என் மலர்
நாகப்பட்டினம்
- பூர்ணாஹூதி நடைபெற்று, யாகசாலை பூஜைகள் நிறைவடைந்தது.
- குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணி தலையாமழை கீராந்தியில் சிங்கமகா காளியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நேற்று நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அனுஞக்ஞை கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கோபூஜை, தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
அதனைத் தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பூர்ணாஹூதி தீபாரத னைகள் நடைப்பெற்றது.
தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜை முடிவுற்று மஹா பூர்ணாஹூதி நடைபெற்று யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து மங்கல வாத்தியங்களில் மல்லாரி ராகம் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
சிவாச்சாரியார் கடங்கங்களை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க ஆலய கலசத்தை கருட பகவான் சுற்றிவர சிங்கமகா காளியம்மன் ஆலய கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைப்பெற்றது.
பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.
தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு கலச நீர் கொண்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடை பெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடமுழுக்கை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.
- ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
- ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
பள்ளிகளில் எண்ணும், எழுத்தும் திட்டத்தின் படி ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணிகளை, ஆசிரியர் பயிற்சி மாணவர்களை கொண்டு ஆய்வு செய்யும் கல்வி துறையின் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார தலைவர் சிவக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் வட்டார பொருளாளர் வீரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், வட்டார துணை தலைவர் சங்கரன், வட்டார துணை செயலாளர் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமேகலை, வட்டார செயற்குழு உறுப்பினர் செல்வி உள்ளிட்ட வட்டார, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- பேராலய ஆண்டு பெருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பேராலய கீழ்கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
வேளாங்கண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது.
இந்த பேராலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.
முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து நேற்று புனித ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பேராலய கீழ் கோவிலில் பிறந்தநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் கொடிமரத்தை புனிதம் செய்து கொடி இறக்கப்பட்டு ஆலயத்திற்கு உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேராலய நிர்வாகம் சார்பில் காவல்துறை, தீயணைப்புத் துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- உலக நன்மைக்காக மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
- இன்று காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்க ண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.
இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர்த்திருவிழா கொட்டும் மழையில் நேற்று நடைபெற்றது.
முன்னதாக தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டுபிராத்தனை உள்ளிட்ட நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயார் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், வேளாங்க்ண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது முகம்மதுஹாஜி உசேன் சாகிப், நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான்சா கிப், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வர் கோயில் தலைமை குருக்கள் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக்காக மும்மத பிரார்த்ததை நடைபெற்றது
பின்னர் தேர் புனிதம் செய்யப்பட்டு தேர் கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு உத்திரியமாதாதெரு, கடைவீதி வழியாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார் ,சூசையப்பர் , உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகிய ஏழு தேர்களில் தனியாக காட்சியளித்தார்.
இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா இன்று காலை 6 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
- கிருஷ்ணா, கோவிந்தா என்ற பக்தி கோஷங்கள் முழங்க தேர் வடம் பிடிக்கப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகப்பட்டினம்:
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாகப்பட்டினம் நவநீத கிருஷ்ணர் கோவிலில் தேர்ரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரினில் அலங்கரித்து வைக்கப்பட்ட ருக்மணி சத்தியபாமா சமேத நவநீதகிருஷ்ணரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
அப்போது மேள மேளம் முழங்க பக்தர்கள் கிருஷ்ணா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் தேரினை இழுத்துவர, தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பின்னர் கோவிலை சென்றடைந்தது.
நவநீதகிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற திருத்தேர்ரோட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- அறிவியல் செயல்திட்டம், சிறுதானிய பயன்பாடு குறித்து கண்காட்சி வைத்திருந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரணியம் சி க .சு அரசு மேல்நிலைப் பள்ளியில் வேதாரண்யம் ஒன்றிய அளவிலான வானவில் மன்றம்அறிவியல் கண்காட்சி நடைபெற்றது அறிவியல் கண்காட்சியை பள்ளி தலைமை ஆசிரியர் அன்பழகன் துவக்கி வைத்தார்.
வேதாரண்யம் ஒன்றியத்தில் உள்ள பன்னாள் ஆயக்காரன்புலம்பஞ்சநதிக்குளம் தகட்டூர் புஷ்பவனம் கோடியக்காடுஉள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் நடுநிலைப்பள்ளி சேர்ந்தநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாணவர்கள் அறிவியல் கண்காட்சி அறிவியல் நாடகம் அறிவியல் செயல் திட்டம் சிறுதானிய பயன்பாடு குறித்துகண்காட்சி வைத்திருந்தனர் நிகழ்ச்சியின் நடுவர்களாக அறிவியல் ஆசிரியர் சிவகுமார் செந்தில்குமார் ராஜ்குமார் ரவி ஆகியோர் மாணவ மாணவிகளின் படைப்புகளை தேர்வு செய்து மாவட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
- அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரி தபால் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டம் நடைப்பெற்றது.
போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேணு தலைமை தாங்கினார்.
கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு,முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் பொன்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்,வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும்,அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதில் மாவட்ட குழு உறுப்பினர் லெனின், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதி, பாலு, காரல்மார்க்ஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- வேளாங்கண்ணியில் ஆண்டு பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
- பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கன்னியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம், கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்கு உரியது.
இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.
விழாவின் முக்கிய பெருவிழாவான அன்னையின் பிறந்தநாள் நடைபெறுவதை முன்னிட்டு, இன்று இரவு பெரிய சப்பர பவனி எனப்படும், பெரியதேர்த்திருவிழா நடைபெறுகின்றது.
இதற்காக பல்லாயி ரக்கணக்கான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதியில் வேளாங்கன்னியில் இருந்து குவிந்துள்ளனர்.
வேளாங்கண்ணியில் பல்வேறு மொழிபேசும் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு பிரார்த்தனைகள், மற்றும் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, தினமும் சிறிய சப்பர பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் ஆயிரக்கணக்கான போலீசார் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் பேராலயம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன நாளை மாதாவின் பிறந்தநாள் என்பதால் நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்ப ட்டுள்ளது.
நாளை காலை 6 மணிக்கு மாதாவின் பிறந்தநாளை முன்னிட்டு விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் மற்றும் பரிபாலகர் சகாயராஜ்தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து மாலை கொடி இறக்கத்துடன் திருவிழா முடிவடைகிறது என வேளாங்கண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் தெரிவித்தார்.
- பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி முதலியார் குத்தகை ராதா-ருக்மணி சமேத கிருஷ்ணா ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் ஆலய பத்தாம் ஆண்டு சுதர்சன ஹோம கோகுலாஷ்டமி விழா நடைபெற்றது
முன்னதாக பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து பின்பு சுதர்சன யாகம் நடைபெற்றது.
பின்பு கேரளாசெண்டை மேளத்துடன் கிருஷ்ணர் கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
- ஆயக்காரன்புலம் பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா நடைபெற்றது.
- மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி பகுதியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆவணி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு அர்ச்சனை செய்தல், மாவிளக்கு போடுதல், பால்குடம், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.
தொடர்ந்து, அம்மனுக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று.
பின்னர், வண்ண மலர்களால் அலங்கரி க்கப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது.
இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- கடத்தல் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
- போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு இயக்க தொடக்க விழா நடைபெற்றது. தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியில் போதை எதிர்ப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஏற்றனர்.
அதனைத் தொடர்ந்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் பேசுகையில்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறையின் சார்பாக போதைப் பொருளுக்கு எதிராக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கள்ள சாராய விற்பனை மற்றும் கடத்தல் குற்றத்தில் ஈடுபட்ட 2000 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும்,15 நபர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்தும், 300 கிலோ மேல் கஞ்சா பறிமுதல் செய்தும், மற்றும் குட்கா பான் மசாலா விற்பனை செய்தவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. மேலும் நாகை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரிகளில் காவல்துறையின் சார்பாக போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இவை அனைத்தும் போதைப் பொருளுக்கு எதிராக காவல்துறையின் சார்பாக நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சியாகும் ஆனால் இது போதாது மாணவராகிய ஒவ்வொருவரும் போதைப் பொருளை தவிர்த்தல் வேண்டும், எனக்கும் வேண்டாம் நமக்கும் வேண்டாம் என்று சொல்லி ற்கேட்ப அனைவரும் போதை பொருளை விட்டு ஒழித்தல் வேண்டும். மாணவராகிய நீங்கள் உடற்ப யிற்சியை மேற்கொண்டு உடலை வலுவாக்க வேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் டாக்டர், இன்ஜினியர் போன்ற பெரிய பதவிகளுக்கு அனைவரும் செல்ல வேண்டும்.
போதைப் பொருட்களை தவிர்ப்போம் சிறப்பான வாழ்க்கை அமைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்றது.
- 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த நரிமணத்தில் உள்ள பூர்ணபுஷ்கலா அழகிய ஐயனார், சந்திரமதி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, கடந்த 1-ந் தேதி காலை அனுக்ஞை, விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, தன பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை மஹாலட்சுமி ஹோமம், தீப லட்சுமி பூஜை ஆகியவை நடைபெற்றது.
தொடர்ந்து, 2-ந் தேதி இரவு கடஸ்தாபனம் நடைபெற்று, முதற்கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, 3-ந் தேதி 2,3-ம் கால யாகசாலை பூஜையும், 4-ந் தேதி 4-ம் கால யாகசாலை பூஜைகள், கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சந்திரமதி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராமமக்கள் செய்திருந்தனர்.






