என் மலர்
நாகப்பட்டினம்
- வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
- பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது.
இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய பெருவிழாவான அன்னையின் பிறந்தநாள் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று இரவு பெரிய சப்பர பவனி எனப்படும், பெரியதேர்த்திருவிழா நடைபெறுகின்றது.
இதற்காக பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.
வேளாங்கண்ணியில் பல்வேறு மொழிபேசும் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், மற்றும் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, தினமும் சிறிய சப்பர பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன நாளை மாதாவின் பிறந்தநாள் என்பதால் நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்ப ட்டுள்ளது.
நாளை காலை 6 மணிக்கு மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் பரிபாலகர் சகாயராஜ்தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவடைகிறது என வேளாங்கண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் தெரிவித்தார்.
- பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி முதலியார் குத்தகை ராதா-ருக்மணி சமேத கிருஷ்ணா ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆலய பத்தாம் ஆண்டு சுதர்சன ஹோம கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது
முன்னதாக பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.
பின்பு கேரளாசெண்டை மேளத்துடன் கிருஷ்ணர் கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- ஆயக்காரன்புலம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.
- மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு அர்ச்சனை செய்தல், மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
தொடர்ந்து, அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று.
பின்னர், வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
- போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்க தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஏற்றனர்.
அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பேசுகையில்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் சார்பாக போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 2000 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும்,15 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்தும், 300 கிலோ மேல் கஞ்சா பறிமுதல் செய்தும், மற்றும் குட்கா பான் மசாலா விற்பனை செய்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறையின் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை அனைத்தும் போதைப் பொருளுக்கு எதிராக காவல்துறையின் சார்பாக நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியாகும் ஆனால் இது போதாது மாணவராகிய ஒவ்வொருவரும் போதைப் பொருளை தவிர்த்தல் வேண்டும், எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம் என்று சொல்லி ற்கேட்ப அனைவரும் போதை பொருளை விட்டு ஒழித்தல் வேண்டும். மாணவராகிய நீங்கள் உடற்ப யிற்சியை மேற்கொண்டு உடலை வலுவாக்க வேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் டாக்டர், இன்ஜினியர் போன்ற பெரிய பதவிகளுக்கு அனைவரும் செல்ல வேண்டும்.
போதைப் பொருட்களை தவிர்ப்போம் சிறப்பான வாழ்க்கை அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்றது.
- 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த நரிமணத்தில் உள்ள பூர்ணபுஷ்கலா அழகிய ஐயனார், சந்திரமதி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 1-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, தன பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை மஹாலட்சுமி ஹோமம், தீப லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து, 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்று, முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 3-ந் தேதி 2,3-ம் கால யாகசாலை பூஜையும், 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சந்திரமதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.
- முருகனுக்கு பல்வேறு திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் சிக்கலில் சிங்கார வேலவர் கோவில் அமை ந்துள்ளது. முருகப்பெருமான் அன்னை வேல் நெடுங்க ண்ணிடம் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்ஹாரம் செய்ததாக கந்த புராண வரலாறு புகழ்மிக்க இந்த கோவிலில் கார்த்திகை சஷ்டியை முன்னிட்டு வெள்ளி தேரில் முருகப்பெ ருமாள் சுவாமி வீதி உலா நடைபெற்றது. முன்னதாக வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளிய முருகப்பெ ருமானுக்கு பால், பன்னீர், தேன், விபூதி,பஞ்சா மிர்தம் உள்ளி ட்ட திரவிய பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்ட முருக பெருமான் வள்ளி தெய்வானையுடன் வெள்ளித் தேரில் எழுந்தருளி ஆலய உட்பிரகா ரம் வலம் வந்தார். அதனை தொடர்ந்து மகா தீபாரா தனை காண்பி க்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
- என்.எஸ்.எஸ், ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
- பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
நாகப்பட்டினம்:
பள்ளி கல்வித்துறையின் சார்பில் தூய்மை பசுமையை வலியுறுத்தி எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தினை சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து தூய்மை பசுமையை வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கிரேட் எஃப் தொண்டு நிறுவனம் சார்பில் என்.எஸ். எஸ், ஜே.ஆர்.சி. மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கப்பட்டது.
