என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காடம்பாடியில், விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் தொடங்கி வைத்தார்.

    காடம்பாடியில், விழிப்புணர்வு பேரணி

    • பேரணியானது அண்ணா சிலையிலிருந்து தொடங்கி வெளிப்பாளையம் வழியாக சென்றது.
    • இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் காடம்பாடியில் அமைந்துள்ள சின்மயா வித்யாலயா சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது. பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணி அண்ணா சிலையிலிருந்து துவங்கி மேலக்கோட்டை வாசல்,பழைய பேருந்து நிலையம் ,புதிய பேருந்து நிலையம்,எஸ்பி ஆபிஸ், வெளிப்பாளையம் வழியாக சென்றது.

    பேரணியில் பெண் குழந்தைகளின் உரிமைகள் குறித்தும் பெண் குழந்தைகளை பாதுகாக்க கூடிய சட்டங்கள் குறித்து பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் கையில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.

    பேரணியானது காடம்பாடி பள்ளியில் நிறைவடைந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்

    Next Story
    ×