என் மலர்
நீங்கள் தேடியது "namakkaldistrict: சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலை A statue of Duryodhana about 100 feet long"
- மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி ஆடி 1-ந் தேதி முதல் தொடங்கியது.
- இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும்
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் மகா மாரியம்மன் கோவில் வளாகத்தில் மகாபாரத கதை பாடும் நிகழ்ச்சி ஆடி 1-ந் தேதி முதல் தொடங்கியது. நிகழ்ச்சியில் மகாபாரத கதையில் வரும் பாண்டவர்கள் மற்றும் கவுரவர்கள் போன்று அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வேடமணிந்து கதைக்கு ஏற்றால் போல் நடித்தும், நடனமாடியும் பாரத போரின் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கதை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மாரியம்மன் கோவில் முன்பு மண்ணால் சுமார் 100 அடி நீளத்தில் துரியோதனனின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆடி 18 பண்டிகையான இன்று துரியோதனனை பீமன் வதம் செய்து அதில் இருந்து வரும் ரத்தத்தை எடுத்து திரவுபதி தனது கூந்தலில் தடவிய பின்னரே கூந்தலை முடிந்து கொள்ளுவதோடு இறுதியில் தர்மமே வெல்லும் என்பதை எடுத்துக்கூறும் வகையில் நிகழ்ச்சி நிறைவு பெற்றது. போரில் வெற்றி பெற்ற கலைஞர்கள், நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து நிகழ்ச்சிக்காக பயன்படுத்திய ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்று காவிரி ஆற்றில் சுத்தம் செய்து வெற்றியை கொண்டாடும் வகையில் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் நிகழ்ச்சி் நடைபெற்றது.






