என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • செம்பனேரி பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
    • சுமார் 62 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கபட்டாலும் போதுமான தண்ணீர் வரத்தின்றி விவசாயிகள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

    பயிர்கள் கருக தொடங்கின.

    நாகை மாவட்டத்தில் இந்தாண்டு சுமார் 62,000 ஏக்கரில் குறுவை சாகுபடி நேரடி விதைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் பெருமளவிலான விவசாயிகள் ஆற்று பாசனத்தை மட்டுமே நம்பி சாகுபடி செய்திருந்தனர்.

    ஆனால் காவிரியில் இருந்து போதிய தண்ணீர் வராததால் பாசன நீர் கிடைக்காமல் பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகினர்.

    குறிப்பாக நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம், கீரங்குடி, வடமருதூர், தென்மருதூர், ராமச்சந்திரபுரம், கீழக்கண்ணாப்பூர், செம்பேனேரி பகுதிகளில் சுமார் 30000 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    பெரும்பாலான பாசன வாய்க்கால்கள் வறண்டு காணப்படுவதால் நீர் கிடைக்க இனியும் வழியில்லை என முடிவெடுத்த விவசாயிகள் விளை நிலங்களில் கால்நடைகளை விட்டு மேய்க்க தொடங்கிவிட்டனர்.

    மேலும் ஏக்கருக்கு சுமார் 25,000 வரை கடன் பெற்று சாகுபடி செய்யப்பட்ட நிலையில் உரிய தண்ணீர் கிடைக்காததால் கருகி வருகிறது.

    எனவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு மறு விவசாயம் செய்யவும் சம்பா சாகுபடிக்கு தயாராகும் வகையில் சம்பா தொகுப்பு திட்டம் வழங்க வேண்டும்.

    உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட குறுவை நெற்பயிர்களுக்கான இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 24 களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்த வேண்டும்.
    • நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் புகழேந்தி தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் வெங்கடலட்சுமணன், பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், வேதாரண்யம் நகராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் மகாராஜபுரம் பகுதியில் அறிவுசார் மையம் அமைக்கும் பணி மேற்கொள்வது, கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் ஏற்படும் பழுதுகளை உடனடியாக சீர் செய்வது, நகராட்சி பகுதியில் பயன்பாடுகள் இல்லாத கழிவறை கட்டிடங்களை அகற்றுவது, நகராட்சியில் சாலையோரம் வளரும் புற்களை வெட்டு வதற்கு புல் வெட்டும் எந்திரம் வாங்குவது, வேதாரண்யம் நகராட்சி பகுதியில் 24 டெங்கு களப்பணியாளர்களை டெங்கு நோய் தடுப்பு பணிக்கு அமர்த்துவது, நகராட்சிக்கு 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் வாகனம் வாங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • பள்ளி மாணவன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
    • குற்றவாளியை கண்டுபிடிக்கக்கோரி மாணவனின் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வன். இவரது மகன் தர்ஷன் (வயது 12). இவர் தகட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில், நேற்று மாலை மாணவன் பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக சாலையை கடக்கும் போது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வாய்மேடு போலீசார் வழக்குபதிவு செய்து உடலை கைப்பற்றி திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், குற்றவாளியை கண்டு பிடிக்கக்கோரி உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் இன்று காலை திடீரென தகட்டூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பேரணியானது அண்ணா சிலையிலிருந்து தொடங்கி வெளிப்பாளையம் வழியாக சென்றது.
    • இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் அமைந்துள்ள சின்மயா வித்யாலயா சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணி அண்ணா சிலையிலிருந்து துவங்கி மேலக்கோட்டை வாசல்,பழைய பேருந்து நிலையம் ,புதிய பேருந்து நிலையம்,எஸ்பி ஆபிஸ், வெளிப்பாளையம் வழியாக சென்றது.

    பேரணியில் பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்தும் பெண் குழந்தைகளை பாதுகாக்க கூடிய சட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    பேரணியானது காடம்பாடி பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்

    • போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.
    • தொடாந்து, ஏனங்குடி அணியினர் 3-து பரிசும், கல்லார் அணியினர் 4-வது பரிசும் பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் ஈஷா கிராமோத்சவம் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் நடத்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டியில், திருமருகல் ஆலங்குடி, நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், பெரியதும்பூர், நாகூர், நாகை வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவை சேர்ந்த 40, அணி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    திருமருகல் மற்றும் ஆலங்குடி வீரர்களுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.

    இதைப்போல் நாகை மற்றும் வேதாரண்யம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் நாகை அணியினர் கூடுதல் வெற்றி புள்ளிகள் பெற்று வேதாரண்யம் அணியினரை தோற்கடித்தனர்.

    இதில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் அணியினர், செப்டம்பர் மாதம் திருச்சி மற்றும் கோவையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நம்பியார் நகர் முதல் பரிசு, கீச்சாங்குப்பம் 2-வது பரிசு, ஏனங்குடி 3-து பரிசு, கல்லார் 4-வது பரிசு பெற்றனர்.

    • காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.
    • 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்ட மையம் சார்பில் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் மடியேந்தி போராட்டம் மாவட்ட தலைவர் சித்ரா தலைமையில் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்தில் தமிழக முதல்வர் காலை சிற்றூண்டி உணவு திட்டத்தை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஆகிய நாங்கள் வரவேற்கிறோம்.

    அதே சமயத்தில் அதனை சத்துணவு ஊழியர் ஆகிய எங்களிடமே வழங்க வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான காலம் முறை ஊதி யத்தை வழங்க வேண்டும், காலி பணியிடங்கள் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பலவேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    மாவட்ட செயலாளர் ராஜு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்க பொதுச்செய லாளர் ராணி, மாவட்ட பொருளாளர் அந்துவ ன்சேரல், சிஐடியு மாவட்ட செயலாளர் தங்கமணி, நாகை வட்ட கிளையின் தலைவர் ரவிச்சந்திரன், சாலை பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கணேசன் மற்றும் 317 சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பழகன் நிறைவுரை யாற்றினார்.

    முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாம்பாள் நன்றி கூறினார். 

    • பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் கீழத்தஞ்சாவூர் கிராமத்தில் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி பவுர்ணமியையொட்டி பஞ்சலிங்கேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    முன்னதாக சாமிக்கு மஞ்சள்பொடி,மாப் பொடி,தேன், திரவியபொடி, பால்,தயிர்,இளநீர், பன்னீர்,சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.
    • பறவைகள் சிறகடித்து பறப்பது பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.

    பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கபடும் கோடிக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு

    ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா, உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து அங்கு நிலவும் குளிரை போக்க இங்கு சுமார் 200 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

    தற்போது காலநிலை மாற்றுவதனாலும் ஆர்டிக் பிரதேசத்தில் நிலவும் குளிரை போக்கவும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் மாதம் இறுதியில் வரவேண்டிய பறவைகள் முன்கூட்டியே ஆயிரக்க ணக்கான பறவைகள் வந்து குவிந்துள்ளது.

    தற்போது சரணால யத்திற்கு கூழைகிடா, பூநாரை, கடல் ஆலா, உள்ளான் வகை பறவைகள் ள்ளிட்ட பறவைகள் வரத் துவங்கி உள்ளது. பறவைகள் சரணாலயத்தில் கூட்டம், கூட்டமாக அமர்ந்து இரைதேடுவதையும் ,பறவைகள் சிறகு அடித்து பறப்பதையும் பார்ப்பதற்கு கண் கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.

    இந்த பறவைகளை இரட்டைதீவு, கோவை தீவு , நெடுந்தீவு, உள்ளிட்ட பகுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் காணலாம் எனவும் , படிப்படியாக பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பறவைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது என கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.

    • ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
    • கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமரு கல் அடுத்த கட்டுமாவடி ஊராட்சி கோதண்டராஜ புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும், கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜவகர், ஊராட்சி தலைவர் சரவணன், ஒன்றிய பொறியாளர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விழா நடைபெறும்.
    • சிறப்பு பாடல், கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    நாகப்பட்டினம்:

    கீழ்த்திசை நாடுகளின் லூர்துநகரம் என அழைக்கப்படும் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கும்.

    இந்நிலையில், இந்தாண்டு பெருவிழா இன்று மாலை மாலை 5.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் கொடி புனிதம் செய்யப்பட்டு ஊர்வலத்துக்கு பின்னர் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து ஆலய கலையரங்கில் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழ் திருப்பலி நடைபெறும்.

    வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 7-ம் தேதி வரை பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம், ஆலயம் மேல் கோயில், கீழ்கோயில் ஆகிய இடங்களில் தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் இரவு, பகலாக சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    வரும் 1-ம் தேதி மாலை சிலுவை பாதையும், 7-ம் தேதி மாலை தமிழில் ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபமும் நடைபெறும் அதை தொடர்ந்து சிறப்பு பாடல் கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. 8-ம் தேதி விண்மீன் ஆலயத்தில் அன்னையின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. காலை 8 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. இரவு 8 மணிக்கு பெரிய தேர்பவனி நடக்கிறது. இதன்பின்பு கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், 2500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • உலக நன்மை வேண்டி வண்டுறை மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
    • 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

    முன்னதாக மாரியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று.

    மாரியம்மனுக்கு சந்தன காப்பு சாத்தப்பட்டு மகாதீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோவிலின் எதிர்புறத்தில் 1008 பெண்கள் அமர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

    இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    • சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    பிரதோஷம் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கும், நந்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் வண்ண மலர்களால் சாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது.

    இதேபோல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதேபோல வெள்ளப்பள்ளம் சிவன் கோவில், புஷ்பவனம் சுகந்தனேஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோவில் மற்றும் ருத்ரசோமநாதர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×