரட்டுபாளையம் அடுaத்த தொட்டியவளவு பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் கலைச்செல்வன்(28). ஊத்துக்குளி சிவசக்தி நகரை சேர்ந்த சீனிவாசன் மகள் தனலட்சுமி (24).காதலர்களான இருவரும் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளி நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், பாதுகாப்பு கேட்டு நாமக்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து இருவீட்டாரும் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையத்தை சேர்ந்தவர் தங்கராசு (55). ரிக் வண்டி டிரைவர். இவர் சில வருடங்களா கவே உடல் நிலை பாதிக்கப் பட்டு பல்வேறு மருத்துவ மனைகளுக்கு சென்று தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

      இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி னார். பல்வேறு மருத்துவ மனை யில் சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியா காததால் விரக்தியில் இருந்த தங்கராசு நேற்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு உயிருக்கு போராடினார்.

      அதைப் பார்த்த அவரது மனைவி பிரியா(48), கண வரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள் ளார். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரியா ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
      • இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

      பரமத்திவேலூர்:

      சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோ றும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

      இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகு திகளைச் சேர்ந்த விவசாயி கள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர்.

      இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

      தேங்காய்

      இந்த வாரம் நடந்த ஏலத்தில் 50.06 குவிண்டால் எடை கொண்ட 13 ஆயிரத்து 407 தேங்காய் விற்பனைக்கு வந்தது.

      இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலை யாக ரூ.23.90-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.17.65-க் கும், சராசரி விலையாக ரூ.22.55-க்கும் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 263-க்கு விற்பனையானது.

      தேங்காய் பருப்பு

      அதேபோல் 518.04 குவிண்டால் எடை கொண்ட 1069 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.77.60-க்கும், சராசரி விலையாக ரூ.78.55-க்கும் விற்பனையானது.

      2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.78.65-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.60.55-க்கும், சராசரி விலையாக ரூ.75. 75-க்கும் என மொத்தம் ரூ.39 லட்சத்து 3 ஆயிரத்து 429-க்கு விற்பனையானது.

      இதன்படி சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.40 லட்சத்து 14 ஆயிரத்து 692-க்கு விற்பனையானது.

      • 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.
      • கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

      ராசிபுரம்:

      நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 9-வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு கைத்தறி கண்காட்சி மற்றும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை நாமக்கல் கலெக்டர் உமா தொடங்கி வைத்தார்.

      இந்த நிகழ்ச்சியில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க மருத்துவ காப்பீடு அட்டையினை 20 பணியாளர்களுக்கும், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 12 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.10 லட்சம் முத்ரா கடன் உதவிகளையும் வழங்கினார்.

      நிகழ்ச்சியில் கலெக்டர் டாக்டர் உமா பேசியதாவது:-

      கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஆகஸ்டு 7-ந் தேதி தேசிய கைத்தறி தினமாக நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

      கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டையும் நெச வாளர் முத்ரா திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்க ளுக்கு முத்ரா கடன் உதவி களும் வழங்கப்படுகிறது. இதுபோன்று நெசவா ளர்களின் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வரு கிறது. நெசவாளர்கள் இத்திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து சிறப்பாக நெசவுத் தொழில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

      கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவா ளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்தறி துண்டுகள், வேட்டி கள், காட்டன் சேலைகள், காட்டன் கோர்வை சேலைகள், ஜமுக்காளம் இடம்பெற்றுள்ளன.

      நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குனர் பழனி குமார், தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் ஜெயலட்சுமி, கைத்தறித்துறை அலுவ லர்கள், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க பணியா ளர்கள் கலந்து கொண்டனர்.

      தொடர்ந்து ராசிபுரம் நகராட்சி வேலா பூங்கா அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு தவறிய தடுப்பூசி தவணைகளை செலுத்தும் சிறப்பு முகாமினையும் கலெக்டர் உமா பார்வையிட்டார்.

      • தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
      • நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.

      ராசிபுரம்:

      சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 39). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ராதா (33). வீட்டு வேலைக்கு சென்று வந்தார்.

