என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • நந்திபகவானுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி கிராமத்தில் உள்ள ஞானாம்பிகை உடனுறைஸ்ரீ காளகஸ்தீஸ்வரர் ஆலயத்தில் ஆவணி மாத பிரதோஷச விழாவை முன்னிட்டு மற்றும் நந்திபகவானுக்கு பால், பன்னீர்,சந்தனம் ,பஞ்சாமிர்தம், இளநீர், தேன், தயிர் உள்ளிட்ட பல்வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டது.

    • வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி.
    • சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஊராட்சி துணை தலைவர் வெற்றிவேல், ஊராட்சி செயலர் ரெங்கராசு, டாக்டர் ஆனந்தன் சுகதார ஆய்வாளர் அருளானந்தம், ஒன்றிய கவுன்சியர் கஸ்தூரி குஞ்சையன் உள்ளிட்ட சுகாதார துறையினர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி புறப்பாடு நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்வரர் சுவாமி கோவி லில் பிரதோஷ விழாவை முன்னிட்டு சாமிக்கும், நந்தி கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் வண்ணமலர்களால் சுவாமியும், நந்திகேஸ்வரரும் அலங்கரிக்கப்பட்டு ஒரே நேரத்தில் தீபாராதனை நடைபெற்றது.

    பிரதோஷ நாயனார் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவில் வெளிப்பிரகாரத்தில் புறப்பாடு நடைபெற்றது. இதைப்போல தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், கோடியக்காடு குழவர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலு வேதபதி அமராபதீஸ்வரர் கோவில், வெள்ளப்பள்ளம் சிவன் கோவில்,

    புஷ்பவனம் சுகந்தனே ஸ்வரர் கோவில், ஆயக்காரன்புலம் எழுமேஸ்வரரமுடையர் கோவில், அகரம் அழகியநாதர் கோவில், கரியாப்பட்டினம் கைலாசநாதர் கோவில், வடகட்டளை சோமநாதர் கோயில் மற்றும் ருத்ரசோ மநாதர் கோவில், மறைஞா யநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    • வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண் தீ வைத்து கொண்டார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறக்கிராமம் புதுமனை தெருவை சேர்ந்தவர் முகமது அலி. இவரது மனைவி ஜெபுருஷ் நிஷா (வயது 44). இவர் உடல் நலக்குறைவால் அவதி பட்டு வந்தார். இதனால் மனவேதனை அடைந்த ஜெபுருஷ் நிஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜெபுருஷ் நிஷா வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனக்குத்தானே ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஜெபுருஷ் நிஷாவை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி உள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஜெபுருஷ் நிஷா சிகிச்சை பெற்று வந்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் திட்டச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
    • சிமெண்டு சாலை அமைக்கக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராமமக்கள் அறிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திரும ருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி கோதண்ட ராஜபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கு வயல்வெளி களுக்கு நடுவில் மயானம் உள்ளது.இந்த மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் வயல் வெளி வழியாக உடலை தூக்கிச் செல்கின்றனர்.இந்த நிலையில் மயானம் செல்வ தற்கு சிமெண்டு சாலை அமைக்க அரசு நிதி ஒதுக்கி உள்ளது.

    இந்த மயானம் செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் இருந்த தால் சாலை அமைக்கும் பணிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட கலெக்டர், தாசில்தார் ஆகியோரிடம் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்துள்ளனர்.

    ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் ஆக்கிரமிப்பில் உள்ள மயான பாதையை மீட்டு சிமெண்டு சாலை அமைக்கக்கோரி திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக வாசலில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த இடங்களின் ஆக்கிரமிப்பு களை திருமருகல் சரக வருவாய் ஆய்வாளர் ராஜேஸ்வரி,திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர் அலி,ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,கிராம நிர்வாக அலுவலர்கள் குமரேசன்,ரத்தினவேல் ஆகியோர் பொதுமக்கள் முன்னிலையில் ஆக்கிரமப்பு களை அகற்றினார்.

