என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெட்டிக்கடையில் மது அருந்த அனுமதித்தவர் கைது
- கரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடை பகுதியில் மதுப்பாட்டில்களை வைத்து மது அருந்திக் கொண்டிருந்தனர்.
- நல்லூர் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடை பகுதியில் மதுப்பாட்டில்களை வைத்து மது அருந்துவதற்குஅனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் அங்கு மது அருந்தி கொண்டிருப்பதாகவும் நல்லூர் போலீசாருக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பெட்டிக்கடைக்கு சென்று பார்த்தபோது அங்கு பலர் மதுபாட்டில்களை வைத்துக்கொண்டு மது அருந்திக் கொண்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அரசு அனுமதி இன்றி கடையில் அமர்ந்து மது அருந்த அனுமதித்ததாக பெட்டிக்கடை உரிமையாளர் சக்திவேல் (51) என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story






