என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.
    • சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரியில் பள்ளிகளுக்கு அருகே 100 மீட்டர் தூரத்துக்குள் கடைகளில் சிகரெட், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிரதாப், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் திட்டச்சேரி மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வில் அரசின் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடை உரிமையாளர்களுக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர்.

    மேலும் கிலோ கணக்கில் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஆய்வின்போது நலக்கல்வியாளர் மணவாளன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம், சுகாதார ஆய்வாளர்கள் மணிமாறன், ஆனந்தன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • பூந்தட்டு ஏந்தி கோவில் வரை ஊர்வலமாக சென்றனர்.
    • அம்மனுக்கு பூக்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ஆரியநாட்டுத்தெரு மீனவ கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாய்மூகாம்பிகை கோவில் மாசி மக பிரம்மோற்சவ திருவிழா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    10 நாட்கள் நடைபெறும் திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியான அம்மனுக்கு பூச்சொரிதல் அபிஷேகம் நடைபெற்றது.

    நாகை துறைமுக கடற்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் அம்மனுக்கு பூந்தட்டு ஏந்தியவாறு தாய் மூகாம்பிகை கோவில்வரை ஊர்வலமாக சென்றனர்.

    பின்னர் கோவிலை சென்றடைந்த பக்தர்கள் அங்கு அம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து சாமியை வழிபட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மக தீர்த்தவாரி வருகிற 7-ந்தேதி நாகப்பட்டினம் கடற்கரையில் வெகு விமர்சையாக நடைபெறுகிறது.

    • விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதியை காணிக்கையாக வழங்கின்றனர்.
    • 5 டன் காய்கறிகள், பழங்கள், 108 மூலிகை பொருட்கள் கொண்டு சிறப்பு கேள்வி நடத்தினர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ செல்லியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் தெற்கு பொய்கை நல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயம் செழிக்க வேண்டி விளைச்சலில் ஒரு பகுதி பொருட்களை விவசாயிகள் காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

    இந்நிலையில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளையக்கூடிய கத்திரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், பாகற்காய், கீரை பனங்கிழங்கு, எலுமிச்சை, நார்த்தங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகளை வழங்கினர்.

    இதைத் தொடர்ந்து ராட்சத யாககுண்டம் அமைத்து சுமார் 5 டன் காய்கறிகள் பழங்கள், 108 மூலிகை பொருட்கள் 2000 லிட்டர் நெய் கொண்டு 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் யாக கேள்வி நடத்தினர்.

    அதை தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது

    தொடர்ந்து தங்கள் கிராமத்தில் விளைவிக்கக் கூடிய காய்கறிகள் திருவாரூர் கும்பகோணம் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், காய்கறி விவசாயம் செழிக்க வேண்டியும் இயற்கையிடமிருந்து விவசாயத்தை பாதுகாக்க வேண்டிய தொடர்ந்து 10வது ஆண்டாக இந்த காய்கறி சண்டிஹோமம் நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருளினார்.
    • 4 மாட வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.

    நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி கொடுத்த தலம்.

    மேலும் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு மாசிமக விழா கடந்த மாதம் 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சாமி- அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருளினார்.தேரோட்டத்தை யாழ்பானம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டார சன்னதி, மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், வேதாரண்யம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி, நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராஹிம், குருகுலம் நிர்வாகிகள் வேதரத்தினம், கேடிலியப்பன் கோவில் செயல் அலுவலர் அறிவழகன் ஆகியோர் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.

    இதில் திரளான பக்தாகள் கலந்து கொண்டு தியாகேசா., மறைகாடா.. என பக்தி கோஷம் மூழங்க வடம் பிடித்தனர். அதனை தொடர்ந்து 4 மாட வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • கொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    நாகப்பட்டினம்:

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக பல இடங்களில் புகார்கள் கூறப்பட்டு வந்தன.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மைய மாநாட்டு கூடத்தில் மாதந்தோறும் வழக்கமாக நடைபெறும். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வேளாண் இன இயக்குனர் அகண்டராவ், மாவட்ட வருவாய் அலுவலர், கூட்டுறவுத்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பேசிய விவசாயிகள், பருவம் தவறிய மழை இயற்கை சீற்றம் போன்ற பல்வேறு இன்னல்களுக்கு நடுவே சாகுபடி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட நெல்களை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்றால் அங்குகொள்முதல் நிலைய ஊழியர்கள் உள்ளிட்ட பலர் லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டிய விவசாயிகள்.

    விவசாயத்தை விட கொள்முதல் நிலைய ஊழியர்களுக்கு அதிக லாபம் கிடைப்பதால் தங்களுடைய விளை நிலங்களை எடுத்துக் கொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணி வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்ததனர்.

