மூட்டு வலியால் அவதிப்பட்டவிவசாயி விஷம் குடித்து சாவு

ஜமீன்இளம்பள்ளி அருகே கரட்டுப்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). விவசாயி.இவருக்கு கை, கால் மூட்டு வலி இருந்து வந்தது. மூட்டு வலி சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வலி சரியாகவில்லை.
மூட்டு வலியால் அவதிப்பட்டவிவசாயி விஷம் குடித்து சாவு
Published on

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜமீன்இளம்பள்ளி அருகே கரட்டுப்பாளையம் குடித்தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 53). விவசாயி.

இவருக்கு கை, கால் மூட்டு வலி இருந்து வந்தது. மூட்டு வலி சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் வலி சரியாகவில்லை. இதனால் முருகேசன் விரக்தியில் வீட்டில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் சம்ப வத்தன்று தோட்டத்திற்கு வாங்கி வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை எடுத்து குடித்துள்ளார். இதன் காரணமாக வயிறு எரிச்சல் ஏற்படுவே சத்தம் போட்டு உள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள், முருகேசனை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச் சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகேசன் உயிரிழந்தார். இதுகுறித்து முருகேசனின் மகன் பூபதி (27) நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com