search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கத்திக்குத்தில் காயம் அடைந்தஆசிரியைக்கு தீவிர சிகிச்சை
    X

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஆசிரியை காயத்ரி.

    கத்திக்குத்தில் காயம் அடைந்தஆசிரியைக்கு தீவிர சிகிச்சை

    • காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்த மங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
    • இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கரு மாக்கவுண்டம்பாளை யத்தைச் சேர்ந்தவர் ராஜா (வயது 38). பட்டதாரி. இவரது மனைவி காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்த மங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஸ்மிதா (8), வைஸ்ணவ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு

    இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியை காயத்ரி அவரது குழந்தைகளுடன் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அவரது தந்தை ராஜேந்திரன் வீட்டில் வசித்து வருகிறார். இங்கிருந்து அவரும் அவரது குழந்தைகளும் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.

    இதற்கிடையில் ராஜாவும் அவரது மாமனார் வீட்டுக்கு சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.

    கத்திக்குத்து

    இந்த நிலையில் ராஜா நேற்று மாலை தனது மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளை ஞாயிற்றுக்கிழமை விடு முறையையொட்டி கருமாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு போகலாம் என கூறி மோட்டார்சைக்கிளில் அழைத்துச் சென்றார். அப்போது கணவன்-மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருப்பினும் காயத்ரி கணவருடன் சென்றார்.

    அவர்கள் சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகலூர்கேட் சக்தி நகர் அருகில் சென்றபோது மோட்டார்சைக்கிளை ராஜா நிறுத்தி விட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குழந்தைகள் எதிரிலேயே காயத்ரியை சரமாரியாக குத்தினார். அதன்பிறகு மகனை அழைத்துக்கொண்டு ராஜா மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த காயத்ரியை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தீவிர சிகிச்சை

    இது பற்றி தகவல் அறிந்த ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஹேமாவதி, சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆசிரியை காயத்ரியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். ஆஸ்பத்திரியில் காயத்ரிக்கு ெதாடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    தலைமறைவாக உள்ள அவரது கணவர் ராஜாவை ராசிபுரம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    Next Story
    ×