வெண்ணந்தூர் அருகே ரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது.நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
வெண்ணந்தூர் அருகே ரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
Published on

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி கூட்டுறவு சங்க வளாகத்தில் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் சார்பில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் வெண்ணந்தூர், நடுப்பட்டி, சவுதாபுரம், மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, மின்னக்கல், அத்தனூர், தேங்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் பருத்தியை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். பல பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகளும் பருத்தியை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர்.நேற்று நடந்த பருத்தி ஏலத்தில் 364 சுரபி ரக பருத்தி மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். சுரபி ரகம் குறைந்தபட்சம் குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 301 முதல் அதிகப்பட்சமாக ரூ.8 ஆயிரத்து 147-க்கு ஏலம் போனது. நேற்று நடந்த ஏலத்தில் மொத்தம் ரூ.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது. 

X

Maalai Malar
www.maalaimalar.com