    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது துணி மற்றும் கயிற்றால் ராஜேஷின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார்.
    • நாகை நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த காமேஸ்வரம் மீனவர் காலனியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). மாற்றுத்திறனாளி. இவர் மனைவி செல்வி மற்றும் குழந்தைகளுடன் கூரை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் செல்வி வழக்கம்போல் அவரது குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு, 100 நாள் வேலைக்கு சென்றுன்ளார். வீட்டில் ராஜேஷ் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது ராஜேஷின் கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து போராடி தீயை அணைத்தனர்.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது துணி மற்றும் கயிற்றால் ராஜேஷின் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    பின்னர், நாகை நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்த ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷின் கை, கால்களை மர்மநபர்கள் கட்டி தீவைத்தனரா? அல்லது வேறு காரணமா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மாற்றுத்திறனாளி கை, கால்கள் கட்டப்பட்டு வீட்டோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தங்க மீனை கடலில் விட்டு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி.
    • அதிபத்த நாயனார் அதை கடலில் விட்டு இறைவனுக்கு அர்ப்பணம் செய்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகை புதிய கடற்கரையில் அதிபத்த நாயனார் தங்கமீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நாகை நம்பியார் நகரில் இருந்தவர் அதிபத்த நாயனார். சிவபெருமான் மீது தீவிர அன்பு கொண்டிருந்த அதிபத்த நாயனார், தினந்தோறும் கடலுக்கு சென்று தான் பிடிக்கும் மீன்களில் பெரிய மீனையும் மற்றும் முதல் மீனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து கடலில் விட்டு விடுவார்.

    ஒரு நாள் அதிபத்த நாயனார் வலையில் ஒரே ஒரு மீன் மட்டுமே சிக்கியது. அப்போதும் அவர் மனம் தளராமல், பிடிபட்ட ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களிலும் அவரது வலையில் ஒரே ஒரு மீன்மட்டுமே சிக்கியது. அப்போதும் அதிபத்தர் கிடைத்த ஒரே ஒரு மீனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணித்து வந்தார்.

    இதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. அவரது பக்தியை சோதிக்க விரும்பிய சிவபெருமான் ஒரு நாள் அதிபத்த நாயனாரின் வலையில் தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை சிக்க செய்தார். வலையில் சிக்கிய விலை மதிப்பற்ற தங்கத்தாலும், வைரத்தாலும் செய்யப்பட்ட அதிசய மீன்களை அதிபத்த நாயனார் எந்தவித தயக்கமும் இன்றி சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார்.

    அவரது அன்பில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி சகிதமாக ரிஷப வாகனத்தில் அதிபத்தருக்கு காட்சியளித்தார் என்பது வரலாறு. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நாகை நீலாயதாட்சியம்மன், காயாரோகண சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

    நீலாயதாட்சியம்மன் கோவிலில் இருந்து சாமி புறப்பட்டு கடற்கரைக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் குடமுழுக்கு பணிகள் நடப்பதால் ஊர்வலம்நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை நம்பியார் நகர் புதியஒளி மாரியம்மன் கோவில் மற்றும் அதிபத்த நாயனார் வணங்கிய அமுதீசர் கோவில்களில் இருந்தும், ஆரிய நாட்டுத்தெரு பஞ்சாயத்தார்களும் சீர்வரிசைகளை ஊர்வலமாக புதிய கடற்கரை நோக்கி எடுத்து வந்தனர்.

    பின்னர் புதிய கடற்கரையில் சீர்வரிசை தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமரேசன், செயல் அலுவலர்கள் தனலட்சுமி, பூமிநாதன், முருகன், சண்முகராஜன், ஆய்வாளர்கள் ராமதாஸ், சதீஸ்குமார் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் நாகை புதிய கடற்கரை நேற்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

    • இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும்.
    • போலீசார்- பா.ஜனதா.வினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, சனாத னத்தை ஒழிப்போம் என்று சொல்லி இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி யதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், மாநாட்டில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தியும் செப்டம்பர் 11-ந்தேதி தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை அலுவ லகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மாநில தலைவர் அண்ணா மலை அறிவித்திருந்தார்.

    அதன்படி நாகையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன்பு நேற்று பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் ஒன்று கூடினர்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    போலீசார் அனுமதி மறுத்து தடைகளை ஏற்படுத்தி தடுத்ததால் போலீசார் பாஜக வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசாரின் தடுப்புகளை உடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.

