என் மலர்
நீங்கள் தேடியது "Keep the Door Open"
- 4 பேரும் வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு வெளிவாசலில் தூங்கி உள்ளனர்.
- நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் பிரோவில் இருந்த15 பவுன் நகை ரொக்கம் 50 ஆயிரத்தை திருடி சென்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 58). இவரது மனைவி சக்தி. ( 48). இவர்களது மகன் பிரேம்நாத், மகள் பிரேமலதா.
இவர்கள் 4 பேரும் வீட்டின் கதவை திறந்துவைத்துவிட்டு வெளிவாசலில் தூங்கி உள்ளனர்.
நள்ளிரவில் வீட்டிற்குள் நைசாக புகுந்த மர்ம கும்பல் பிரோவில் இருந்த15 பவுன் நகை ரொக்கம் 50 ஆயிரத்தை திருட்டு சென்றுவிட்டனர்,
இது குறித்துவேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் தங்கரசு புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் வேதாரண்யம் டி.எஸ்பி முருகேல், இன்ஸ் பேக்டர் குணசேகரன் மற்றும் போலீசார சம்ப இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் தட அறிவியல் பிரிவு டி.எல் பி அனந்தி இன்ஸ்பெக்டர் சங்கவி மற்றும்கைரேகை நிபுணர்குழுவினர் வந்து தடயங்களை சேகரித்தனர்.
நாகையில் இருந்த மேப்ப நாய் தூளிப் வரவழைக்பட்டு வீட்டில் இருந்து மேப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்றது.
யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