      இந்த தம்பதியினருக்கு கனிஷ்கா (11) என்ற 1 மகளும், கோகுல் (7) என்ற 1 மகனும் உள்ளனர்.

      இந்த நிலையில் ராதா குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையொட்டி கடந்த 3 மாதங்களாக நாமகிரிபேட்டை அருகே உள்ள ஈச்சப்பாறையில் மாமனார் ரமனா (63) குடும்பத்தினருடன் கோவிந்தன், அவரது மனைவி ராதா, குழந்தைளுடன் வசித்து வந்தார்.

      இந்த நிலையில் கோவிந்தனுக்கு மனைவி ராதாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 11 மணியளவில் குடிபோதையில் இருந்த கோவிந்தன், குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்த மனைவி ராதாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு சரமாரியாக தாக்கினார்.

      இதை கண்ட குழந்தைகள் சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அங்கு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராதாவை நாமகிரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்தனர். அப்போது ராதாவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிறகு ராதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

      இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

      இது பற்றி நாமகிரிபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து மனைவியை கொலை செய்த அவரது கணவர் கோவிந்தனை கைது செய்தனர்.

      தூங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவர் அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

      • பணம் வைத்து சூதாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
      • போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தபோது அங்கு பணம் வைத்து சிலர் சூதாடி கொண்டிருப்பது தெரிய வந்தது. அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மணியனூர் பகுதிகளைச் சேர்ந்த சண்முகம் (33), ரங்கநாதன் (35), சக்திவேல் (42), கோபிநாத் (34), லோகநாதன் (44), சந்திரன்( 45) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ஆயிரத்து 200 ரூபாைய பறிமுதல் செய்தனர்.

      • கரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடை பகுதியில் மதுப்பாட்டில்களை வைத்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
      • நல்லூர் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.

      நாமக்கல்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடை பகுதியில் மதுப்பாட்டில்களை வைத்து மது அருந்துவதற்குஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் அங்கு மது அருந்தி கொண்டிருப்பதாகவும் நல்லூர் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று பார்த்தபோது அங்கு பலர் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு மது அருந்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு அனுமதி இன்றி கடையில் அமர்ந்து மது அருந்த அனுமதித்ததாக பெட்டிக்கடை உரிமையாளர் சக்திவேல் (51) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். 

      • திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 61 -வது மகாசபை கூட்டம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
      • கூட்டத்திற்கு சங்க தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார்.

      திருச்செங்கோடு:

      திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 61 -வது மகாசபை கூட்டம் கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். தேர்தல் கமிட்டி நிர்வாகிகள் பழனிசாமி, சோமசுந்தரம், லாரி சங்க செயலாளர் மோகன்ராஜ், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

      சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் தன்ராஜ், திருச்செங்கோடு ரிக் உரிமையாளர்கள் சங்க தலைவர் லட்சுமணன், சங்ககிரி லாரி உரிமையாளர் சங்க தலைவர் கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். செயலாளர் மோகன்ராஜ் ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் செல்வராஜ் வரவு -செலவு கணக்குகளை வாசித்தார். 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் நீட் தேர்வில் சிறப்பிடம் பெற்ற சங்கத்தில் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

      தொடர்ந்து திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மூர்த்தி தீர்மானங்களை வாசித்தார். தமிழக அரசு டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும். காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனே அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்செங்கோட்டில் ஆட்டோ நகர் அமைத்து தர வேண்டும். திருச்செங்கோடு நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்கத்தின் சார்பில் விரைவில் திருச்செங்கோடு சுற்றுவட்ட பாதையில் புதிய பெட்ரோல் பங்க் தொடங்கப்பட உள்ளது என தெரிவித்தனர்.