பள்ளி வளாகத்தில் தேசிய பசுமை படை வழங்கிய மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேசன், தலைமை ஆசிரியர் கஜேந்திரன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சிதம்பரம், பள்ளித் துணை ஆய்வாளர் ராமநாதன் சூழல் ஒருங்கிணைப்பாளர் இமயசிவன், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், திருப்பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் புஷ்பராஜ் , கண்ணன், சங்கர் மற்றும் நாட்டு நல பணி திட்டம் மாணவர்கள் செய்திருந்தனர்.
- 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.
- மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடி யக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.
இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.
இதனால் இன்று 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
ஒரு சில மீனவர்கள் கரையோரம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பி னார்.
இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்ப டுகிறது.
- உற்பத்தி செலவு அதிகமாவதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது.
- சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்படுகிறது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு, குரவப்பு லம், தாணிக்கோட்டகம், செம்போடை, பிராந்தி யங்கரை, தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 3 அடியிலிருந்து 20 அடி வரை விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் மரவள்ளிக்கிழங்கு, காகிதம் கொண்டு தயார் செய்யப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு அனுப்பப்படும்.
அவ்வாறு தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தற்போது வாட்டர் கலர்கள் கொண்டு வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு உற்பத்தி செலவு அதிகமாகதால் 3 அடி சிலை ரூ. 6 ஆயிரத்திற்கும், 10 அடி சிலை ரூ. 20 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
இதுகுறித்து சிலை தயாரிப்பாளர்கள் கூறுகையில்:-
இந்த ஆண்டு அதிகளவில் விநாயகர் சிலைகளுக்கு முன்பதிவு செய்திருப்பதால் தொழிலாளருக்கு வேலை வாய்ப்பும், கூடுதலான வருமானம் கிடைத்துள்ளது என்றனர்.
- மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.
- 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், கடினல்வ யல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சிவகுரு நாதன், ஆயக்கா ரன்புலம் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட், தகட்டூர் ராமகோவிந்த ன்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளி ஆசிரியர் சுப்பிரம ணியன் ஆகிய 3 பேருக்கும் இந்த ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது கிடைத்துள்ளது.
கடினல்வயல் உதவி தலைமையாசிரியர் சிவகுருநாதன். இவர் 34 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் 1989-ம் ஆண்டு பணியில் சேர்ந்து தமிழ் ஆசிரியராக பணி யாற்றி வருகிறார். இவர் மாநில, மாவட்ட தமிழாசிரி யர்களுக்கு பயிற்சி அளிக்கும் கருத்தாள ராக உள்ளார்.
ஆயக்காரன்புலம் பெண்கள் மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா ஜெனட். இவர் 18 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவர் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
தகட்டூர் ராமகோவி ந்தன்காடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சுப்பிரமணியன். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பள்ளி மூடப்பட்டது. இந்த பள்ளியை மீண்டும் ஒரு மாணவனோடு தொடங்கி தற்போது 80-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் படிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தவர் சுப்பிர மணியன். இவர் 20-க்கும் மேற்பட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.விருது பெறும் 3 ஆசிரியர்களையும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தி னர், பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். விருது பெறும் ஆசிரியர்கள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.
- கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சித்தி விநாயகா் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கடந்த 1-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது.
தொடர்ந்து, கடந்த 2-ந் தேதி காலை காப்பு கட்டுதலும், மாலை முதற்கால பூஜைகள் நடந்தது. நேற்று 2-ம் கால யாகசாலை பூஜை நடந்து, பின்னா் புனிதநீா் அடங்கிய கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.
- கனகவல்லி அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
- எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியது.
வேதாரண்யம்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த பழங்கள்ளிமேடு பகுதியை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவரது மனைவி கனகவல்லி (வயது 57). இவர் அப்பகுதியில் உள்ள அடப்பாற்றில் இறால் மற்றும் மீன் பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று கனகவல்லி மற்றும் அதே பகுதியை சேர்ந்த 5 பேர் ஆற்றில் இறங்கி இறால் மற்றும் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த பெரிய திருக்கை மீனின் முள் கனகவல்லி மீது குத்தியது.
இதில் அதிகப்படியான ரத்தம் வெளியேறியதில் அவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இறந்த கனகவல்லிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






