search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Homes"

    • வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி.
    • சுகாதார துறையினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் ஊராட்சியில் கொசுபுழு ஒழிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் துரைசாமி தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாலமுருகன், ஊராட்சி துணை தலைவர் வெற்றிவேல், ஊராட்சி செயலர் ரெங்கராசு, டாக்டர் ஆனந்தன் சுகதார ஆய்வாளர் அருளானந்தம், ஒன்றிய கவுன்சியர் கஸ்தூரி குஞ்சையன் உள்ளிட்ட சுகாதார துறையினர் கலந்து கொண்டு வீடு வீடாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    • செல்போன் வெளிச்சத்தில் கோழி கூண்டுக்குள் பார்த்தபோது அங்கு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர் 2 பாம்புகளையும் பிடித்தார். அது மஞ்சள் சாரை, கருப்பு சாரை என தெரிய வந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக வீடுகளுக்கு படையெடுக்கும் பாம்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    நஞ்சை ஊத்துக்குளி அடுத்த கோவிந்த நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் வீட்டின் பின்புறம் கோழிகளை வளர்த்து வருகிறார்.

    இதற்காக பெரிய அளவில் கூண்டு கட்டப்பட்டிருந்தது. தினமும் இரவில் கூண்டிற்கு சென்று கோவிந்தராஜ் கோழி முட்டைகளை எடுப்பது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு கோவிந்தராஜ் வழக்கம் போல் கோழி கூண்டிற்கு சென்று முட்டையை எடுக்க சென்றார். அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது.

    கோழி கூண்டு கதவை திறந்த போது கோழி இறக்கையை அடித்துக்கொண்டு அலறியது. பின்னர் சிறிது நேரத்தில் ரத்தம் வந்து இறந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் செல்போன் வெளிச்சத்தில் கோழி கூண்டுக்குள் பார்த்தபோது அங்கு பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோழி கூண்டுக்குள் புகுந்த பாம்பு முட்டையை உடைத்து, கோழியையும் கடித்து கொன்று உள்ளது.

    இதுகுறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கோவிந்தராஜ் வீட்டுக்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்க முயன்றார்.

    அது 6 அடி நீளம் உள்ள கோதுமை நாகம் என தெரிய வந்தது. பின்னர் பாம்பை அவர் லாபகரமாக பிடித்து அதை வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

    இதேப்போல் ஈரோடு கொல்லம்பாளையம் அருகே இரும்பு கடை வியாபாரி ஒருவர் வீட்டில் தேங்காய் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அதன் இடையே 2 பாம்புகள் இருப்பதை கண்ட அவர் இது குறித்து யுவராஜிக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர் 2 பாம்புகளையும் பிடித்தார். அது மஞ்சள் சாரை, கருப்பு சாரை என தெரிய வந்தது.

    இது குறித்து பாம்பு பிடி வீரர் யுவராஜ் கூறியதாவது: தற்போது ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பாம்புகள் தங்கி இருக்கும் பொந்துகளில் மழை நீர் புகுந்து விடுகிறது.

    இதன் காரணமாக பாம்புகள் அங்கிருந்து வெளியேறி வீடுகளை நோக்கி படை யெடுக்க தொடங்கியுள்ளது.

    மேலும் வாய்க்கால் கரை பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் பாம்புகள் அங்கிருந்து வெளியேறி வீடுகளை நோக்கி வர தொடங்கி யுள்ளது. பொதுமக்கள் மழைக்காலம் என்பதால் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.

    வீட்டில் பழைய பொருட்களை ஒரே இடத்தில் அடுக்கி வைக்கக் கூடாது. செருப்பு ஸ்டாண்ட், மீட்டர் பாக்ஸ் போன்ற பகுதிகளை கவனமாக பராமரிக்க வேண்டும். குறிப்பாக மோட்டார் சைக்கிளை இயக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதற்குள் பாம்பு செல்ல வாய்ப்புள்ளது.

    ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த 2 வாரத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பாம்புகள் வீட்டுக்கு வந்துள்ளன. பெரும்பாலும் கொம்பேறி மூக்கன், தண்ணீர் சாரை, கட்டு விரியன், கண்ணாடி விரியன், கோதுமை நாகப் பாம்புகள் அதிக அளவில் வருகின்றன.

