என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • நிதிநிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.
    • முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நீலா தெற்கு வீதியில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளராக ரவி (வயது 64).

    இந்த நிதிநிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர்.

    இந்த நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து வாட்ஸ்அப் செயலி மூலம் நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து நாகை குற்றப்பிரிவு போலீசார் எஸ்பி அலுவலகத்தில் தனியார் நிறுவன உரிமையாளர் ரவியிடம் கடந்த 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் 3000 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கட்டிய வைப்புதொகை, சீட்டு தொகை, சேமிப்பு கணக்கு தொகை சுமார் 220 கோடி ரூபாய் திருப்பி கொடுக்காமல் இருந்தது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து தனியார் நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் அவருடைய மகன்கள் பாலாஜி, சிவா, செந்தில் உள்ளிட்ட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி அவர்களை வருகிற 7 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர்கள் 4 பேரும் நாகை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக 50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.
    • தாக்குதலில் மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தை அடுத்த செல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 800 -க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவி ஒருவரை கேலி செய்ததாக எம்.காம் மற்றும் பி.காம் மாணவர்களுக்கு இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இதுதொடர்பாக இரண்டு வகுப்பு மாணவர்களையும் கல்லூரி முதல்வர் அவரது அறையில்வைத்து கண்டித்துள்ளார்.

    அப்போது பி.காம் மாணவர்களுக்கு ஆதரவாக கல்லூரியில் பயிலாத நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த50 பேர் கொண்ட கும்பல் கல்லூரியின் உள்ளே திடீரென நுழைந்தனர்.

    ஆசிரியர்கள் தடுத்து நிறுத்தியதை பொருட்படுத்தாத அந்த கும்பல் திடீரென கல்லூரி மாணவர்களை தாக்க தொடங்கினர்.

    கல்லூரி மாணவர்களை வெளி பகுதியை சேர்ந்த கும்பல் உள்ளே புகுந்து தாக்குதலில் ஈடுபடும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

    இந்த தாக்குதலில் மாணவர்கள் 5 பேர் படுகாயம் அடைந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.
    • கொள்முதல் நேரத்தில் பெய்யும் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் இரு தினங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    அதன்படி நாகை மாவட்டத்தில் இன்று பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே அறுவடை நேரத்தில் பெய்த மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டது.

    தற்போது கொள்முதல் நேரத்தில் பெய்யும் மழையால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

    மழையால் வலிவலம், திருக்குவளை, வாழக்கரை, ஈசனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல் மூட்டைகளை தார்ப்பாய் கொண்டு மூடும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    அது தவிர ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை தைத்து அவற்றை பாதுகாப்பாக அடுக்கும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் 172 நேரடி அரசு கொள்முதல் நிலையங்களில் சுமார் 75-க்கும் மேற்பட்ட திறந்தவெளி நேரடி கொள்முதல் நிலையங்களாக செயல்படுவதாகவும் அதை நிரந்தர கட்டிடமாக கட்டி தர வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த காட்சி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
    • போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத்.

    இவர் தனது வீட்டில் நடைபெற உள்ள சுப நிகழ்வு ஒன்றிற்காக புது துணிகள் எடுக்க நாகையிலுள்ள பிரபல துணிக்கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    கடையின் முகப்பு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.

    அதனை மர்ம நபர்கள் 3 பேர் நோட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கள்ள சாவியை ஒருவர் எடுத்துக் கொடுக்க அதனை கொண்டு லாவகமாக சைடு லாக் திறந்து நைசாக மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.

    இந்த காட்சி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

    இது குறித்து வினோத் நாகை நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில், ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம்.
    • 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தவர் வழக்கறிஞர் நந்தினி.

    அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கறிஞர் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் நாகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்தனர்.

    மத்திய அரசு அதிக வரி வசூல் செய்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை நாகை புதிய, பழைய பஸ் நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் விநியோகம் செய்துள்ளனர்.