    இதற்கு பதில் அளித்த மாவட்ட கலெக்டர் அருண் தம்பு ராஜ், லஞ்சம் கேட்கும் ஊழியர்களிடம் தகராறு செய்து போலீசில் பிடித்துக் கொடுங்கள் என விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    • வேதாரண்யத்தில் இருந்து மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்திற்கு அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.
    • பல ஆண்டுகளுக்கு முன்பு இடைநில்லா பஸ் இயக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    தமிழ்நாடு அரசுக்கு, அகில பாரத மக்கள் மகாசபா நாகை மாவட்ட தலைவர் இளம் பாரதி அனுப்பி உள்ள மனுவல கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யத்தில் இருந்து மாவட்ட தலைநகரான நாகப்பட்டினத்திற்கு நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.

    அனைத்து பஸ்களும் வேதாரண்யத்தில் இருந்து 55 கி.மீ தூரம் உள்ள நாகைக்க்கு செல்ல 2 மணி நேரம் ஆகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    மேலும் நாள்தோறும் நாகையில் உள்ள மருத்துவ கல்லூரி நீதித்துறை, கல்வித்துறை, வேளாண்மை துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறைகளில்வே தாரணியத்தில் இருந்து சென்று பணியாற்றுபவர்கள் நூற்றுக்கணக்கானோர் உள்ளனர்.

    பொதுமக்கள் பயன்படும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இடைநில்லா பஸ் இயக்கப்பட்டது.

    இடையில் எங்கும் நிற்காமல் 1.15 மணி நேரத்தில் சென்று விடும்.

    ஆனால் சமீப காலமாக அந்த விரைவு பஸ்களும் நிறுத்தபட்டு விட்டன.

    சாலைகள் மேம்படுத்தப்பட்ட இன்றைய நிலையில்த ற்போது வேதாரண்யத்தில் இருந்து நாகைக்கு 1 மணி நேரத்திலேயே செல்ல இயலும்.

    எனவே வேதாரண்யத்தில் இருந்து நாகை அலுவலகத்திற்கு செல்லும் பணியாளர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக காலை 8 -9 மணிக்குள் இந்த ஒன் டூ ஒன் பஸ் 2 இயக்க வேண்டும்.மக்கள் நலன் கருதி இதனை உடனே இயக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாட்டார்மங்கலம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரியக்குளம் உள்ளது.
    • குளத்தில் உள்ள மூன்று படிக்கட்டுகளும் இடிந்து கால் வைத்தால் குளத்திற்குள் விழும் அபாய நிலையில் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான பெரியக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை அப்பகுதி பொதுமக்கள் குளிப்பதற்கு மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் கோடை காலங்களில் முக்கிய நீர்நிலை ஆதாரமாகவும் உள்ளது.

    இந்த நிலையில் குளத்தில் உள்ள மூன்று படிக்கட்டுகளும் இடிந்து கால் வைத்தால் குளத்திற்குள் விழும் அபாய நிலையில் உள்ளது.

    வயது முதிர்ந்தவர்கள் இறங்கும் போது படிகட்டுகள் இடிந்து விழுந்து காயமடைகின்றனர்.

    மேலும் அருகில் நூலகம், கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் அங்கு வருபவர்கள் குளத்திற்கு செல்லும் போது தவறுதலாக எதேனும் உயிர் சேதம் ஏற்படும் நிலையில் உள்ளது.

    மேலும் சாலையோரம் உள்ள தடுப்பு சுவர்கள் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது.

    இதனால் இரவு நேரங்களில் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்துக்கள் ஏதேனும் ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

    இதனை பற்றி பலமுறை புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடன் நடவடிக்கை மேற்கொண்டு பெரியகுளத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தோப்புத்துறை சின்னபள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசலுக்கு பின்புறம் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது.
    • டிரான்ஸ்பார்மர் நெருக்கடியான தெருவில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் இடையூறாக உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை சின்னபள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசலுக்கு அருகில் மின்கம்பமும், அதே பள்ளிவாசலுக்கு பின்புறம் டிரான்ஸ்பார்மரும் அமைந்துள்ளது.

    இந்த மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் நெருக்கடியான தெருவில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் இடையூறாக உள்ளது.

    இதனால் அப்பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, அசம்பாவி தத்தை தடுக்கும் பொருட்டு மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மரை மாற்று இடத்தில் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • 4 பேரும் வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு வெளிவாசலில் தூங்கி உள்ளனர்.
    • நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் பிரோவில் இருந்த15 பவுன் நகை ரொக்கம் 50 ஆயிரத்தை திருடி சென்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 58). இவரது மனைவி சக்தி. ( 48). இவர்களது மகன் பிரேம்நாத், மகள் பிரேமலதா.

    இவர்கள் 4 பேரும் வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு வெளிவாசலில் தூங்கி உள்ளனர்.

