என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிளின் சைடு லாக்கை திறக்கும் மர்ம நபர்கள்.
கள்ள சாவி போட்டு மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபர்கள்
- இந்த காட்சி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
- போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி சிவன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வினோத்.
இவர் தனது வீட்டில் நடைபெற உள்ள சுப நிகழ்வு ஒன்றிற்காக புது துணிகள் எடுக்க நாகையிலுள்ள பிரபல துணிக்கடைக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.
கடையின் முகப்பு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார்.
அதனை மர்ம நபர்கள் 3 பேர் நோட்டமிட்டு மறைத்து வைத்திருந்த கள்ள சாவியை ஒருவர் எடுத்துக் கொடுக்க அதனை கொண்டு லாவகமாக சைடு லாக் திறந்து நைசாக மோட்டார் சைக்கிளை திருடி சென்றனர்.
இந்த காட்சி கடையில் உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது குறித்து வினோத் நாகை நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில், ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