      கூட்டத்தில் ஆடிட்டர் மாதவன், சட்ட ஆலோசகர் வக்கீல் பரணிதரன், மூத்த உறுப்பினர் அப்பாவு, சக்திவேல் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கினார்கள். திருச்செங்கோடு லாரி உரிமையாளர்கள் சங்க முன்னாள் தலைவர்கள் அனிதா வேலு, பாரி கணேசன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

      • வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன தணிக்கை நடைபெற்றது.
      • இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமை யில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

      திருச்செங்கோடு:

      திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் வாகன தணிக்கை நடைபெற்றது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்வாகன சோதனை யில் ஈடுபட்டனர். இதில் தகுதி சான்று இல்லாமல் இயக்கிய 2 வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து திருச்செங் கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் கூறியதாவது:-

      கடந்த ஜூலை மாதத்தில் தொடர் வாகன தணிக்கை மேற்கொண்டதில் 630 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு 129 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.வரி செலுத்தாத மற்றும் இதர குற்றங்களுக்காக 30 வாகனங்களுக்கு வரியாக ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் விதிக்கப்பட்டது. மேலும் 99 வாகனங்களுக்கு ரூ.10 லட்சத்து 33 ஆயிரத்து 300 இணக்க கட்டணமாக வசூலிக்கப்பட்டது. அதன்படி வரி மற்றும் இணக்க கட்டணமாக மொத்தம் ரூ.12 லட்சத்து 24 ஆயிரத்து 400 அரசுக்கு வருவாயாக ஈட்டப்பட்டுள்ளது. செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியது, சீட் பெல்ட் அணியாதது, சிக்னல்களை மதிக்காமல் முந்தி சென்றது, குடிபோதையில் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக 67 வாக னங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு டிரைவிங் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாக னங்கள் பறிமுதல் செய்யப்படும். அந்த வகையில் தற்போது 2 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

      • பள்ளிபாளையம் வட்டார அளவிலான கபடி போட்டி வெப்படை அருகே உள்ள தனியார் பள்ளியில் நடை பெற்றது.
      • இதில் பள்ளிபாளையம் வட்டார அளவி லான அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

      குமாரபாளையம்:

      நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வட்டார அளவிலான கபடி போட்டி வெப்படை அருகே உள்ள தனியார் பள்ளியில் நடை பெற்றது. இதில் பள்ளிபா ளையம் வட்டார அளவி லான அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளி கள், தனியார் பள்ளிகள் என பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.

      இதில் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி முதலிடத்தை யும், பள்ளிபாளையம் அரசு உதவி பெறும் பள்ளி 2-ம் இடத்தையும் பிடித்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆடல ரசு மற்றும் உடற்கல்வி இயக்குனர் சிவசுப்பிரமணி யம், ஆசிரியர்கள் மணி கண்டன், கவிராஜ், என்.சி.சி அலுவலர் அந்தோணிசாமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் அன்பரசு, பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர் ராஜேந்திரன் மற்றும் ஆசிரியர்கள், வட்டார விளை யாட்டு ஒருங்கி ணைப்பாளர் அப்துல்சமத் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

      • சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது.
      • இப்போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

      நாமக்கல்:

      சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

      ஒளிபரப்பு

      இப்போட்டி குறித்து பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த கோப்பை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லப்பட்டது.

      இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் ஹாக்கி போட்டியை பொது மக்கள் காணும் வகையில் நாமக்கல் மாவட்ட விளை யாட்டுத்துறை சார்பில் நாமக்கல் செலம்ப கவுண்டர் பூங்காவில் எல்.இ.டி. திரை வாயிலாக நேரிலையாக காண்பிக்கப்பட்டது.

      இந்தியா-மலேசியா இடையே நேற்று நடைபெற்ற போட்டியை இந்த எல்.இ.டி. திரையில் ராஜேஷ்குமார் எம்.பி. பொதுமக்களுடன் கண்டு ரசித்தார். இதனை பூங்காவிற்கு வந்திருந்த பொதுமக்களும் ஆர்வத்து டன் கண்டு களித்தனர்.

      இந்நிகழ்ச்சியில் தி.மு.க. கிழக்கு மாவட்ட அவைத் தலைவர் மணிமாறன், டாக்டர் மாயவன், நகராட்சி தலைவர் கலாநிதி, துணை தலைவர் பூபதி, சிவக்குமார் உள்ளிட்ட தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா செய்திருந்தார்.

      ×