வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு குளிர்சாதன பெட்டிகள் வழங்கல்

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி தலைமை ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது.ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 6 குளிர்சாதன பெட்டிகள் வழங்கப்பட்டது.
குளிர்சாதன பெட்டிகளை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ வழங்கினார்.
குளிர்சாதன பெட்டிகளை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ வழங்கினார்.
Published on

வேதாரண்யம்:

வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரி தாலுக்கா மருத்துவமனையாகவும், தலைமை மருத்துவ–மனையாகவும் செயல்பட்டு வருகிறது.

இங்கு இறப்புக்குள்ளாகும் மற்றும் அடையாளம் தெரியாத இறந்தவர்களை பாதுகாக்க ரூ. 9 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் 6 குளிர்சாதன பெட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து வழங்கி, அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். தலைமை மருத்துவர் முருகப்பா வரவேற்றார்.

இந்த நிகழ்வில் ஒன்றியக்குழு தலைவர் கமலா அன்பழகன், துணைத் தலைவா் அறிவழகன், மாவட்ட கவுன்சிலரும், மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளருமான சுப்பையன், நகரச் செயலாளர் நமசிவாயம் உட்பட கட்சி நிர்வாகிகளும், முன்னாள், இந்நாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள் கட்சி பிரமுகர்கள் மாரியப்பன், தோப்புத்துறை அமானுல்லா, அம்மா பேரவை ஜின்னாஅலி உட்பட மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com