    தொடர்ந்து நாகை கடைத்தெருவில் இருவரும் துண்டு பிரசுரங்கள் விநியோகித்து கொண்டு இருப்பதை அறிந்த பா.ஜ.க.வினர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் நகர பொறுப்பாளர் சுதாகர் கொடுத்த புகாரின்பேரில் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை இரவில் போலீஸ் நிலையம் அழைத்து வந்த இன்ஸ்பெக்டர் சுப்ரியா அவர்களிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.

    அப்போது காவல் நிலையம் முன்பு 50 -க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பின்னர் பா.ஜ.க.வினரை சமாதானம் செய்து அப்புறப்படுத்திய போலீசார் நந்தினி மற்றும் நிரஞ்சனா ஆகியோரை காவல்துறை வாகனத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஏற்றி சென்று நாகை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து மூலம் மதுரைக்கு அனுப்பி வைத்தனர்.

    • அத்வானியை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர்.
    • தேடப்படும் குற்றவாளி அபுபக்கர் சித்திக் என்று அச்சிடப்பட்டு அவரது படத்துடன் நோட்டீஸ் ஓட்டினர்.

    வேதாரண்யம்:

    பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கடந்த 2011-ம் ஆண்டு தமிழகத்தில் ரத யாத்திரை மேற்கொண்டார். பல்வேறு மாவட்டங்களில் பயணம் செய்தார்.

    அப்போது ரத யாத்திரை மதுரை மாவட்டம் திருமங்கலம் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் செல்வதாக இருந்தது. அந்த நேரத்தில் அத்வானியை கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு வைத்திருந்தனர். உடனடியாக அதனை போலீசார் கண்டுபிடித்து செயல் இழக்க வைத்து அகற்றினர். இதனால் அத்வானி மயிரிழையில் உயிர் தப்பினார்.

    வெடிகுண்டு வைத்த வழக்கில் மதுரை நெல்பேட்டையை சேர்ந்த இஸ்மத், அப்துல்லா, நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையை சேர்ந்த அபுபக்கர்சித்திக் (வயது 57) உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் அபுபக்கர் சித்திக் தவிர மற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஏற்கனவே ஒருவர் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 12 ஆண்டுகளாக அபுபக்கர் சித்திக் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் அவரை பிடித்து உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என்று திருவள்ளூர் பூவிருந்தவல்லி சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது.

    அதனை தொடர்ந்து இன்று சென்னை, மதுரை சிறப்பு குற்ற புலனாய்வுத்துறை போலீசார் தோப்புத்துறையில் உள்ள அபுபக்கர் சித்திக் வீட்டிற்கு வந்தனர்.

    அங்கு அவரது வீட்டில் தேடப்படும் குற்றவாளி அபுபக்கர் சித்திக் என்று அச்சிடப்பட்டு அவரது படத்துடன் நோட்டீஸ் ஓட்டினர். தொடர்ந்து அவரை தேடும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

    • நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பணி எப்படி செய்ய வேண்டும்.
    • தேர் சீர்செய்யும் பணிகளை போலீசார் பார்வையிட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சாமிகோவிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 13ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது.

    முக்கிய திருவிழாவான திருக்கதவு அடைக்கத் திறக்கபாடும் வரலாற்று திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது.

    இந்த நிலையில் மார்ச் மாதம் 3 ந்தேதி தேர் திருவிழா நடைபெற உள்ளது.

    நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுக்க உள்ளனர்.

    விழா ஏற்பாடுகளை வேதாரண்யம் வேதார ண்யேஸ்வர ஸ்வாமி ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

    தேர் திருவிழாவின் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை நாகை கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாறன் தலைமையில் வேதாரண்யம் போலீஸ் துணை சூப்பிரண்டு முருகவேல் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது தேர் செல்லும் நான்கு வீதிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பணி எப்படி செய்ய வேண்டும் மற்றும் பக்தர்கள் அன்னதானம் செய்வதற்கு தனி இடம் ஒதுக்குவது வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளையும் தேர் சீர்செய்யும் பணியினையும் போலீசார் பார்வையிட்டன பின்பு கோவில் நிர்வாகத்தினருடன் கலந்தாலோசனை செய்து விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

    தேர் திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என்பதால் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என போலீசார்தெரிவித்தனர்.

    • வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருக்கு வளை அடுத்த எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடைவீடான சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில், மாசி மாத கிருத்திகையை யொட்டி முருகப்பெருமானுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், வண்ண வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    • மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
    • ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஸ்ரீ தாயுமானவர் வித்யாலயம் உதவி நடுநிலைப்பள்ளியில் சுதந்திர போராட்ட தியாகி குருகுலம் பள்ளி நிறுவனர் சர்தார் வேதரத்னம் பிள்ளையின் 126-வது பிறந்தநாள் விழா திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் சென்ட் உறுப்பினர் ராஜலிங்கம் தலைமையில் நடந்தது.

    விழாவில் சர்தார் தேசிய சேவைகள் மற்றும் கல்வி பணிகள் குறித்து கைலவனம் பேட்டை ஊராட்சி ஒன்றியப்பள்ளி தலைமை ஆசிரியை மரகதம் சிறப்புரையாற்றினார்.

    விழாவை யொட்டி வேதா ரண்யம் சரகத்தில் உள்ள 17 பள்ளிகளின் மாணவ- மாணவிகளிடையே போட்டிகள் நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற 200 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் குருகுலம் கல்வியியல் கல்லூரி நிர்வாகி கேடிலியப்பன், முன்னாள் பேரூராட்சி தலைவர் சங்கர வடிவேல், முன்னாள் ரோட்டரி கிளப் தலைவர் அம்பிகாதாஸ், திருநாவுக்கரசு வார வழிபாட்டு மன்ற ராஜேந்திரன், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் சித்திரவேல், வைரக்கண்ணு உள்பட பிரமுகர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    முன்னதாக குருகுலம் நிர்வாக அறங்காவலர் கயிலைமணி வேதரத்னம் அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் வித்யாலயம் பள்ளி தலைமை ஆசிரியை நந்தினி நன்றி கூறினார்.

    • பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
    • கலை நிகழ்ச்சிகளும், நாதஸ்வர இன்னிசை கச்சேரிகளும் நடந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கில் உள்ள செல்வ நாகமுத்து மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா கடந்த 22-ந்தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.

    விழாவில் அக்னி சட்டி பிரவேசம், சனீஸ்வர பூஜை, வனபத்ரகாளி, பிரத்தியங்கரா தேவி பூஜைகளுடன் நேற்று சக்தி கலா கோவிலில் இருந்து 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்பாளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பின்னர் உலக நன்மை வேண்டி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளுடன் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை யொட்டி கலை நிகழ்ச்சிகளும், நாதஸ்வர இன்னிசை கச்சேரிகளும் நடந்தது.

    • வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்துள்ள பனங்காடி கிராமத்தில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோ விலில் திருக்கல்யாணம் வைபோகம் நேற்றிரவு நடைபெற்றது.

    இதனை யொட்டி முன்னதாக காலை சிறப்பு ஹோமம் நடைபெற்று மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து வரத விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியம் முழங்க சீர் வரிசை கோயிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

    பின் மாலை மாற்றும் வைபோகமும் பின் வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் என்று சொல்லக்கூடிய திருக்க ல்யாணம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • மாணவ- மாணவிகள் ஆசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வனச்சரகத்தின் மூலம் ஆற்காட்டுதுறை மீனவர் கிராமத்தில், வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில், கடல் ஆமை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில்முனைவர் சிவகணேசன் கடலாமை முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர், நடேசன் ராஜா கடலோர காவல்துறை குழும போலீசார், ஆற்காட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள், முனைவர் அறிவு கிராம மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசியர்கள் மற்றும் வனத்துறையினர்கள் கலந்து கொண்டனர்.

    கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டார்.

    முடிவில் வனவர் ராமதாஸ் நன்றி கூறினர்.

    ×