search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய தேர்பவனி
    X

    பெரிய தேர்பவனி நடந்தது.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய தேர்பவனி

    • உலக நன்மைக்காக மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
    • இன்று காலை விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்க ண்ணியில் கீழ்த்திசை நாடுகளின் லூர்து நகரம் என போற்றப்படும் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது.

    இதன் ஆண்டு நவநாள் பெருவிழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது.

    விழாவின் முக்கிய பெருவிழாவான பெரிய சப்பர பவனி எனப்படும், தேர்த்திருவிழா கொட்டும் மழையில் நேற்று நடைபெற்றது.

    முன்னதாக தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் நவநாள் திருப்பலிகள், மாதா மன்றாட்டு, கூட்டுபிராத்தனை உள்ளிட்ட நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து தஞ்சை மறைமாவட்ட ஆயார் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ், வேளாங்க்ண்ணி உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி செய்யது முகம்மதுஹாஜி உசேன் சாகிப், நாகூர் தர்கா பரம்பரை கலிபா மஸ்தான்சா கிப், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வர் கோயில் தலைமை குருக்கள் நீலகண்டன் ஆகியோர் கலந்து கொண்டு உலக நன்மைக்காக மும்மத பிரார்த்ததை நடைபெற்றது

    பின்னர் தேர் புனிதம் செய்யப்பட்டு தேர் கடற்கரைசாலை, ஆரியநாட்டுதெரு உத்திரியமாதாதெரு, கடைவீதி வழியாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் அதிதூதர், செபஸ்தியார் ,சூசையப்பர் , உத்திரிய மாதா, ஆரோக்கிய மாதா ஆகிய ஏழு தேர்களில் தனியாக காட்சியளித்தார்.

    இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழா இன்று காலை 6 மணிக்கு விண்மீன் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×