    • 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலை அடுத்த ஆவராணி கிராமத்தில் பழமை வாய்ந்த அலங்காரவள்ளி சமேத அனந்தபெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக் கோவிலில் 19 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 8ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, வாஸ்து சாந்தியுடன் முதல்கால பூஜையுடன் பூர்ணாஹூதி நடைப்பெற்றது.

    பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று மகா பூர்ணாஹூதி நடை பெற்றது.

    தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க கடம்புறப்பாடு நடைபெற்றது.

    பட்டாச்சாரி யார்கள் கடத்தை சுமந்து வந்து வேத மந்திரங்கள் முழங்க கோவில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.

    பின்னர் புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பெருமா ளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதணை காண்பிக்க ப்பட்டது.

    இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    • 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தில் உள்ள பழமைவாய்ந்த ஞானாம்பிகை உடனுறை காளகஸ்தீஸ்வரர் கோவிலில் (மேற்கு பார்த்த சிவன்) கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    முன்னதாக கடந்த 8-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது.

    தொடர்ந்து, நேற்று காலை 4-ம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து, மேளதாளங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்கள் கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சிவாச்சாரி யார்கள் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெ ற்றது.

    நிகழ்ச்சியில் திருப்பணி குழு தலைவர் ராஜேந்திரன், அகரம் மெட்ரிக் பள்ளி தாளாளர் விவேக் வெங்கட்ராமன், தொழி லதிபர் பிரபு, கோவில் நிர்வாகி விஜயராகவன், கடின ல்வயல் பங்குதந்தை நித்திய சகாயராஜ், தோப்புதுறை ஜமாத் மன்ற தலைவர் ஷாபி, முன்னாள் ஜமாத் மன்ற தலைவர் ஜபருல்லாகான் மற்றும் ஜமாத் மன்ற நிர்வாகிகள், கருப்ப ம்புலம் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு வீதிஉலா நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ஸ்ரீ மழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் ஆவணி பெருவிழா கடந்த 3 ம் தேதி காப்புகட்டி பூச்சொரிதலுடன் துவங்கியது.அதனைத் தொடர்ந்து கடந்த 8ம் தேதி அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்று அதனை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது.

    30அடி உயரமுள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற 500க்கும் மேற்பட்ட பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து, தூக்க நேர்ச்சை வழிபாடு செய்தனர்.

    முன்னதாக அம்மனுக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், திரவிய 14 வகையான திரவிய பொடிகள் கொண்டு சிறப்பு அபிஷேகமும் தொடர்ந்து அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது .

    தொடர்ந்து சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் வீதியுலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தார்.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    • தங்க மூலம் பூசப்பட்ட தகடு சிறப்பு தீபாராதனை செய்து பதிக்கப்பட்டது.
    • சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குபொய்கைநல்லூரில், போகரின் ஆசி பெற்ற 18 சித்தர்களில் முதன்மை சித்தரான கோரக்கர் சித்தர் கோவில் அமைந்துள்ளது.

    ஆன்மீகத்தையும், சித்த மருத்துவத்தையும் உலகுக்கு அறியச் செய்த கோரக்க சித்தர் ஜீவ சமாதி அடைந்த பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பரணி விழா மற்றும் ஒவ்வொரு பௌர்ணமி தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் இக்கோவிலின் மூலஸ்தான கோபுரத்திற்கு தங்கமுலாம் பூசப்பட்ட தகடு பதிக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரால் உருவாக்கப்பட்ட தங்க மூலம் பூசப்பட்ட தகடு சிறப்பு தீபாராதனை செய்து பதிக்கப்பட்டது.

    இதன் கல்வெட்டினை முன்னாள் வேளாண்துறை அமைச்சரும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்த ம்திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பளபளவென மின்னிய கோரக்க சித்தர் கோயிலில் உள்ள சித்தருக்கு பால் மஞ்சள் சந்தனம் திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின்னர் சங்கொலி நாதம் முழங்க, கோவில் மணி ஒலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான சாதுக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு கோரக்கர் சித்தரை வழிபட்டு தீபம் ஏற்றி வணங்கினர்.

    ×