என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் பேரூராட்சி பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை கலெக்டர் டாக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.
பரமத்தி வேலூர் பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு
- கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
- முதற்கட்டமாக நேற்று முதல் 4.8.2023 வரை 611 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரி மைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நேற்று முதல் 4.8.2023 வரை 611 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. 2-வது கட்டமாக 5.8.2023 முதல் 16.8.2023 வரை 303 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.
இதனைத்தொடர்ந்து, நேற்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி பேரூராட்சி சமு தாய கூடம் மற்றும் வேலூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை கலெக்டர் டாக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுகளின் போது, விண்ணப்பங்க ளைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி, விண்ணப் பங்கள் பதிவேற்றம் செய்யும் உள் ளிட்ட பணிகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் விண்ணப்ப பதிவு முகாமில் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர், மின் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முகாம் பொறுப்பு அலுவ லர்கள் உறுதி செய்திடல் வேண்டு மெனவும், ஆவ ணங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்திட வேண்டும் என அலுவ லர்க ளுக்கு கலெக்டர் டாக்டர் உமா அறிவுறுத்தி னார்.
இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆதிதிரா விடர் நல அலுவலர் சுகந்தி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச் செல்வி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