    மழைக்காலம் முடியும் வரை பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 1,036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதே இலக்கு.
    • மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில் வெல்ல தடுப்பூசி ஒன்றே பேராயுதம் என்பதால் வருகிற 21-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையம்ஆகியவை சேர்த்து சுமார் 1036 சிறப்பு முகாம்களில் 30,000 பேருக்கு தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு "சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெறவுள்ளது.

    எனவே மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் மற்றும் நடக்க முடியாத நபர்களுக்குவீட்டிற்கே சென்று தடுப்பூசிபோட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் விடுபட்டு போன முன்களப்பணியாளாகள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் 2வது தடுப்பூசி தவணை செலுத்திக் கொள்ளவுள்ள நபர்கள் தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். மேலும் சிறப்பினமாக 18 முதல் 59 வயதுடைய அனைவரும் 3-வது தவனை தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வீடுகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள வடதில்லை கிராமத்தில் ஏரிக்கரையில் 26 பழங்குடியின குடும்பங்களை சேர்ந்த 50 பேர் குடிசைகள் அமைத்து சுமார் 75 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகங்களுக்கு அரசு சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

    அதன்படி ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை சேர்ந்த வருவாய் அதிகாரிகள் வடதில்லை கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினரிடம் குடிசைகளை அகற்றுமாறு உத்தரவிட்டனர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்தநிலையில் வடதில்லை கிராமத்தை சேர்ந்த பழங்குடியினர் இருளர் சமுதாயம் முன்னேற்ற அறக்கட்டளை மாவட்ட தலைவர் முரளி தலைமையில் ஊத்துக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் வக்கீல்கள் வட தில்லை குமார், உதயா, வினோத், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளர் மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் பழங்குடியினர் தாசில்தார் இளங்கோவனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில், “நாங்கள் சுமார் 75 வருடங்களாக வடதில்லை கிராம எல்லையில் வசித்து வருகிறோம். திடீர் என்று வேறு இடத்துக்கு செல்லுங்கள் என்று அதிகாரிகள் உத்திரவிட்டிருப்பது எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் உள்ளது. எனவே அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறி உள்ளனர்.

    பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார்.#KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    பட்டினப்பாக்கத்தில் கடல் அலையால் வீடுகள் இழந்தவர்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து ஆறுதல் கூறினார். ‘மீனவர்களை இடம் மாற சொல்வது சரியல்ல’ என அவர் தெரிவித்தார்.

    சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ஏற்பட்டு மண் அரிப்பால் வீடுகள் சேதம் அடைந்தன. நேற்று வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடல் அலை சீற்றத்தில் சிக்கி கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.

    கடல் அலை சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் பார்வையிட்டு ஆறுதல் சொல்ல மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதிக்கு வந்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அவர் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மய்யம் விசில் செயலியில் இதுதொடர்பான செய்தியை தாமதமாகவே தெரிவித்து இருக்கிறார்கள். அதனால் தான் நாங்கள் வருவதற்கு தாமதம் ஆகிவிட்டது. நான் ஒரு நடிகனாக ஸ்டூடியோ அருகில் இருக்க ஆசைப்படுவேன்.

    விவசாயி, வயல்வெளி அருகில் வசிக்க ஆசைப்படுவார். மீனவர்கள், கடற்கரை அருகில் இருக்க தான் ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு மாற்று இடம் காஞ்சீபுரத்தில் கொடுத்தால், அவர்கள் எப்படி மீன்பிடிக்க இங்கு வருவார்கள்?.

    கடலுக்கு அருகில் இருந்தால் தான் அவர்களுக்கு வசதியாக இருக்கும். அவர்களை இடம் மாற்றுவது, தொழிலை மாற்றுவதற்கு சமம். மண் அரிப்பை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், இடம் மாற சொல்வது சரியல்ல. இதற்கென தனித்துறை இருக்கிறது. அந்த துறை இதற்கு நல்ல தீர்வு சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #KamalHaasan #MakkalNeethiMaiyam  #Tamilnews
    ×