search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "die of poison"

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, சோழசிராமணி அருகே உள்ள பொன்னம்பா ளையத்தை சேர்ந்தவர் தங்கராசு (55). ரிக் வண்டி டிரைவர். இவர் சில வருடங்களா கவே உடல் நிலை பாதிக்கப் பட்டு பல்வேறு மருத்துவ மனைகளுக்கு சென்று தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

      இந்த நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பி னார். பல்வேறு மருத்துவ மனை யில் சென்று சிகிச்சை பெற்றும் உடல்நிலை சரியா காததால் விரக்தியில் இருந்த தங்கராசு நேற்று வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு உயிருக்கு போராடினார்.

      அதைப் பார்த்த அவரது மனைவி பிரியா(48), கண வரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள் ளார். அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து பிரியா ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • ஜமீன்இளம்பள்ளி அருகே கரட்டுப்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). விவசாயி.
      • இவருக்கு கை, கால் மூட்டு வலி இருந்து வந்தது. மூட்டு வலி சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வலி சரியாகவில்லை.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜமீன்இளம்பள்ளி அருகே கரட்டுப்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). விவசாயி.

      இவருக்கு கை, கால் மூட்டு வலி இருந்து வந்தது. மூட்டு வலி சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வலி சரியாகவில்லை. இதனால் முருகேசன் விரக்தியில் வீட்டில் இருந்துள்ளார்.

      இந்த நிலையில் சம்ப வத்தன்று தோட்டத்திற்கு வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதன் காரணமாக வயிறு எரிச்சல் ஏற்படுவே சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், முருகேசனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

      அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச் சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து முருகேசனின் மகன் பூபதி (27) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

      ×