என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆறுகளை ஆக்கிரமித்துள்ள ஆகாய தாமரை.
ஆறுகளில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை அகற்ற கோரிக்கை வேண்டும்
- மானங்கெண்டான் ஆற்றில் வெங்காயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து மறைத்துள்ளது.
- பாசனத்தை தடுக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.
வேதாரண்யம்:
திருத்துறைப்பூண்டியில் வாய்மேடு வழியாக சென்று அங்கிருந்து ஆதனூர் ஊராட்சி வரை சுமார் 19 கிமீ தூரம் வரை சென்று பின்னர் கடலில் கலக்கும் மிகப்பெரிய வடிகால் ஆறான மானங்கெரண்டான் ஆற்றிலும், முள்ளியாற்றிலும் தாணிக்கோட்டகம் சட்ரஸ் முதல் வாய்மேட்டில் இருந்து பிரியும் மானங்கெண்டான் ஆற்றிலும் பல கி.மீட்டர் தொலைவு வரையில் தண்ணீரையே காணாத முடியாதபடி வெங்காயத் தாமரைச் செடிகள் அடர்ந்து வளர்ந்து மறைத்துள்ளது.
இதேபோல மணக்காட்டான் வாய்க்கால், ராஜன்வாக்கால், பெரிய வாய்க்கால் என பல வடிகால் வாய்க்கால்களிலும் மழை வெள்ள தண்ணீர் வடிவதையும், பாசனத்தை தடுக்கும் வகையில் செடி, கொடிகள் வளர்ந்துள்ளது.
இந்நிலையில் வேதாரண்யம் பகுதியில் உள்ள வடிகால்ஆறுகளிலும், வாய்க்கால்களில் வெங்காயத் தாமரைச் செடிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவில் அடர்ந்து படர்ந்துள்ளதால் வடகிழக்கு காலத்தில் மழைநீர்வடிய முடியாமல் பெருத்த வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே பருவமழை வலுக்கும் முன்னரே ஆக்கிரமிப்புகளை அகற்றியும், ஆறு, வாய்க்கால்களில் மண்டிக்கிடக்கும் ஆகாய தாமரைகளை அகற்றி தண்ணீர் தடையின்றி செல்ல சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