    நள்ளிரவில் வீட்டிற்குள் நைசாக புகுந்த மர்ம கும்பல் பிரோவில் இருந்த15 பவுன் நகை ரொக்கம் 50 ஆயிரத்தை திருட்டு சென்றுவிட்டனர்,

    இது குறித்துவேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் தங்கரசு புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வேதாரண்யம் டி.எஸ்பி முருகேல், இன்ஸ் பேக்டர் குணசேகரன் மற்றும் போலீசார சம்ப இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    மேலும் தட அறிவியல் பிரிவு டி.எல் பி அனந்தி இன்ஸ்பெக்டர் சங்கவி மற்றும்கைரேகை நிபுணர்குழுவினர் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    நாகையில் இருந்த மேப்ப நாய் தூளிப் வரவழைக்பட்டு வீட்டில் இருந்து மேப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்றது.

    யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.
    • மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் மேலத்தெருவைச் சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி தமிழ்ச்செல்வி.

    இவர்களுக்கு அய்யப்பன் (வயது 40), தினேஷ் (35) என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் அய்யப்பன் மாற்றுத்திறனாளி ஆவார். தினேசும் அதே பகுதி புதுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் என்பவரின் மகள் சுகுணா (வயது 20)வும் காதலித்து வந்துள்ளனர்.

    இவர்களது காதலுக்கு எதிர்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 25 -ம் தேதி சுகுணா திடீரென வீட்டை விட்டு வெளியேறி தனது காதலன் தினேஷ் வீட்டிற்கு வந்து விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த சுகுணாவின் சகோதரர் மைக்கேல் டைசன் மற்றும் அவரது நண்பர்கள் சென்னையைச் சேர்ந்த அப்துல் சலாம், வீரசேகரன், முரளி, கேசவன் ஆகியோர் தினேஷ் வீட்டிற்கு சென்று தினேசையும், அவரது அண்ணன் அய்யப்பன் மற்றும் அவர்களது பெற்றோர்களை தாக்கிவிட்டு சுகுணாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர்.

    இதில் பலத்த காயம் அடைந்த அய்யப்பனை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அய்யப்பன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
    • 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் அருகே சேஷமூலை பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வேகமாக 2 மோட்டார் சைக்கிள்களை சந்தேகத்தின்பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.

    சோதனையில் மோட்டார் சைக்கிள்களில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் சாராயம் இருந்தது.

    இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் காரைக்கால் மாவட்டம் மானம்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த செல்வம் (வயது 43), அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பதும் இவர்கள் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை மோட்டார் சைக்கிளில் கீழ்வேளூர் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து அவரிடம் இருந்து தலா 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

    அதேபோல் இடையாத்தாங்குடி பகுதியில் திட்டச்சேரி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சாராயம் கடத்திய தேவூர் ராணி அய்யர் தெருவை சேர்ந்த சக்திவேல் (வயது 41), திருச்செங்காட்டங்குடி வடக்குதெருவை சேர்ந்த சுபாஷ் (வயது 22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்கள் கீழ்வேளூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிள்களில் சாராயம் கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    • சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.
    • திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை.

    வேதாரண்யம்:

    இந்திய சுதந்திரப் போராட்டத்தில்உப்பு சத்தியா கிரக போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. வடக்கில் தண்டியிலும், தெற்கில் வேதாரண்யத்திலும் உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடைபெற்றது.

    வேதாரண்யத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு சர்தார் வேதரத்தினம் தலைமையில் ராஜாஜி உப்பு அள்ளினார்.

    சுதந்திரப் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய உப்பு சத்தியாகிரக போ ராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் அகஸ்தியன் பள்ளியில் நினைவு ஸ்தூபியும், ராஜாஜி சிறை வைக்கப்பட்ட இடமும் இன்றும் நினைவிடமாகவும் மேலும் வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகநினைவு கட்டிடமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இவரின் அளப்பரிய பங்கை பாராட்டி, 1931-ஆம் ஆண்டில், திருநெல்வேலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் சர்தார் எனும் பட்டமளித்து மரியாதை செய்யப்பட்டார்.

    இவரது தியாகத்தை உலகுக்கு உணர்த்தும் விதமாக இந்திய அரசு கடந்த 1998-ம் ஆண்டு இரண்டு ரூபாய் நினைவு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் உறை வெளியிட்டு பெருமைப்படுத்தியது

    சுதந்திர போராட்டத்திற்காக அயராது பாடுபட்ட சர்தார் வேதரத்தினம் பிள்ளைக்கு வேதாரண்யத்தில் அரசு மணிமண்டபம் அமைத்து அவரது நினைவு நாள் மற்றும் பிறந்தநாள் விழாக்களை அரசே நடத்த வேண்டும் என அப்பகுதிமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×